கடக ராசி

கடக ராசி(புனர்பூசம் 4 பாதம், பூசம், ஆயில்யம் முடிய)–50/100

கடந்த காலங்கள் மகிழ்ச்சியை தந்திருக்கும், சனிபகவான் உங்கள் ராசிக்கு 7ல் கண்டக சனியாக சஞ்சரிக்கிறார். இது பல சிக்கல்களை உண்டாக்கும், குடும்பத்தில் பல பிரச்சனைகளை உருவாக்கும். அதிக சவால்களை இந்த 3 ஆண்டுகள் நீங்கள் சந்திக்க நேரிடும். இருந்தாலும் கோச்சாரத்தில் மற்ற கிரஹங்கள் உங்களுக்கு நல்லபனை தரும் குரு பகவான் இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் 7,9 இடங்களில் இருந்து கொண்டு நன்மையை செய்வார் அதோடு ராகு கேது பெயர்ச்சி  செப்டம்பர் 2020 முதல் அடுத்த 19 மாதங்கள் நன்மையை தருகின்றன. உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டு விடுங்கள், பொருளாதார நிலை ஏற்ற இறக்கம் இருக்கும், சிக்கணத்தை கடைபிடியுங்கள் புதிய முயற்சிகளை யோசித்து செய்வது நல்லது. பொதுவாக இந்த மூன்றாண்டு காலம் நன்றாக இல்லை என்றாலும் கோச்சார கிரஹ நிலைகள் ஓரளவு நன்மை செய்வதால் பரவாயில்லை என்று இருப்பீர்கள்.

உடல் நலம் ஆரோக்கியம் :

சனி பகவானை விட 12ல் இந்த வருடம் செப்டம்பர் வரை சஞ்சரிக்கும் ராகு அதிக உடல் உபாதைகளை செய்வார், தோல், குடல் , கண்கள் போன்றவற்றில் வியாதியை உண்டாக்குவார், ஏற்கனவே இருந்த பிரச்சனைகள் செப்டம்பர் வரை தொடரும், பின் ஓரளவு ஆரோக்கியம் மேம்படும், குருவின் பார்வை நோயின் தாக்கத்தை குறைக்கும், பொதுவாக குடும்ப அங்கத்தினர்களில் பெற்றோர்  வகையிலும் வாழ்க்கை துணைவருடைய உடல் நிலையிலும் நோயின் தாக்கம் அதிகரிக்கும். தகுந்த மருத்துவ சிகிச்சை தியான பயிற்சி, ஆகார வகையில் கவனம் செலுத்துதல் போன்றவை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

குடும்பம் மற்றும் உறவுகள் :

7ம் வீட்டில் சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் ஊடல்கள் அதிகரிக்கும், வீண் விவாதங்கள் உண்டாகும். அனுசரித்து போவது நல்லது. செப்டம்பர் 2020வரை கட்டுப்பாடாக இருக்க வேண்டும். வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். பிள்ளைகள் மூலமும் தொந்தரவு வரலாம், மற்ற குடும்ப அங்கத்தினருடனும் பாகப்பிரிவினை போன்று இருக்கலாம். ஜனவரி 2021 முதல் மே 2021 வரையில் ஓரளவு நிவாரணம் கிடைக்கும் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். பொதுவில் மற்ற கிரஹ நிலைகளின் சஞ்சாரம் குடும்ப ஒற்றுமையை தந்தாலும் சனிபகவான் கெடுதலை செய்வதால் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. உறவுகளை அரவணைத்து செல்வது நலம் தரும். மே 2022க்கு பின் நல்ல நிலை

வேலை/உத்தியோகம்:

சனிபகவான் 7ல் சென்றாலும், 6ல் இருக்கும் குரு கேது இணைவு இன்னும் சில காலத்துக்கு கஷ்டத்தை தரும், அலுவலகத்தில் அரசியல் விளையாடும், அதிக சிரமங்களை சந்திப்பீர்கள், வேலை பளு அதிகரிக்கும். எப்படா நல்ல காலம் என நினைத்தால் ஏப்ரல்,மே,ஜூன் 2020 மற்றும்,மே 2022 முதல்டிசம்பர் 2023 வரை மிக நன்மையான காலம் வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு முன்னேறுங்கள். அலுவலகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு வேறு நல்ல வேலை போன்றவை இந்த காலத்தில்கிடைக்கும், எதிரிகள் மறைவர், இருந்தாலும் எதிலும் ஒரு கவனத்துடன் செயல்படுவது நல்லது.அதிக எதிர்பார்ப்புகளை கொள்வது நல்லதல்ல. விடாமுயற்சிக்கும் அதிகஉழைப்புக்குமான ஊதியம் நல்ல பலன் மே 2022க்கு பின்நிச்சயம்கிடைக்கும். அதுவரை பொறுமையுடன் உழைக்கவும். புதிய முயற்சிகளை யோசித்து செய்யவும்.

தொழிலதிபர்கள் :

சனிபகவான் 7ல் வந்தாலும் மற்ற கிரஹ சஞ்சாரங்கள், முக்கியமாக குரு, ராகு/கேது சஞ்சாரங்கள் ஓரளவு நன்மையை தரும், குரு சஞ்சாரம் வரும் ஏப்ரல்,மே,ஜூன் 2020 மற்றும் அடுத்த ஜூலை 2021, செப்டம்பர் 2020ல் ராகு/கேது சஞ்சாரம் நன்மைகளை வாரி வழங்கும். இருந்தாலும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைப்பது நல்லது. போட்டிகள் பொறாமைகள் எதிர்ப்புகள் அதிகம் இருக்கும். கம்பியின் மேல் நடப்பது போலிருக்கும். புதிய விஸ்தரிப்புகள் யோசித்து செய்வது தகுந்த ஆலோசனை பெற்று செய்வது நல்லது. மேலும் கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருந்தால் அரசாங்க தொந்தரவுகளிலிருந்து விடுபடலாம். சக கூட்டாளிக்குள் மனஸ்தாபம் வரலாம், தொழிலாளர்களால் பிரச்சனை வரலாம், இந்த 3 ஆண்டுகள் கவனத்துடன் கடக்க வேண்டும். எதை செய்தாலும் நன்கு ஆலோசித்து நல்லவர் ஆலோசனை பெற்று செய்வது நலம் தரும்.

மாணவர்கள்:

7ம் வீட்டு சனி பகவான் ராசியை பார்ப்பதால் மனம் தடுமாற்றம், படிப்பில் கவனச்சிதறல் ஏற்படும். கடும் முயற்சியினால் மட்டுமே படிப்பை தொடர முடியும், சோம்பல் தன்மை இருக்கும். நண்பர்கள் சேற்க்கை படிப்பை கோட்டைவிடும் நிலை இருக்கும், ஆசிரியர் பெற்றோர் அறிவுரை படி நடப்பது நலம் தரும். இருந்தாலும் ராகு கேது பெயர்ச்சி, குருவின் 7ம் இடம், 9ம் இடம் சஞ்சாரம் இருப்பதால் படிப்பில் முன்னேற்றம் இருக்கும், வெளிநாட்டு படிப்பு குருவின் சஞ்சாரத்தால் உண்டாகும். செப்டம்பர் 2020க்கு பின் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிக தியானப்பயிற்சி, இறைவணக்கம் போன்றாவை படிப்பில் சிரத்தையை உண்டாக்கும். இந்த சனிப்பெயர்ச்சி சுமார்தான்.

கலைஞர்கள்/அரசியல்வாதிகள்/விவசாயிகள் :

உங்கள் தசை புக்திகள் சாதகமாயிருந்தால் பெரிய பிரச்சனை இல்லை, இருந்தாலும் கலைஞர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் புதிய வாய்ப்புகள் அரசியல் சூழ்ச்சியால் வராமல் போகும், புகழ் பட்டம் ரசிகர்கள் ஆதரவு இதை தக்க வைத்துக்கொள்ள அதிக பாடுபட வேண்டி இருக்கும். குரு, ராகு/கேது சஞ்சாரங்கள் ஓரளவு நன்மை தரும், எதிலும் ஒரு தகுந்த ஆலோசனையை கேட்டு நடப்பது நலம் தரும். அரசியல்வாதிகள் மேலிடத்திலும் சரி,தொண்டர்களிடத்திலும் சரி மோதல்போக்கை கடைபிடிக்காமல் இருக்க வேண்டும், அதிக பணம் செலவழியும், பதவி கிடைப்பது என்பது துர்லபம். அப்படி பதவி கிடைத்தாலும் அதை தக்க வைக்க போராட வேண்டி இருக்கும், நல்ல ஆலோசகரை அருகில் வைத்து கொண்டு முயற்சிகளை தொடர்வது நல்லது. விவசாயிகள் பயிர்களால் அதிக லாபம் பெற இயலாது. கால்நடைகளால் மருத்துவ செலவு கூடும், வழக்குகளில் சாதகம் பாதகம் இரண்டும் கலந்து வரும். புதிய வழக்குகளில் சிக்க நேரும். வீட்டில் பொருளாதார ப்பிரச்சனை வரும். எதிலிலும் ஆலோசித்து முடிவு எடுப்பது நலம் தரும்.

பெண்கள் :

அனைத்து பிரிவு பெண்களும் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல் படுவது நலம் தரும். வீன் விவாதங்களை தவிர்ப்பதும், குடும்ப அங்கத்தினரிடம் வாதம் புரியாமல் இருப்பதும், உழைக்கும் மகளிர் அலுவலக அரசியலில் சிக்காமல் இருப்பதும் நலம் தரும், எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்வது நன்மையை செய்யும். இந்த சனிப்பெயர்ச்சி பெரிய நன்மைகள் எதையும் செய்யவில்லை கவனமுடன் இருப்பது நலம் தரும்.

ப்ரார்த்தனைகளும் வணங்கவேண்டிய தெய்வமும் :

கால பைரவர் வழிபாடு, சனீஸ்வர வழிபாடு, சனி காயத்ரியை சொல்வது, எல்லை தேவதைகளை வணங்குவது, அருகிலுள்ள கோயில்களில் நவக்ரஹத்தை 9 தடவை சுற்றி வருவது, நெய்தீபம் ஏற்றுவது போன்றவை செய்தல் நலம். முடிந்த அளவு அன்னதானம், மற்ற தர்மங்களை செய்வதும் நலம் தரும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.