புதுக்கருக்கழியாத அந்த மர ஆடு குதிரையை மாயனின் குடிசை வாசலில் பார்த்த நாட்டாமைக்கு வயிற்றைப் பிசைந்தது. அதைத் தன் குழந்தைக்கு வாங்குவதற்கு பணம் சேர்க்க வேண்டும் என இரண்டு மாதங்களாக இரவு உணவைத் தவிர்த்த மாயனின் நோஞ்சான் உடம்பு அவர் நெஞ்சை நெருடியது. இரண்டு நாட்கள் முன்பு ஜமீன்தாரின் பேரனின் காதுகுத்து விழாவில்...
“கெட்டி மேளம்”… “கெட்டிமேளம்”… என்பதைத் தொடர்ந்து, திருமணம் முடிந்து, நாதஸ்வர வித்வான் “ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே” வாசிக்கும் போதே, "பந்தி போட்டாச்சோ?” என்ற கேள்வி பிறந்தது. “மேடம்...