இன்றைய ராசி பலன் ஜூலை 29 மேஷம்
ஆடி 14 – புதன்
தொழில் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் வேலையாட்களுடன் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். வெளியுலக அனுபவத்தின் மூலம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.
இன்றைய ராசி பலன் ஜூலை 29 ரிஷபம்
ஆடி 14 – புதன்
அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் புதிய தொடர்புகள் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் மேன்மையான சூழல் ஏற்படும். வர்த்தக பரிவர்த்தனை தொடர்பான செயல்பாடுகளில் முதலீடுகள் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் மனம் விட்டு பேசி மகிழ்வதற்கு தருணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
கிருத்திகை : காலதாமதங்கள் அகலும்.
ரோகிணி : மேன்மையான நாள்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
இன்றைய ராசி பலன் ஜூலை 29 மிதுனம்
ஆடி 14 – புதன்
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் கையிருப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் மற்றவர்களை பற்றி குறை கூறும் பொழுது கவனம் வேண்டும். பங்காளி உறவினர்களிடத்தில் அனுகூலமான சூழல் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அது குறித்த பெரியோர்களின் ஆலோசனைகள் மனத்தெளிவை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மிருகசீரிஷம் : கையிருப்பு அதிகரிக்கும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : அனுகூலமான நாள்.
இன்றைய ராசி பலன் ஜூலை 29 கடகம்
ஆடி 14 – புதன்
மனைவியிடத்தில் சில எதிர்காலம் குறித்த செயல்களை பேசுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் சில மாற்றங்கள் நேரிடலாம். போட்டி பந்தயங்களில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூசம் : மாற்றங்கள் நேரிடலாம்.
ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.
இன்றைய ராசி பலன் ஜூலை 29 சிம்மம்
ஆடி 14 – புதன்
கூட்டுத்தொழில் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். பார்வை சம்பந்தமான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். உடல் உழைப்பிற்கேற்ற அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கப்பெறுவீர்கள். கால்நடைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
உத்திரம் : இலாபம் அதிகரிக்கும்.
🕉️கன்னி
ஜூலை 29, 2020
ஆடி 14 – புதன்
செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். சிறு சிறு கடன்களை அடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். வயிறு தொடர்பான சில பிரச்சனைகள் குறையும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சில தடைகளுக்கு பின்பே சாதகமாக அமையும். நெருக்கமானவர்களிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் சில பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : தடைகள் அகலும்.
அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.
சித்திரை : சாதகமான நாள்.
🕉️துலாம்
ஜூலை 29, 2020
ஆடி 14 – புதன்
மனதிற்கு பிடித்த தெய்வத்தை வழிபட்டு மகிழ்வீர்கள். புதிய கட்டுரை மற்றும் இலக்கியம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். எந்தவொரு செயலிலும் புதிய கண்ணோட்டத்துடன் செயல்படுவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான செயல்களில் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
சித்திரை : மேன்மை உண்டாகும்.
சுவாதி : பாராட்டுகளை பெறுவீர்கள்.
விசாகம் : முன்னேற்றமான நாள்.
🕉️விருச்சகம்
ஜூலை 29, 2020
ஆடி 14 – புதன்
புதிய வீடு மாற்றுவது தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். படகு மற்றும் நீர் வழி தொழிலில் இருப்பவர்களுக்கு இலாபங்கள் மேம்படும். விவசாயப் பணிகளில் பாசனம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சொகுசு வாகனங்கள் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சிற்பம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சில முயற்சிகளில் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அனுஷம் : இலாபம் கிடைக்கும்.
கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.
🕉️தனுசு
ஜூலை 29, 2020
ஆடி 14 – புதன்
பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். புதிய துறை மற்றும் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். காதில் அணியும் ஆபரணங்களின் மீதான ஆர்வம் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூராடம் : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திராடம் : அனுகூலமான நாள்.
🕉️மகரம்
ஜூலை 29, 2020
ஆடி 14 – புதன்
புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அது தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். மனதில் தன்னம்பிக்கையும், உறுதியும் அதிகரிக்கும். பொருட்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் அதிகரிக்கும். வாசனை பொருட்களின் மீது புதுவித ஆர்வமும், ஈர்ப்பும் ஏற்படும். நண்பர்களின் மூலம் பொருளாதார உயர்வுக்கான சூழ்நிலைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திராடம் : வாய்ப்புகள் அமையும்.
திருவோணம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
🕉️கும்பம்
ஜூலை 29, 2020
ஆடி 14 – புதன்
சமூக செயல்பாடுகளின் மூலம் மனதில் மாற்றமும், புரிதலும் ஏற்படும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் கண்ணியத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த சில செயல்பாடுகளில் போராட்டமான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், அதன் மூலம் புதுவிதமான அனுபவமும், நன்மையும் கிடைக்கப்பெறுவீர்கள். பயணங்களின்போது உடைமைகளும், புதிய நபர்களிடத்தில் தேவையற்ற பேச்சுக்களையும் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.
சதயம் : கண்ணியத்துடன் செயல்படுவீர்கள்.
பூரட்டாதி : பேச்சுக்களை தவிர்க்கவும்.
🕉️மீனம்
ஜூலை 29, 2020
ஆடி 14 – புதன்
பெரியோர்களிடத்தில் கோபமின்றி நிதானத்துடன் செயல்பட வேண்டும். திருமணம் தொடர்பான செயல்பாடுகளில் சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பது தொடர்பான எண்ணங்களும், அதற்கான செயல்பாடுகளும் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
ரேவதி : எண்ணங்கள் மேம்படும்.