மேஷம்*
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 31
ஆவணி 15 – திங்கள்
உறவுகள் பற்றிய புரிதலும், உதவிகளும் கிடைக்கும். புதியவற்றை கற்று கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். சொகுசு வாகன பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடல் பயிற்சி மற்றும் உடல்நல மேம்பாட்டிற்கான சிந்தனைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : ஆர்வம் அதிகரிக்கும்.
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 31
ஆவணி 15 – திங்கள்
சமூக பணிகள் தொடர்பான செயல்பாடுகளும், முயற்சிகளும் அதிகரிக்கும். தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : முயற்சிகள் அதிகரிக்கும்.
ரோகிணி : தெளிவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : மனம் மகிழ்வீர்கள்.
🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 31
ஆவணி 15 – திங்கள்
குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்ல வேண்டும். கணவன், மனைவிக்கிடையே விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கலாம். கடன் சார்ந்த செயல்பாடுகளின் மூலம் மனவருத்தங்கள் நேரிடலாம். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மனதில் தெளிவும், நம்பிக்கையும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
🕉️கடகம்
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 31
ஆவணி 15 – திங்கள்
சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வாழ்க்கை துணையிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வமும், குதூகலமும் ஏற்படும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : எண்ணங்கள் நிறைவேறும்.
பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
ஆயில்யம் : புத்துணர்ச்சியான நாள்.
🕉️சிம்மம்
ஆகஸ்ட் 31, 2020
ஆவணி 15 – திங்கள்
சகோதரியின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த மனவருத்தங்கள் அகலும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பயணங்களின் போது உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் ஏற்பட்டு மறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : மனவருத்தங்கள் அகலும்.
பூரம் : மாற்றமான நாள்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
🕉️கன்னி
ஆகஸ்ட் 31, 2020
ஆவணி 15 – திங்கள்
இறைவழிபாடுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சுபகாரியங்களை முன்னின்று செய்வதற்கான சூழ்நிலைகள் நேரிடும். அஜீரணம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், பொறுப்புகளும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : முன்னுரிமை கிடைக்கும்.
அஸ்தம் : ஆரோக்கியம் மேம்படும்.
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
🕉️துலாம்
ஆகஸ்ட் 31, 2020
ஆவணி 15 – திங்கள்
மனை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் தொழிலில் ஆதாயம் உண்டாகும். நீர்நிலைகள் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் அரசு தொடர்பான உதவிகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். விழாக்களை முன்னின்று செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : ஆதாயமான நாள்.
சுவாதி : முன்னேற்றம் ஏற்படும்.
விசாகம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
🕉️விருச்சகம்
ஆகஸ்ட் 31, 2020
ஆவணி 15 – திங்கள்
கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு புதிய அறிமுகத்தின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். பத்திரிக்கை சார்ந்த துறையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். பணியாட்களுடன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : மாற்றங்கள் ஏற்படும்.
🕉️தனுசு
ஆகஸ்ட் 31, 2020
ஆவணி 15 – திங்கள்
கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் இலாபம் உண்டாகும். பத்திரங்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொருள் வரவு மேம்படும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருக்கும் எண்ணங்களை பொறுமையுடன் வெளிப்படுத்துவதன் மூலம் காரியசித்தி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : இலாபம் உண்டாகும்.
பூராடம் : பொருள் வரவு மேம்படும்.
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
🕉️மகரம்
ஆகஸ்ட் 31, 2020
ஆவணி 15 – திங்கள்
உடல் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிலும் உண்மையுடன் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அமையும். தற்பெருமை பேசுவதை குறைத்து கொள்வதன் மூலம் நண்பர்களிடம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை அகலும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : மந்தத்தன்மை அகலும்.
🕉️கும்பம்
ஆகஸ்ட் 31, 2020
ஆவணி 15 – திங்கள்
இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த பலவிதமான கவலைகள் நீங்கும். கட்டுப்பாடற்ற செயல்பாடுகளின் மூலம் புதுவிதமான அனுபவமும், மாற்றமும் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும்.
சதயம் : கவலைகள் நீங்கும்.
பூரட்டாதி : அனுபவம் உண்டாகும்.
🕉️மீனம்
ஆகஸ்ட் 31, 2020
ஆவணி 15 – திங்கள்
பொருட்சேர்க்கை தொடர்பான திறமைகள் அதிகரிக்கும். கடினமான காரியங்களை எளிய செயல்முறைகளின் மூலம் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் தொடர்பான தொழிலில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். முன்னோர்களின் சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளில் தெளிவான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : தெளிவு கிடைக்கும்.