“பாகீரதி” இந்த பெயரை கேட்டவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது புனித கங்கை நதிதான். என் அம்மாவின் பெயரும் “பாகீரதி”. அழைப்பது பாரதி என்றாலும் வைத்த பெயர் பாகீரதி என்பதே. இந்த பெயரில் ஒரு இணைய இதழை துவக்க வேண்டும் என்பது சில வருடங்களாக எனக்கு இருந்த ஒரு எண்ணம். நேரமின்மை, வேறு சில காரணங்கள் என்று தள்ளிக் கொண்டே போய் விட்டது. இப்பொழுது அம்மாவின் நினைவாகத்தான் துவங்கவேண்டும் என்று இருந்துள்ளது.
மாதம் இரு முறை வரும் இணைய இதழாக இருக்கும் இது. ஆங்கில தேதி 1 & 16 அன்று வெளி வரும். அரசியல் தவிர்த்து, இலக்கியம், கதை, கட்டுரை , மருத்துவம் , அறிவியல் மற்றும் வேறு எந்த தலைப்பிலும் எழுதலாம். ஒரே ஒரு விதிமுறைதான். முடிந்தவரை வேறு எங்கும் வெளியிடாத கட்டுரைகளை / படைப்புகளை அனுப்பவும். வாட்ஸ் அப் / பேஸ்புக் பார்வேர்ட் பதிவுகளை அனுப்ப வேண்டாம். சமையல் குறிப்புகள் / வீடியோக்கள் , நீங்கள் வரைந்த ஓவியங்கள் / உங்கள் மகன் / மகளின் ஓவியங்களையும் அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் editor@bhageerathi.co.in
இந்த இதழ் தொடர்ந்து வெற்றிகரமாய் நடக்க உங்கள் ஆதரவு தேவை. கண்டிப்பாக அந்த ஆதரவு கிடைக்கும் என்ற எண்ணத்துடன்
உங்கள் நண்பன்
கார்த்திக்