ஆடி 06 ஜூலை 21 ராசி பலன்

ஆடி 06 ஜூலை 21 ராசி பலன்

*🕉️மேஷம்*

ஆடி 06 ஜூலை 21 ராசி பலன்

குடும்பத்தில் உள்ளவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.

பரணி : பொருட்சேர்க்கை உண்டாகும்.

கிருத்திகை : ஆதரவான நாள்.

🕉️ரிஷபம்*

ஆடி 06 ஜூலை 21 ராசி பலன்

நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும். கல்லூரி படிப்பிற்கான சுபவிரயங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இளைய சகோதரர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : துரிதம் வேண்டும்.

ரோகிணி : சுபவிரயங்கள் உண்டாகும்.

மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
—————————————
*🕉️மிதுனம்*

ஆடி 06 ஜூலை 21 ராசி பலன்

நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டாகும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : நன்மை உண்டாகும்.

புனர்பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
—————————————
*🕉️கடகம்*

ஆடி 06 ஜூலை 21 ராசி பலன்

விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். எந்த காரியத்திலும் அவரசமின்றி நிதானத்துடன் செயல்பட வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : நிதானத்துடன் செயல்படவும்.

பூசம் : செலவுகள் ஏற்படலாம்.

ஆயில்யம் : இலாபம் கிடைக்கும்.
—————————————
*🕉️சிம்மம்*

ஆடி 06 ஜூலை 21 ராசி பலன்

குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் அலைச்சல்கள் உண்டாகும். கலைப்பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.

பூரம் : அலைச்சல்கள் உண்டாகும்.

உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
—————————————
*🕉️கன்னி*

நிலுவையில் இருந்துவந்த வேலைகளை முடிப்பதில் துரிதம் உண்டாகும். பிள்ளைகளின் மீதான அன்பு அதிகரிக்கும். வாகனப் பயணங்களின் மூலம் இலாபம் ஏற்படும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக திட்டமிட்டு கொண்டிருந்த சில காரியங்களை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : துரிதம் உண்டாகும்.

அஸ்தம் : அன்பு அதிகரிக்கும்.

சித்திரை : காரியங்கள் நிறைவேறும்.
—————————————
*🕉️துலாம்*

பயனற்ற சிந்தனைகளால் ஒருவிதமான பதற்றத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். எண்ணிய காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : பதற்றம் உண்டாகும்.

சுவாதி : உதவிகள் கிடைக்கும்.

விசாகம் : மாற்றம் உண்டாகும்.
—————————————
*🕉️விருச்சகம்*

அந்நியர்களின் அறிமுகத்தால் தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். தலைமை பதவியில் உள்ளவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : இலாபம் உண்டாகும்.

அனுஷம் : பிரச்சனைகள் நீங்கும்.

கேட்டை : ஆதரவுகள் கிடைக்கும்.
—————————————
*🕉️தனுசு*

ஜூலை 21, 2020

மனதில் தோன்றும் தேவையற்ற குழப்பங்களால் சோர்வு அடைவீர்கள். சுரங்கப் பணியாளர்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வலது கண் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : சோர்வு உண்டாகும்.

பூராடம் : பணிச்சுமை அதிகரிக்கும்.

உத்திராடம் : பிரச்சனைகள் உண்டாகும்.
—————————————
*🕉️மகரம்*

ஜூலை 21, 2020

ஆடி 06 – செவ்வாய்

பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவான சூழல் அமையும். வர்த்தகம் சம்பந்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : ஆதரவான நாள்.

திருவோணம் : செலவுகள் ஏற்படலாம்.

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
—————————————
*🕉️கும்பம்*

ஜூலை 21, 2020

ஆடி 06 – செவ்வாய்

நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் நிதானம் வேண்டும். தனவரவில் இருந்துவந்த தடைகள் அகலும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். தொழிலில் முன்னேற்றமான சூழல் அமையும். இணையதளம் சம்பந்தமான பணிகள் நல்ல இலாபத்தைத் தரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : நிதானம் வேண்டும்.

சதயம் : பதற்றமின்றி செயல்படவும்.

பூரட்டாதி : இலாபகரமான நாள்.
—————————————
*🕉️மீனம்*

ஜூலை 21, 2020

ஆடி 06 – செவ்வாய்

புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். பணி செய்யும் இடங்களில் மேன்மை உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : தடைகள் அகலும்.

உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும்.

ரேவதி : அனுகூலமான நாள்.

சம்பத் குமார்

இன்றைய பஞ்சாங்கம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.