Recent online Contact

Recent online Contact – Whatsapp

வாட்ஸ் அப் பீட்டாவில் தொடர்ந்து பல அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் அவை அனைத்தும் வாட்ஸ் அப் நார்மல் செயலிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. சில சமயம் பீட்டா சோதனை நடந்தும் அதை தொடராமல் விட்ட அப்டேட்கள் உண்டு. இப்பொழுது புதிதாய் ஒரு சோதனை செய்கின்றனர். இன்று வந்துள்ள பீட்டா அப்டேட்டில் Recent online Contact என்ற ஒரு அப்டேட் தந்துள்ளார்கள். இதை பற்றி பார்ப்போம்.

Recent online Contact

பொதுவாய் வாட்ஸ் அப் மட்டுமல்ல டெலிகிராம் போன்ற செயலிகளும் நாம் ஆன்லைனில் இருக்கிறோமா இல்லையா என்பதை மறைக்க வசதி செய்தி தந்துள்ளனர். அதில் பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. சிலருக்கு மட்டும் நாம் ஆன்லைனில் இருப்பதை மறைக்கலாம். நமது அட்ரஸ் புக்கில் இல்லாதோருக்கு மட்டும் மறைக்கலாம். இப்படி பல வசதிகள் உள்ளன.

Recent online Contact
பட உதவி https://wabetainfo.com/

ஆனால் இப்பொழுது வாட்ஸ் அப் கொண்டுவர உத்தேசித்திருக்கும் இந்த வசதி, நமது ப்ரைவசியை பாதிக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளது. புதிய அரட்டையை ( chat ) துவக்கும் இந்த ஸ்க்ரீனில் இவர்கள் புதிதாய் கொண்டு வந்துள்ள பகுதி Recently Online என்ற வசதி. இந்த பகுதியில் சமீபத்தில் யார் ஆன்லைனில் இருந்தார்கள் என்று காட்டும். இதனால் என்ன உபயோகம் எனத் தெரியவில்லை.

இதன் மூலம் ஏற்கனவே இருக்கும் பிரைவசி செட்டிங்ஸ் பாதிக்குமா என இப்பொழுது தெரியவில்லை. தான் ஆன்லைனில் இருப்பதை மறைத்து வைத்திருக்கும் நபர்களையும் இது இந்த பகுதியில் காட்டுமா என இப்பொழுது சொல்வதற்கு இல்லை.

இந்த வசதி ஒரு சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வந்துள்ளது. எனவே மற்றவர்கள் காத்திருக்கவும்.

Click on the link to join our WA Channel for tech

English Version

Whatsapp has brought a new feature which will show who are all available for chat. Not exactly online, they will show the recently online contacts in the screen where you initiate new Chat. So far, we don’t know how it will affect the privacy. There are users who have hidden online status. Will this new recently online people will show them also in the list thus by breaking the privacy option already given by Whatsapp ? We need to wait and see how it is going to work.

This feature is only in Beta testing stage that too for some random users. So , one has to wait for some time to get this feature even if you are a beta tester.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.