இன்றைய ராசிபலன் செப்டம்பர் 25

மேஷம்*
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 25

புரட்டாசி 09 – வெள்ளி

வாக்கு சாதுர்யத்தால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பும், புரிதலும் மேம்படும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மனதிற்கு திருப்தியான சூழலை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : புரிதல் மேம்படும்.
பரணி : ஆதரவான நாள்.

கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.

🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 25

புரட்டாசி 09 – வெள்ளி

புதிய முயற்சிகளில் காலதாமதமும், அலைச்சல்களும் உண்டாகும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளால் செயல்பாடுகளில் மந்தத்தன்மை ஏற்படும். இளைய உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். மனதில் தோன்றும் கருத்துக்களை இடத்திற்கு தகுந்தவாறு எடுத்துரைப்பது நன்மையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.
ரோகிணி : மந்தமான நாள்.

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 25

புரட்டாசி 09 – வெள்ளி

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். தர்க்க விவாதத்தின் மூலம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சற்று சிந்தித்து செயல்படவும். சில ரகசிய செயல்பாடுகளின் மூலம் ஆதாயமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மிருகசீரிஷம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.

புனர்பூசம் : ஆதாயமான நாள்.

🕉️கடகம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 25

புரட்டாசி 09 – வெள்ளி

சங்கீத தொழிலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். நண்பர்களின் வருகையின் மூலம் வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும். கலை நுட்பமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் உண்டாகும். சொகுசு வாகனங்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
பூசம் : கலகலப்பான நாள்.

ஆயில்யம் : ஆர்வம் உண்டாகும்.

🕉️சிம்மம்
செப்டம்பர் 25, 2020
புரட்டாசி 09 – வெள்ளி

உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீடு மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் தோன்றும். புதிய முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூரம் : வாய்ப்புகள் உண்டாகும்.

உத்திரம் : அங்கீகாரம் கிடைக்கும்.

🕉️கன்னி
செப்டம்பர் 25, 2020
புரட்டாசி 09 – வெள்ளி

மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு இலாபம் உண்டாகும். வழக்கறிஞர்கள் நுணுக்கமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். சத்தான உணவுப் பொருட்களை உண்பதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : இலாபம் உண்டாகும்.
அஸ்தம் : ஆரோக்கியம் மேம்படும்.

சித்திரை : நன்மதிப்பு அதிகரிக்கும்.

🕉️துலாம்
செப்டம்பர் 25, 2020
புரட்டாசி 09 – வெள்ளி

வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு மறையும். பொழுதுபோக்கு தொடர்பான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நினைத்த காரியங்களை சாதித்து கொள்ள முடியும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்
சித்திரை : காலதாமதம் ஏற்படும்.
சுவாதி : ஈடுபாடு அதிகரிக்கும்.

விசாகம் : நினைத்தது நிறைவேறும்.

🕉️விருச்சகம்
செப்டம்பர் 25, 2020
புரட்டாசி 09 – வெள்ளி

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வதற்கான எண்ணங்கள் மேம்படும். குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் தோன்றி மறையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : எண்ணங்கள் மேம்படும்.

கேட்டை : விவாதங்கள் மறையும்.

🕉️தனுசு
செப்டம்பர் 25, 2020
புரட்டாசி 09 – வெள்ளி

சிலருக்கு மூட்டுகள் தொடர்பான வலிகள் தோன்றி மறையும். வைராக்கியமான எண்ணங்களின் மூலம் நினைத்ததை சாதித்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை எழுதிப் பார்ப்பது நன்மையளிக்கும். தூரத்து உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பூராடம் : வைராக்கியம் மேம்படும்.

உத்திராடம் : சுபிட்சமான நாள்.

🕉️மகரம்
செப்டம்பர் 25, 2020
புரட்டாசி 09 – வெள்ளி

புத்திரர்கள் தொழில் தொடர்பான செயல்பாடுகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் மாற்றமான சிந்தனைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : மாற்றமான நாள்.

அவிட்டம் : நெருக்கம் அதிகரிக்கும்.

🕉️கும்பம்
செப்டம்பர் 25, 2020

புரட்டாசி 09 – வெள்ளி

மனதிற்கு பிடித்த ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். கற்ற கலைகளின் மூலம் மதிப்பும், அங்கீகாரமும் கிடைக்கும். தூர தேச பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளும், ஆதரவுகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அவிட்டம் : விருப்பங்கள் நிறைவேறும்.
சதயம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

🕉️மீனம்
செப்டம்பர் 25, 2020

புரட்டாசி 09 – வெள்ளி

மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில் சற்று நிதானம் வேண்டும். பத்திரிக்கை தொடர்பான துறைகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்கள் கருத்துக்களை எடுத்துரைப்பதில் பொறுமை வேண்டும். அஞ்சல் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : நிதானம் தேவை.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

ரேவதி : முன்னேற்றமான நாள்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.