இன்றைய ராசிபலன் அக்டோபர் 03

இன்றைய ராசிபலன் அக்டோபர் 03
🕉️மேஷம்
அக்டோபர் 03, 2020
புரட்டாசி 17 – சனி

வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை அதிகரிக்கும். சில பயணங்களின் மூலம் மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பொருளாதாரம் தொடர்பான சில நெருக்கடிகள் ஏற்படலாம். ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும். நிதானத்துடன் செயல்படவும். திட்டமிட்ட காரியங்கள் சில தடைகளுக்கு பின்பு ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : ஒற்றுமை அதிகரிக்கும்.
பரணி : நெருக்கடிகள் ஏற்படலாம்.
கிருத்திகை : பதற்றம் உண்டாகும்.


🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் அக்டோபர் 03
புரட்டாசி 17 – சனி

கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். பணியில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உடல் நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : உறவு மேம்படும்.
ரோகிணி : மாற்றங்கள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : இலாபம் கிடைக்கும்.


🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் அக்டோபர் 03
புரட்டாசி 17 – சனி

கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். பங்காளிகளுடன் இருந்துவந்த வழக்கு விவகாரங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். திடீர் யோகத்தால் தனவரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
திருவாதிரை : வாய்ப்புகள் உண்டாகும்.
புனர்பூசம் : தனவரவுகள் கிடைக்கும்.


🕉️கடகம்
இன்றைய ராசிபலன் அக்டோபர் 03
புரட்டாசி 17 – சனி

சுயதொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வேளாண்மை சம்பந்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : மேன்மையான நாள்.
பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


🕉️சிம்மம்
இன்றைய ராசிபலன் அக்டோபர் 03
புரட்டாசி 17 – சனி

பொதுக்கூட்ட பேச்சுக்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கெளரவ பதவிகளால் கீர்த்தி உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : கீர்த்தி உண்டாகும்.
உத்திரம் : ஆசைகள் நிறைவேறும்.


🕉️கன்னி
இன்றைய ராசிபலன் அக்டோபர் 03
புரட்டாசி 17 – சனி

பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். செய்யும் செயல்பாடுகளினால் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் சில மனவருத்தங்கள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : புரிதல் உண்டாகும்.
சித்திரை : மனவருத்தங்கள் நேரிடலாம்.


🕉️துலாம்
அக்டோபர் 03, 2020
புரட்டாசி 17 – சனி

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத பரிசுகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். திருமண வரன்கள் கைகூடும். பதவி உயர்விற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : கலகலப்பான நாள்.
சுவாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
விசாகம் : உயர்வான நாள்.


🕉️விருச்சகம்
அக்டோபர் 03, 2020
புரட்டாசி 17 – சனி

திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். சந்தேக எண்ணங்களால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். கடன் பிரச்சனைகள் குறையும். புத்திரர்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். மனதில் இனம்புரியாத எண்ணங்களால் சோர்வு ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
விசாகம் : அங்கீகாரம் கிடைக்கும்.
அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.
கேட்டை : சோர்வு உண்டாகும்.


🕉️தனுசு

அக்டோபர் 03, 2020
புரட்டாசி 17 – சனி

புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வர்த்தகம் சம்பந்தமான பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூராடம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
உத்திராடம் : அனுபவம் உண்டாகும்.


🕉️மகரம்
அக்டோபர் 03, 2020
புரட்டாசி 17 – சனி

மனைகளில் வீடு கட்டும் பணிகளை தொடங்குவீர்கள். வாகனப் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பொருள் வரவால் சேமிப்புகள் உயரும். பணியில் மேன்மைக்கான செயல்களை செய்வீர்கள். சுற்றுலா செல்வதற்காக திட்டமிடுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவோணம் : சேமிப்புகள் உயரும்.
அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.


🕉️கும்பம்
அக்டோபர் 03, 2020
புரட்டாசி 17 – சனி

உயர் அதிகாரிகளின் மூலம் பாராட்டப்படுவீர்கள். மனதில் எண்ணிய செயல்திட்டங்களை நிறைவேற்ற முயற்சிகளை செய்வீர்கள். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவினால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : முயற்சிகள் மேம்படும்.
சதயம் : சிந்தனைகள் மேலோங்கும்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.


🕉️மீனம்
அக்டோபர் 03, 2020
புரட்டாசி 17 – சனி

நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்படும். வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களால் அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த சண்டை சச்சரவுகள் குறைந்து சுமூகமான நிலை உண்டாகும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : மாற்றங்கள் பிறக்கும்.
உத்திரட்டாதி : அனுகூலம் ஏற்படும்.
ரேவதி : புத்துணர்ச்சி உண்டாகும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.