இன்றைய ராசிபலன் செப்டம்பர் 3
மேஷம்*
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 3
ஆவணி 18 – வியாழன்
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். சகோதரர்களின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : அன்பு அதிகரிக்கும்.
பரணி : ஆர்வம் உண்டாகும்.
கிருத்திகை : நம்பிக்கை மேம்படும்.
—————————————
*🕉️ரிஷபம்*
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 3
ஆவணி 18 – வியாழன்
கடன் தொடர்பான பிரச்சனைகள் ஓரளவு குறையும். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி அடைவீர்கள். உத்தியோகம் தொடர்பான புதிய விஷயங்களுக்காக அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.
ரோகிணி : வெற்றிகரமான நாள்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
—————————————
*🕉️மிதுனம்*
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 3
ஆவணி 18 – வியாழன்
புதிய மாற்றங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது நம்பிக்கையை கொடுக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
திருவாதிரை : நம்பிக்கை மேம்படும்.
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
—————————————
*🕉️கடகம்*
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 3
ஆவணி 18 – வியாழன்
நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. பணிபுரியும் இடங்களில் உங்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
பூசம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.
—————————————
*🕉️சிம்மம்*
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 3
ஆவணி 18 – வியாழன்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். எண்ணிய காரியங்களில் செயல்திறன் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : மனவருத்தங்கள் குறையும்.
பூரம் : செயல்திறன் அதிகரிக்கும்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
—————————————
*🕉️கன்னி*
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 3
ஆவணி 18 – வியாழன்
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களுக்கிடையே மரியாதை உயரும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : மரியாதை உயரும்.
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————————
*🕉️துலாம்*
செப்டம்பர் 03, 2020
ஆவணி 18 – வியாழன்
உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். இனிமையான பேச்சு மற்றும் சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் எடுத்த காரியங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். சகோதரர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். அந்நியர்களின் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : இடமாற்றம் உண்டாகும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.
—————————————
*🕉️விருச்சகம்*
செப்டம்பர் 03, 2020
ஆவணி 18 – வியாழன்
பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். சொத்துச்சேர்க்கை ஏற்படும். வாகன விருத்தி உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூக சேவை புரிபவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் இலாபம் உண்டாகும். கல்வி பயில்பவர்களுக்கு தெளிவு ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : அனுகூலம் உண்டாகும்.
அனுஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கேட்டை : நற்பெயர் கிடைக்கும்.
—————————————
*🕉️தனுசு*
செப்டம்பர் 03, 2020
ஆவணி 18 – வியாழன்
இளைய சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கால்நடைகளின் மூலம் இலாபம் உண்டாகும். மனை சம்பந்தமான சுபவிரயங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : இலாபம் உண்டாகும்.
பூராடம் : சுபமான நாள்.
உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
—————————————
*🕉️மகரம்*
செப்டம்பர் 03, 2020
ஆவணி 18 – வியாழன்
அக்கம்-பக்கத்து வீட்டார்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மை அடையும். செய்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : பொருளாதாரம் மேம்படும்.
திருவோணம் : திருப்தியான நாள்.
அவிட்டம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
—————————————
*🕉️கும்பம்*
செப்டம்பர் 03, 2020
ஆவணி 18 – வியாழன்
மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். வாதத்திறமையால் பாராட்டப்படுவீர்கள். நிலுவையில் இருந்துவந்த பணவரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : பாராட்டப்படுவீர்கள்.
சதயம் : பணவரவு கிடைக்கும்.
பூரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.
—————————————
*🕉️மீனம்*
செப்டம்பர் 03, 2020
ஆவணி 18 – வியாழன்
அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
ரேவதி : ஈடுபாடு அதிகரிக்கும்.