கும்ப ராசி (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய) :
லாபத்தில் இருக்கும் குருபகவான் , 10ல் இருக்கும் செவ்வாய் இருவரும் அதிக நன்மையை மாதம் முழுவதும் வழங்குகின்றனர். மேலும் சனிபகவான் விரயத்தில் வந்தாலும் தன் வீடாக இருப்பதால் சுப விரயங்களை தருவார். புதனும் சூரியனும் நன்மை ஏதும் செய்யவில்லை என்றாலும் கெடுதலை செய்ய மாட்டார்கள், மாத பிற்பகுதியில் 2ல் செல்லும் சுக்ரன் உச்சம் என்ற நிலையில் பண வரவை தாராளமாக்குவார், பெண்களால் அதிக நன்மை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியும், உத்தியோகத்தில்/சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பார். எதிரிகள் நீங்குவர், ஆரோக்கியம் பெருகும் அதேநேரம் குடும்ப அங்கத்தினரின் ஆரோக்கியத்தில் சிறு குறைவு சூரியனால் உண்டாகும். மற்றபடி பெற்றோர்கள், குடும்ப உறவுகள் பெரிய கஷ்டம் எதையும் எதிர்கொள்ள மாட்டார்கள், புதுவீடு, அல்லது புதிய இடம் மாற்றம் சிலருக்கு உண்டாகும். குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூரில் வசிப்பவர்கள் இந்த மாதம் குடும்பத்துடன் சேரும்படி மாற்றம் உண்டாகும். இருந்தாலும் பொதுவில் சில சங்கடங்களை கேது மற்றும் சூரியனால் மாதம் முழுவதும் சந்திக்க நேர்வதால் எதிலும் ஒரு கவனம் எச்சரிக்கையுடன் செயல்படுவது நலம் தரும். புதன் ஜென்மத்தில் வரும்போது புத்தி தடுமாற்றங்களை செய்வார், அவசரப்படுவீர்கள் கொஞ்சம் நிதானம் தேவை, நன்மை தீமை கலந்த மாதம் இது.
சந்திராஷ்டமம் : ஜனவரி 16,17