காரடையான் நோன்பு 14.3.2020

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள்.

பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களிலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது, தலையாயது என்று கூறப்படுவது காரடையான் நோன்புதான்.


ஒரு ஸமயம் சத்யவான் என்னும் ராஜா கல்யாணமான சில வருஷங்களுக்குள் இறந்துபோக நேரிடுகிறது. அப்பொழுது தன் கணவனுடைய உயிர் இங்கேயே இருக்கும்படி செய்து, எமனுடைய ஆசீர்வாதத்தால் சென்ற உயிரை மீட்டுவந்த நினைவே, காரடையான் நோன்பு. பொதுவாக உமா மகேஸ்வரர், லக்ஷ்மிநாராயணன், என்று அம்மை பெயருடன்தான், ரிஷிகள் ஸ்வாமி பெயர்கள் வரும். இங்கே சத்யவான் சாவித்திரி என்று சத்யவான் முன்பாகவும் சாவித்திரி இரண்டவதாகவும் சொல்லப்படுகிறது. கணவனே மாதா, பிதா, பதி தெய்வம் என

எல்லா வகையிலும் கணவனுக்கு முக்யத்துவம் கொடுத்து, அவன் வாழ்வே தன் வாழ்வு என நினைத்து, கணவன் வாழ்வுக்காக, கணவனை எமன் எங்கெல்லாம் இட்டுச் சென்றானோ அங்கெல்லாம் தன் தவவலிமையால் சென்று, எத்தனையோ பல வகையான வரங்கள் தருகிறேன் என்று சொன்னாலும் ஒரு வரனிலும் விருப்பமில்லாமல், கணவன் மீண்டும் வரவேண்டும் என ஒரே வரத்தோடு கணவனை மீட்டு வந்த காரிகை சாவித்ரி. ஆகவேதான் சத்யவான் சாவித்ரி என்று சொல்வார்கள். பொதுவாக இல்லறத்தில் கணவன் மனைவி இருவருமே பொதுக் காரியங்களில் ஒத்துப்போகவேண்டியதாக இருந்தாலும் கணவனுடைய ஆபத்து காலத்தில் அவன் பிரிந்து விட்டால் என்ன ஆகுமோ என்று பயந்து போய் விடுவார்கள் பிற்காலத்தில் தனக்கு வேண்டிய பொருள்களை சேகரித்து வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். இது உலக நியதி.

இதற்கு விதிவிலக்காக பலரும் உண்டு. குந்தியின் கணவன் பாண்டு இறந்தவுடன் மாத்ரி என்ற மற்றொரு மனைவி இறந்து விடுகிறாள். அப்போது குந்திதேவி கணவனோடு உயிர்த்தியாகம்செய்யாமல், சாபத்தினால் உயிர் போவதை தடுக்க முடியாமல் போனதால் கணவன் சொல்படி ஐந்து குழந்தைகளை காப்பதில் ஈடுபட்டாள்.

மாத்ரி போல் குந்தியும் கணவனோடு உயிர்விட்டிருந்தாலும், அல்லது குந்தியின் வரபலத்தால் சூரியன் வந்தது போல் யமனை வரவழைத்து பாண்டுவின் உயிரை காப்பாற்றியிருந்தாலும், ரிஷிகளின் சாபப்படியும், மகபாராதத்தில் நடந்த தெய்வீக ஸங்கல்ப்பப் படியும், எமனால் கூட பாண்டுவின் மரணத்தை தவிர்க்க முடியாது. ஆகவேதான் அத்தனை வலிமையுள்ளவளாக இருந்தும் அவதியின் பலத்தோடு மகாபாரத நிகழ்ச்சிக்கு உறுதுணையாக பஞ்ச பாண்டவர்களை காப்பாற்றினாள். இதுபோலத்தான் காந்தாரியும் கணவன் பார்க்காததை தானும் பார்க்க மாட்டேன் என்று தன் கண்களையே கட்டிக் கொண்டு வாழ்ந்தாள். இப்படி சிலர் கணவனுக்காக வாழ்ந்தாலும் சாவித்ரி போல் விதியின் பலத்தையும் மாற்றி கணவனோடு வாழ்நாள் முழுவதும் சுமங்கலியாக வாழும் பாக்யத்தை பெற்றவள் சாவித்ரி.

ஆகவே காரடையான் நோன்பின் தத்துவம் கணவனோடு எப்பொழுதும் சுமங்கிலியாக வாழவேண்டும் என்பதுதான். ( நன்றி http://www.kamakoti.org/ )


இந்தாண்டுக்கான காரடையான் நோன்பு 14.3.2020 சனிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.

காரடையான் நோன்புக்கான பூஜை செய்யவேண்டிய நேரம் – 10-30 AM to 12.00 noon


காரடையான் நோன்புசங்கல்ப மந்திரம்

மமோபார்த்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹுர்த்தே ஆத்யப்ரம்மணஹ த்வீதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்ஷதிதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிண பார்ஷ்வே ஸகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபாவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே விகாரி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதௌ கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் சுபதிதௌ ஸ்திர வாஸர யுக்தாயாம் விசாகா நக்ஷத்ர யுக்த்தாயாம் ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்ஸ்ட்டாயாம் அஸ்யாம் பஞ்சம்யாம் சுபதிதௌ, மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம் மம பர்த்துச்ச அன்யோன்ய ப்ரீதி அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம் ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே


தியானம்

ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம்

புவனேஸ்வரீம் த்யாயாமி ஹ்ருதயே

தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்

காமாக்ஷீம் ஆவாஹயாமி.

நோன்புச்சரடு மந்திரம்

தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்

பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா


மஞ்சள் சரடு கொண்டு பூஜை செய்து அதை கழுத்தில் கட்டி கொள்வது வழக்கம். காரடையும், வெண்ணையும் கையில் வைத்துக் கொண்டு கீழ்க் கண்ட ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.

‘உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்
ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்’

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.