ஆனி 12 ஜூன் 26 – ராசி பலன்கள்

மேஷம்*

ஜூன் 26, 2020

ஆனி 12 – வெள்ளி

தொழில் துறையில் முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் திறமை மேம்படும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும்.

பரணி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கிருத்திகை : சாதகமான நாள்.
—————————————
*🕉️ரிஷபம்*

ஜூன் 26, 2020

ஆனி 12 – வெள்ளி

உயர் பதவியில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். எடுத்துச்செல்லும் பொருட்களில் கவனம் வேண்டும். தொழில் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

ரோகிணி : கவனம் வேண்டும்.

மிருகசீரிஷம் : செலவுகள் உண்டாகலாம்.
—————————————
*🕉️மிதுனம்*

ஜூன் 26, 2020

ஆனி 12 – வெள்ளி

திட்டமிடலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். மனஉறுதி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : வெற்றி கிடைக்கும்.

திருவாதிரை : உற்சாகம் பிறக்கும்.

புனர்பூசம் : சிந்தனைகள் மேலோங்கும்.
—————————————
*🕉️கடகம்*

ஜூன் 26, 2020

ஆனி 12 – வெள்ளி

நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.

பூசம் : இடையூறுகள் நீங்கும்.

ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.
—————————————
*🕉️சிம்மம்*

ஜூன் 26, 2020

ஆனி 12 – வெள்ளி

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன்களை காண்பார்கள். நிர்வாகம் தொடர்பான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மனதளவில் திருப்தியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : முன்னேற்றம் உண்டாகும்.

பூரம் : முயற்சிகள் ஈடேறும்.

உத்திரம் : திருப்தியான நாள்.
—————————————
*🕉️கன்னி*
ஜூன் 26, 2020

ஆனி 12 – வெள்ளி

உறவினர்களின் வருகையால் மனதில் மகிழ்ச்சி பிறக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். உத்தியோகம் தொடர்பான வட்டாரங்களில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : மகிழ்ச்சி பிறக்கும்.

அஸ்தம் : கவனம் வேண்டும்.

சித்திரை : மரியாதை அதிகரிக்கும்.
—————————————
*🕉️துலாம்*

ஜூன் 26, 2020

ஆனி 12 – வெள்ளி

வர்த்தகம் சம்பந்தமான வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலைகள் நீங்கும். மனதிலுள்ள கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : இலாபம் உண்டாகும்.

சுவாதி : புத்துணர்ச்சி அடைவீர்கள்.

விசாகம் : செலவுகள் உண்டாகும்.
—————————————
*🕉️விருச்சகம்*

ஜூன் 26, 2020

ஆனி 12 – வெள்ளி

சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் மற்றும் உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். சம வயதினரால் நன்மை உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : மாற்றம் உண்டாகும்.

அனுஷம் : சங்கடங்கள் தீரும்.

கேட்டை : அனுசரித்து செல்லவும்.
—————————————
*🕉️தனுசு*

ஜூன் 26, 2020

ஆனி 12 – வெள்ளி

தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் செய்யும் போது சிந்தித்து செயல்படவும். பணியில் பிறரின் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடலாம். கலை சம்பந்தமான அறிவால் முன்னேற்றமான சூழல் அமையும். சபைகளில் எதிர்பார்த்த ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : முன்னேற்றம் ஏற்படும்.

பூராடம் : சிந்தித்து செயல்படவும்.

உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
—————————————
*🕉️மகரம்*

ஜூன் 26, 2020

ஆனி 12 – வெள்ளி

எதிர்பார்த்திருந்த ஒப்பந்தங்கள் கிடைக்க காலதாமதமாகும். பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் உண்டாகலாம். பிடிவாத குணத்தை தவிர்த்து சூழ்நிலைக்கு தகுந்தவாறு நடந்து கொள்ளவும். இனம் புரியாத கவலைகள் மற்றும் பய உணர்வினால் சோர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : ஒப்பந்தங்கள் காலதாமதமாகும்.

திருவோணம் : அனுசரித்து செல்லவும்.

அவிட்டம் : சோர்வு உண்டாகும்.
—————————————
*🕉️கும்பம்*

ஜூன் 26, 2020

ஆனி 12 – வெள்ளி

பணியில் உயர்வான பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். செய்யும் செயல்களில் வேகம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நண்பர்களினால் ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சதயம் : பிரச்சனைகள் குறையும்.

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
—————————————
*🕉️மீனம்*

ஜூன் 26, 2020

ஆனி 12 – வெள்ளி

மனதில் எதைப்பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். கமிஷன் அடிப்படையிலான தொழிலில் இலாபம் அதிகரிக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். சந்தேக உணர்வினால் நண்பர்களிடம் மனக்கசப்புகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

பூரட்டாதி : சிந்தனைகள் மேலோங்கும்.

உத்திரட்டாதி : வெற்றி உண்டாகும்.

ரேவதி : மனக்கசப்புகள் நேரிடலாம்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.