அக்டோபர் 20 ராசிபலன்

அக்டோபர் 20 ராசிபலன்

🕉️மேஷம்
அக்டோபர் 20 ராசிபலன்
ஐப்பசி 04 – செவ்வாய்

குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். திட்டமிட்ட சில காரியங்களை காலதாமதமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். தம்பதியர்களுக்கு இடையே வாக்குவாதங்கள் தோன்றி மறையலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : காலதாமதம் நேரிடும்.
கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.


🕉️ரிஷபம்
அக்டோபர் 20 ராசிபலன்
ஐப்பசி 04 – செவ்வாய்

தம்பதியர்களுக்கு இடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் உதவியினால் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வாரிசுகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.
ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.
மிருகசீரிஷம் : தனவரவுகள் மேம்படும்.


🕉️மிதுனம்
அக்டோபர் 20 ராசிபலன்
ஐப்பசி 04 – செவ்வாய்

சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : பொறுப்புகள் குறையும்.
புனர்பூசம் : இன்னல்கள் அகலும்.


🕉️கடகம்
அக்டோபர் 20 ராசிபலன்
ஐப்பசி 04 – செவ்வாய்

சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்பத்தில் பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் தொடர்பான செயல்பாடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.
ஆயில்யம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


🕉️சிம்மம்
அக்டோபர் 20 ராசிபலன்
ஐப்பசி 04 – செவ்வாய்

இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் செய்யும் முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். சகோதரர் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சிறிய தூர பயணங்களின் மூலம் மனதிற்கு புத்துணர்ச்சியும், தெளிவும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூரம் : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.


🕉️கன்னி
அக்டோபர் 20, 2020
ஐப்பசி 04 – செவ்வாய்
மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஒற்றுமை மேம்படும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் குழப்பமான மனநிலைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : தைரியம் அதிகரிக்கும்.
அஸ்தம் : ஒற்றுமை மேம்படும்.
சித்திரை : அறிவு வெளிப்படும்.


🕉️துலாம்
அக்டோபர் 20, 2020
ஐப்பசி 04 – செவ்வாய்

எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் மனதைரியமும், பக்குவமும் உண்டாகும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் ஒருவிதமான மந்தத்தன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
சித்திரை : தனவரவுகள் கிடைக்கும்.
சுவாதி : திருப்திகரமான நாள்.
விசாகம் : மந்தத்தன்மை உண்டாகும்.


🕉️விருச்சகம்
அக்டோபர் 20, 2020
ஐப்பசி 04 – செவ்வாய்

எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். நண்பர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அனுஷம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
கேட்டை : மகிழ்ச்சியான நாள்.


🕉️தனுசு
அக்டோபர் 20, 2020
ஐப்பசி 04 – செவ்வாய்

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகளின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் இலாபம் அதிகரிக்கும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : புத்துணர்ச்சியான நாள்.
உத்திராடம் : இலாபம் அதிகரிக்கும்.


🕉️மகரம்
அக்டோபர் 20, 2020
ஐப்பசி 04 – செவ்வாய்

வியாபாரம் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திட்டமிட்ட பணிகளை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். உத்தியோகத்தில் பதவி உயர்விற்கான முயற்சிகள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
திருவோணம் : உற்சாகமான நாள்.
அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.


🕉️கும்பம்
அக்டோபர் 20, 2020
ஐப்பசி 04 – செவ்வாய்

புதிய தொழில் தொடர்பான எண்ணங்களும், சிந்தனைகளும் உண்டாகும். எண்ணிய செயல்பாடுகளை பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் செய்து முடிப்பீர்கள். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : சிந்தனைகள் தோன்றும்.
சதயம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
பூரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.


🕉️மீனம்
அக்டோபர் 20, 2020
ஐப்பசி 04 – செவ்வாய்

எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் சாதகமான வாய்ப்புகளும், மகிழ்ச்சியான தருணங்களும் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.