சார்வரி வருஷம் மாசி மாதம் ராசி பலன்கள்

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

சார்வரி வருஷம் மாசி மாத ராசி பலன்கள்

மகர ராசியில் இருக்கும் சூரிய பகவான்,  கும்ப ராசிக்கு வருகிற 12.02.2021 (பிப்ரவரி மாதம் 12ம் தேதி 36 நாழிகை,08விநாழிகைக்கு)  இரவு 09.04.02 மணிக்கு பிரவேசிக்கிறார். கும்பத்தில் 14.03.2021 மாலை 05.55.12 மணி வரை சஞ்சரிப்பார்.

கோச்சார கிரஹ நிலைகள்

பொதுக்குறிப்பு:

பொதுவாக செவ்வாய் ரிஷபத்தில் ராகுவுடன் சஞ்சரிக்கும் காலம் 22.02.21 முதல் கவனம் தேவை பொறுமையுடனும் வார்த்தைகளை கையாள்வதில் நிதானமும் வேண்டும். ரிஷபம், கன்னி, கும்பம் சற்று கவனம் தேவை, மற்ற படி அனைத்து ராசியினருக்கும் பரவாயில்லை என சொல்லலாம். ஜனன ஜாதகத்தில் செவ்வாய், ராகு, சூரியன் நன்றாக பலமாக இருந்தால் அல்லது இவை 3,6,11 ல் இருந்தால் இந்த மாதம் பெரிய கஷ்டம் இருக்காது.

இவை பொது பலன்கள் மட்டுமே உங்கள் ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி சரியான பலனை பெறவும்.

மேஷம் : (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம்பாதம் முடிய) :

ராசிநாதன் செவ்வாய் 22.2.21 வரை ராசியில் பின் 2ல் பெரிய நன்மை எதையும் செய்யவில்லை என்றாலும் கெடுதல் தரவில்லை, கொஞ்சம் மன சஞ்சலம் இருக்கு, சூரியன்  பூரணமாக எதிரிகளை பின்வாங்க செய்து உங்களின் புதிய முயற்சிகளை வெற்றி அடையவும், பொருளாதார முன்னேற்றத்தை அதிகரிக்கவும் செய்வதால் தேவைகள் பூர்த்தியாகும், பெரியோர்களின் ஆசி கிட்டும், அரசாங்க உதவி எதிர்பார்த்தோருக்கு நிறைவேறும். புதன் 22.02.21க்கு பின் நல்ல ஆரோக்கியம், வேலை, தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம், கல்வியில் நல்ல நிலை, மகிழ்ச்சி, வாகன யோகம், வீடு, சமூக அந்தஸ்து என்று தருகிறார். குரு 10ல் உத்தியோகம் இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, அலுவலகத்தில் வைத்திருந்த கோரிக்கை எல்லாம் நிறைவேறும், சொந்த தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர், திருமணம், புத்திரபாக்கியம் எதிர்பார்த்தோருக்கு கிட்டும், குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, சுக்ரன் 10ல் 21.02.21 வரை பின் 11ல் பணவரவு, மகிழ்ச்சி, கேளிக்கை என்று இருக்கும் திருமண முயற்சிகள் வெற்றி அடையும், அதே நேரம் பண விரயம் அதிகமாகும் வீண் வழக்கு வம்புகளில் சிக்க நேரும், குடும்பத்தில் சண்டைகள் உண்டாகும் கவனம் தேவை வார்த்தைகளில் கவனம் தேவை, சனி 10ல் ஆட்சி பார்வையால் நன்மை தருகிறார். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். நல்லபெயர் உண்டாகும் தொழிலில் ஏற்றம் இருக்கும். அரசாங்க உதவி கிடைக்கும். ராகு 2ல், கேது 8ல் குடும்பத்தில் பெற்றோர்களுடன் மனஸ்தாபம், சண்டைகள், குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம், நண்பர்களால் தொல்லை, எந்த வேலையிலும் சுணக்கம் என்று இருக்கும் 22.2.21 முதல் செவ்வாயுடன் ராகு சேர்வது மன சோர்வு, பயம், குழப்பம் என்றும் பிரயாணங்களால் அவஸ்தையும், வீண் அபவாதமும் உண்டாகும். கவனம் தேவை, பொதுவில் நன்மைகள் அதிகம் இருந்தாலும் அனைத்து பிரிவினரும் எச்சரிக்கையுடன் 22.02.21 முதல் மாதம் முடிய இருக்கவேண்டும் வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது. பணம் வருகிறதே என ஆடம்பரம் கூடாது. மனதை கட்டுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளுவது நல்லது.

சந்திராஷ்டம நாள்: அஸ்வினி – 05.03.21, பரணி – 06.03.21, கார்த்திகை 1 – 07.03.21

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : முருகன், துர்க்கை அல்லது நரசிம்மர் வணங்க வேண்டும். அருகில் உள்ள கோயிலுக்கு சென்று விளக்கேற்றவும், ஸ்லோகங்களை அல்லது இறைவனின் பெயரை உச்சரித்து கொண்டு இருக்கவும். அன்னதானம், வஸ்திரதானம், கல்வி தானம் செய்வது நன்மை தரும்.

ரிஷபம் : (கார்த்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய) :

ராசிநாதன் சுக்ரன், சனி,குரு,புதனுடன் சேர்ந்து 9ல் இருக்கிறார், பின் 21.02.21 முதல் 10ல் சூரியனுடன் சஞ்சரிக்கிறார். தர்ம கைங்கர்யங்களில் ஈடுபடுதல்  செல்வம் சேருதல், கல்வியில் வளர்ச்சி, பண விரயம் என்று செய்வார். வார்த்தைகளில் கவனம் தேவை இல்லாவிடில் வழக்கில் சிக்க நேரும். சூரியன் 10ல் வியாதிகளை குணமாக்குகிறார், மனம் தெளிவாக இருக்கும், உத்தியோகம், சொந்த தொழில் இவற்றில் முன்னேற்றம், பெரியோர்களின் ஆசிகள் கிடைத்தல், அரசாங்க உதவி, புதிய வேலைக்கு முயற்சிப்பவருக்கு வேலை கிடைக்கும், அரசாங்க வேலைகள் தாமதமாகும். செவ்வாய் 22.02.21 வரை 12ல் இருந்து விபத்து, விரயம் என்று தந்தாலும் ஓரளவு வெற்றியும் தருகிறார் 22ம் தேதிக்கு பின் ஜென்மத்தில் ராகுவுடன் மாதம் முழுவதும் கவனமாக இருத்தல் வேண்டும். சிந்தனையை குழப்பி விடுவார்கள், யோசனையில்லாமல் செய்துவிட்டு தவியாய் தவிப்பதுவும், கௌரவ பாதிப்பும் இருக்கும். வாகன விபத்துகளுக்கு வாய்ப்புகள் உண்டு பயணத்தின் போது மிகுந்த கவனம் தேவை, உடல் ஆரோக்கியமும் பாதிக்க செய்யும். இஷ்ட தெய்வத்தை கெட்டியாக பிடித்து கொண்டு நாம ஜபம் செய்வது அவசியம். புதன் 9ல் 22.02.21க்கு பின் வக்ர நிவர்த்தியாகி, 11.03.21ல் 10ம் இடம் செல்கிறார். இவர் 22.02.21க்கு பின் மாதம் முடிய பலவித நன்மைகளை செய்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி, எடுத்த செயல்களில் வெற்றி, பொருள் வரவு, எதிர்ப்புகள் குறைதல் உத்தியோகத்தில் உயர்வு என்று தருகிறார். குரு 9ல் ஓரளவு நன்மை, உத்தியோகத்தில் மாற்றம், புதிய வேலை கிடைத்தல், பொருளாதாரம் மேம்படுதல் சமூகத்தில் அந்தஸ்து உயர்தல் என இருக்கும், சனி 9ல் ஆட்சி ஓரளவு நன்மை தந்தாலும் தாயார் வழி சொந்தங்களின் பிரிவை தருவார். பார்வையால் சில தேவைகளை பூர்த்தி செய்வார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். 7ல் கேது வாழ்க்கை துணைவரின் உடல் பாதிக்கும், வைத்திய சிலவுகள் கூடும். பொதுவில் இந்த மாதம் எல்லா கிரஹங்களும் சுமாராக பலன் தரும். செவ்வாய் ராகு அதிக கெடுதலை செய்யும் கவனம் தேவை பொறுமையும் பெரியோர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆலோசனை பெற்றே எந்த செயலையும் செய்வது நன்மை தரும்.

சந்திராஷ்டம நாள்: கார்த்திகை 2,3,4 – 07.03.21, ரோஹிணி – 08.03.21, மிருகசீரிடம் 1,2 – 09.03.21

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : இஷ்ட தெய்வம் & குல தெய்வம் வழிபாடு ரொம்ப முக்கியம், கோயிலில் விளக்கேற்றுவது, தான தர்மங்களை அதிகம் செய்வது, விலங்குகள், பறவை போன்ற ஜீவராசிகளுக்கு உணவளிப்பது நன்மை தரும்

மிதுனம் : (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய):

ராசிநாதன் 8ல் வக்ரியாய் 21.02.21 வரை பின் நிவர்த்தி, 11.03.21ல் 9ம் இடம் தெய்வ அனுகூலம், ஆடை ஆபரண சேர்க்கை, தர்ம சிந்தனை, பிறருக்கு உதவி செய்தல், மகிழ்ச்சி தருகிறார். 11.3.21க்கு பின் அலைச்சல், எதிர்பாராத சங்கடம் என தருகிறார். சூரியன் 9ல் உத்தியோகத்தில், சொந்த தொழிலில் ஒரு மாற்றம் ஏற்பட்டு நன்மை உண்டாகும். பெற்றோர் உடல் ஆரோக்கியம் பாதிக்க படும், மருத்துவ செலவுகள் கூடும், விரோதிகளின் பலம் கூடும் கவனம் தேவை, 22.02.21 வரை செவ்வாய் அதிகார பதவி, நல்ல சிந்தனைகள் பொருள்வரவு, பிள்ளைகளின் கல்வியில் சிறப்பான நிலை, இல்லத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடத்தல் என்று இருந்தாலும் 22.02.21க்கு பின் 12ல் ராகுவுடன் வீண் விரயம், குழப்பம், வழக்குகளில் சிக்குதல், என்று இருக்கும் அதே நேரம் ராகு சுபம் கருதி பண விரயங்களை தரும். நோய் நொடிகளை நீக்கும். பெரிய பாதிப்புகள் இருக்காது மனதை கட்டுப்படுத்தி பெரியோர்களின் ஆலோசனை படி நடந்தால் கஷ்டம் இல்லை. சுக்ரன் 8ல் 22.02.21 வரை நோய் பாதிப்பு, வைத்திய செலவு, பிரயாணத்தினால் பாதிப்பு, உத்தியோகம் தொழிலில் முன்னேற்ற தடை என்று இருக்கும் அதன் பின் திடீர் பணவரவு, கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கும், மீடியா, புத்தகம் எழுத்து துறையில் இருப்பவருக்கும் வங்கிகள், அக்கவுண்ட்ஸ் துறைகளில் இருப்பவருக்கும் அதை தொழிலாக செய்பவருக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குரு 8ல் பெரிய நன்மை இல்லை ஆனால் அவரின் 12ம் இடம், 4ம் இட பார்வை சுப செலவுகள், திடீர் பண வரவு, வீடு யோகம், குழந்தை பாக்கியம் என்று தருகிறார். அஷ்டம சனி பெரிய பாதிப்பை தரமாட்டார் காரணம் இந்த மாதம் முழுவதும் குடும்ப ஸ்தானாதிபதி 2க்குடைய சந்திரன் நக்ஷத்திர காலில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சியை தந்து, பொருளாதாரம் பணவரவு என்று ஏற்றத்தை தருகிறார். ஜனன ஜாதகத்தில் சனி நீசம், பகை அல்லது பல குறைவு பெற்றிருந்தால் மட்டும் கொஞ்சம் அசுப பலனை தருவார் கவனம் தேவை. 6ல் கேது நோய், கடன் எதிரி தொல்லைகள் நீங்கும், செயல்களில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். தொழில் செய்வோருக்கு அரசு கடன்கள் உதவிகள் கிடைக்கும். பொதுவில் பல கிரஹங்கள் நன்மை செய்வதால் நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டம நாள்: மிருகசீரிடம் 3,4 – 09.03.21, திருவாதிரை – 10.03.21, புனர்பூசம் 1,2,3 – 11.03.21

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : பத்மாவதி தாயார் &  வேங்கடாஜலபதி பெருமாள், கோயிலில் நெய் தீபம் ஏற்றவும். தான தர்மங்களை தாராளமாக செய்யவும்.

கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய) :

ராசிநாதன் சந்திரன் மாத ஆரம்பத்தில் 8ல் ராகுவின் நக்ஷத்திரத்தில் சஞ்சரிக்கிறார். 11ல் இருக்கும் ராகுவின் பலனையும் சேர்த்து தருவார். உத்தியோகத்தில், தொழிலில் நல்ல முன்னேற்றம், கல்வி, விவசாயம், மருத்துவம், பத்திரிகை துறை, அரச துறைகள் என்று அனைத்து பிரிவினருக்கும் ஏற்றம் இருக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்போருக்கு வெற்றி உண்டாகும். சூரியன் 8ல் கடன் சம்பந்தமான தொல்லைகள் அதனால் மனத்துயர் பெண்களின் அதிருப்திக்கு ஆளாகுதல் இருக்கின்ற இடத்துக்கு அருகில் கூட இடமாற்றம் ஏற்படும், தொழிலில் நஷ்டம் இருக்கும், செவ்வாய் 22.02.21 வரை சுமாராக பணவரவு தந்தாலும் ஒரு மந்த நிலையை தருவார். அதன் பின் 11ல் ராகுவுடன் சேர்ந்து எதிர்ப்புகளை சமாளிக்கும் மனோதிடம், சுறுசுறுப்பு, பிள்ளைகளால் மகிழ்ச்சி எடுத்த செயல்களில் வெற்றி என்று தருகிறார். புதன் 7ல் வக்ரியாய் 21.02.21 வரை சொந்தங்கள், வாழ்க்கை துணைவர் உறவுகள் என்று கலகம் வீண் வம்பு என்று இருக்கும் நினைப்பது ஒன்று நடப்பது வேறு என இருக்கும். 21.02.21க்கு பின் நிவர்த்தி தெய்வத்தின் அருள், வீடுவாங்குதல், அல்லது சேமிப்பு அதிகரிக்கும். குரு 7ல் வாழ்க்கை துணைவரால் நன்மை, பிற பெண்களின் உதவி ஆதாயம், பொருள் வரவு குழந்தை பாக்கியம், இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தல் என்று இருக்கும். சுக்ரன் 8ல்ல் 22.02.21 வரை வாக்கில் கடுமையை தருவார், எதிர்கள் தொல்லை தருவார்கள் பயணம் கசப்பான அனுபவங்களை தரும். பின் 9ல் சஞ்சரிக்கும் போது செல்வம் சேருதல், கல்வியில் வளர்ச்சி, தர்ம கைங்கர்யங்களில் ஈடுபடுதல், திருமணத்தை எதிர்பார்த்து இருந்தோருக்கு கைகூடும், நன்மை அதிக அளவில் இருக்கும். சனி 7ல் ஆட்சி, பெரிய கெடுதல்கள் இல்லை வாழ்க்கை துணைவர் ஆரோக்கியம் பாதிப்பு, சிறுநீரக பாதிப்புகளால் கொஞ்சம் பணம் விரயம் ஆகும். அதே நேரம் வீடு வாகன யோகம், பெண்களால் ஆதாயம் என்று நன்மையும் தருகிறார். 5ல் கேது குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். சமூகத்தில் புகழ், அதிகாரம் செல்வாக்கு இவற்றில் பாதிப்பு ஏற்படலாம் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.பொதுவில் இந்த மாதம் அதிக நன்மை இருப்பதால் கவலை வேண்டாம். வீடு நிலம் வாங்குவதை மட்டும் இந்த மாதம் ஓத்தி போடுவது நலம் தரும்.

சந்திராஷ்டம நாள்: புனர்பூசம் 11.03.21,  பூசம் 13.02.21, & 12.03.21, ஆயில்யம் 14.02.21 & 13.03.21

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : அம்பாள் அல்லது மஹாலக்ஷ்மி, கோயிலில் விளக்கேற்றி, தாயாரை நாம ஜெபம் ஸ்லோகங்கள் சொல்வது, கோயில் ப்ரசாதங்களை ஏழைகளுக்கு கொடுப்பது தான தர்மங்கள் செய்வது என்று இருந்தால் நன்மை உண்டாகும்.

சிம்மம்:(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் முடிய):

ராசிநாதன் சூரியன் 7ல் வயறு ஜீரண கோளாறுகள் உண்டாகும். அலைச்சல் பிரயாண களைப்பு, வாழ்க்கை துணைவர் வகையில் வைத்திய செலவு என்று கெடுபலன்களை மட்டும் செய்கிறார். செவ்வாய் 22.02.21 வரை 9ல் பின் ராகுவுடன் 10ல் அலைச்சல், வீண் விரயம், சிறு காயங்கள் ஏற்படுதல், மன சோர்வு, முயற்சிகளில் தாமதம் என்று இருக்கும். ராகுவால் வருவாய் அதிகரிக்கும் ஆனால் இட மாற்றம் உத்தியோக மாற்றம் ஏற்படும், வியாபாரிகளுக்கு நாள் பட்ட சரக்குகள் விற்று தீரும். ஓரளவு மகிழ்ச்சி ஏற்படும். 6ல் புதன் பொருளாதார நிலையை தக்க வைக்கிறார். எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் மகிழ்ச்சியை தரும். 11.03.21க்கு பின் அவ்வளவு நன்மை இல்லை உறவினர் தொல்லை அல்லது உத்தியோகத்தில் உடன் பணிபுரிவோர், சொந்த தொழிலில் ஊழியர்கள் என்று இவர்களால் தொல்லை உண்டாகும் மன கஷ்டம் உண்டாகும். 6ல் குரு & சனி பெரிய நன்மை ஏதுமில்லை ஆனால் கெடுதலும் இல்லை பழைய விரோதிகள் மறைவர், உடல் ஆரோக்கியம் ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கும். குடும்ப அங்கத்தினரின் வைத்திய செலவு அதிகரிக்கும். சனி வழக்குகளை முடித்து தருவார். புதிய உத்தியோகம் கிடைக்கும். ஓரளவு நன்மை உண்டாகும். சுக்ரன் 22.02.21 வரை 6ல் பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்கும். கொடுத்த கடன் வசூலாவதும் கடினம், 7ல் சஞ்சரிக்கும் போது நல்ல முன்னேற்றம் உண்டாகும், திருமணம் கைகூடும், கலை, மீடியா துறைகள் நல்ல முன்னேற்றம், குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும், வருமானம் பெருகும். 4ல் கேது மன குழப்பம், துயர செய்தி அறிதல், எதிலும் தடை என்று இருக்கும். பொதுவில் இந்த மாதம் நல்லதும் கெடுதலும் கலந்து இருக்கும். பொறுமை நிதானம் கவனத்துடன் செயல்படுதல் என்று இருந்தால் நன்மை உண்டாகும்

சந்திராஷ்டம நாள்: மகம் -15.02.21, பூரம் – 16.02.21, உத்திரம் 1 – 17.02.21

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : சிவன், கால பைரவர், திங்கள் கிழமைகளில் அபிஷேகத்துக்கு பால் கொடுத்தல், தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு அபிஷேகம், ஸ்லோகம் சொல்லுதல், முடவர்கள், பார்வை அற்றோர் இவர்களுக்கு உதவி செய்வது, தான தர்மங்கள் செய்தல் நன்மை தரும்.

கன்னி:(உத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய):

ராசிநாதன் புதன் ராசிக்கு 5ல் வக்ரநிலையில் 22.02.21 வரை பின் வக்ர நிவர்த்தியாகி, ஓரளவு நன்மை, கொஞ்சம் மன பயம், செயல்களில் தடுமாற்றம், வெளியூர் பயணம் போன்றவற்றை செய்கிறார், பின் 11.03.21ல் கும்பத்தில் 6ல், பொருளாதார அபிவிருத்தி, செயல்களில் வெற்றி, இல்லத்தில் சுப நிகழ்வுகள், நல்ல பெயர் சமூக அந்தஸ்து இருக்கும். சூரியன் 6ல் இதுவரை இருந்துவந்த வியாதிகள் குணமடையும், மனதில் உற்சாகம் உண்டாகும். உத்யோகம், வியாபாரம் சொந்த தொழில் இவைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நல்ல பெயர், பொருளாதார ஏற்றம் என்று இருக்கும். சந்திரன் நன்மைகளை அதிகம் செய்கிறார். செவ்வாய் 22.02.21 வரை மேஷத்தில் ஆட்சி பெரிய கஷ்டங்களை தரமாட்டார் ஆனால் சில சுப விரயங்கள், பிறர் சொல்வதை கேட்க நேரும், மனதில் லேசான பயம் இருந்து கொண்டிருக்கும், பின் 9ல் ராகுவுடன் முயற்சிகளில் தடை, உத்தியோகம் தொழில், படிப்பு, விவசாயம் இவற்றில் பின்னடைவு, சுயகௌரவ இழுக்கு ராகுவால் உண்டாகும். பெற்றோர் வழியில் மருத்துவ செலவுகளும் இருக்கும். மனைவி மக்களால் சில பண விரயங்கள் ஏற்படும். குரு 5ல்  சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். புதியவீடு குடிபோகுதல், பண வரவு, உத்தியோகம் சொந்த தொழில் இவை நல்ல ஏற்றம் அடைதல், வியாதிகள் குறையும், 5ல் சுக்ரனும் குழந்தை பாக்கியத்தையும் பண வரவையும் உறுதி செய்யும், எழுத்தாளர்கள் கலைஞர்கள் பத்திரிகை துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், 21.02.21 முதல் 6ல் எதிலும் கவனம் தேவை வீண் வழக்குகள், பெண்களால் தொல்லை இருக்கும். சனி 5ல் ஆட்சி நன்மை இல்லை எனினும் பெரிய கெடுதல்கள் இருக்காது. கர்பமுற்றவர்கள் கொஞ்சம் கவனமாய் இருக்க வேண்டும்.  குழந்தைகள் விஷயத்திலும் எச்சரிக்கை தேவை, கேது 3ல் ராசிநாதன் நக்ஷத்திர காலில், பேர் புகழ் பரவுதல், திருமணம், தன ஆதாயம் என்று அள்ளி தருவார். வழக்குகள் விலகும் பொதுவில் பெரும்பாலான கிரஹங்கள் நன்மைகளை செய்வதால் பாதிப்புகள் குறைவு. புதுமுயற்சிகள் வெற்றி தரும்.

சந்திராஷ்டம நாள்: உத்திரம் 2,3,4 – 17.02.21, ஹஸ்தம் – 18.02.21, சித்திரை 1,2 – 19.02.21

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : ஸ்ரீராமர், ஆஞ்சநேயர் கோயிலில் விளக்கேற்றுதல் சனிக்கிழமைகளில் வெண்ணை சாற்றுதல், ஊன்முற்றோருக்கு உதவுவது, ஏழைக்குழந்தைகள் படிக்க உதவுதல், அன்ன தானம், கோயில் பராமரிப்பு பணிகளில் உதவுதல் நன்மை தரும்.

துலாம்:(சித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய):

ராசிநாதன் சுக்ரன் 4லிலும் 5லுமாக மாதம் முழுவதும் சஞ்சாரம், அள்ளி வழங்குகிறார் நற்பலன்களை எண்ணிய செயல்கள் முடியும், பொருள் வரவு, உத்தியோகத்தில் நல்ல நிலை சொந்த தொழில்/வியாபாரம் லாபமாகுதல், நண்பர்கள் உறவினர்களுடன் விருந்துண்ணல், புனித யாத்திரை, கேளிக்கைகள், பணத்தட்டுப்பாடு ஏற்படாது. எழுத்தாற்றல் வாக்கு வன்மை கூடும். சூரியன் 5ல் பெரியோர்களிடம் தனிந்து போவது நல்லது, கவன குறைவுகளால் சிறு தவறு ஏற்பட்டு மனஸ்தாபங்கள் உண்டாகும். பெரிய கெடுதல் இல்லை என்றாலும் சிறு குழப்பங்கள் இருக்கும். சந்திரன் ராசியில் தனூரில், மீனத்தில், மேஷத்தில், சிம்மத்தில் வரும்போது மகிச்சியும்  பண வரவும், சுப நிகழ்வுகளும் இருக்கு, செவ்வாய் 22.02.21 வரை 7லும் பின் 8ல் ராகுவுடனும் உடல் வியாதிகள் கண், வாழ்க்கை துணையுடன் மன விரோதம், விபத்துகளால் காயம் உண்டாகுதல்,நண்பர்களால் தொல்லை, களவு, வைத்திய செலவு என்று இருக்கும். புதன் 4ல் 11.03.21 வரை வாகன யோகம், பொருள் வரவு, பாராட்டுகள், உத்தியோகத்தில் பதவி உயர்வு, தொழிலில் ஆர்டர்கள் கிடைத்தல், கௌரவம் அதிகரித்தல் இருக்கும். பின் 5ல் அயலூர் பயணம், வீன் அலைச்சல், வீட்டில் குழப்பம் என்று இருக்கும். குரு & சனி 4ல் நண்பர்களுடன் மோதல், எதிரிகள் தொல்லை, வீண் விவாதம் களைப்பு, உறவுகளால் மன சஞ்சலம், எதிலும் எச்சரிக்கையாய் இருப்பது அவசியம். 2ல் கேதுவும் வீடு, நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், பெற்றோர், வாழ்க்கை துணை மருத்துவ செலவுகள், எதிர்பாராத துன்பம் உண்டாகும். எதிலும் கவனமாய் இருந்தால் பிரச்சனைகள் இல்லை . பொதுவில் இந்த மாதம் 75% நன்மையும் 25% கெடுதலும் இருக்கும். நிதானம், பெரியோரிகளின் ஆலோசனை, யோசித்து செயல்படுதல் பெருமளவு துன்பங்களை குறைக்கும்.

சந்திராஷ்டம நாள்: சித்திரை 3,4 – 19.02.21, ஸ்வாதி – 20.02.21, விசாகம் 1,2,3 – 21.02.21

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : மஹாலக்ஷ்மி, யோக ந்ருஸிம்ஹர் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று நாம ஜபம் செய்வது தியான பயிற்சி, ஏழை எளியோருக்கு சரீர உதவி, வயோதிகர்களுக்கு உதவுவது, அன்ன தானம், வஸ்திர தானம் செய்வது நன்மை தரும்.

விருச்சிகம்:(விசாகம் 4, அனுஷம், கேட்டை முடிய):

ராசிநாதன் செவ்வாய் 6ல் 22.02.21 வரை, வியாதிகள் குணம் அடையும், மனதில் மகிழ்ச்சி உண்டாகும், உத்தியோகத்தில் உயர்வு, சொந்த தொழில் வியாபாரம் இவற்றில் மிகுந்த வருவாய் லாபம், குடும்பத்தில் சுப நிகழ்வுகள் என்று நன்றாகவே நன்மை செய்வார். பின் 7ல் ராகுவுடன் குடல் சம்பந்தப்பட்ட வியாதிகளால் அவஸ்தை, வாழ்க்கை துணைவருடன் மோதல், வீண் குழப்பம். ராகு 7ல் குடும்பத்தில் அமைதியின்மையை செய்வார். ஆனாலும் செவ்வாய் நக்ஷத்திரத்தில் இருப்பதால் பெரிய அளவில் இருக்காது. 4ல் சூரியன், உடல் ஆரோக்கியம் பாதிக்க படும். அதேநேரம் வழக்குகள் செயல் திட்டங்கள் இவற்றில் வெற்றி உண்டாகும். சந்திரனும் அவ்வப்போது நன்மை செய்கிறார், புதன் 3ல் 22.02.21வரை வக்ரம் மறதி, அசதி, பெண்களால் தொல்லை என்று செய்வார், அதன் பின் செயல்களில் வெற்றியையும், வாகனம், புதுவீடு குடி போகுதல் படிப்பில் முன்னேற்றம், நிலம் வாங்குதல், உத்தியோகம் உயர்வு, புது உத்தியோகம் கிடைத்தல், தொழிலில் லாபம். 3ல் குரு & சனி ஓரளவு நன்மையே, பார்வைகளால் பண வரவு, குடும்பத்தில் சுப நிகழ்வு, ஜீவன வகையில் ஆதாயம் என்று தருகிறார்கள். சனி பகவான் மனதில் ஆசைப்பட்டதை கிடைக்க செய்வார். சுக்ரன் 3லும் 4லிலுமாக அள்ளி கொடுக்கிறார், வியாதி குணமாகும், விரும்பிய இடமாற்றம், தொழிலில், உத்தியோகத்தில் முன்னேற்றம், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறுதல், கணவன் மனைவி ஒற்றுமை, புனித யாத்திரை, கேளிக்கைகள், ஆடை ஆபரண சேர்க்கை மகிழ்ச்சியை கொடுக்கிறார். ராசியில் கேது நன்மை செய்யவில்லை என்றாலும் பெரிய கெடுதலை தரவில்லை. பொதுவில் இந்த மாதம் நன்றாகவே இருக்கும். கவனமாக நடந்துகொண்டால் பிரச்சனைகளை சமாளிக்கலாம். வெற்றி நிச்சயம்.

சந்திராஷ்டம நாள்: விசாகம் 4 – 21.02.21, அனுஷம் – 22.02.21 & 23.02.21, கேட்டை – 23.02.21 & 24.02.21

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : பழனி ஆண்டவர், சித்தர்கள் சமாதி, குருமார்கள் இவர்களை தொழுதல், கோயில் உழவாரப்பணி, வாய் நிறைய முருகா என நாம ஜெபம் செய்தல், முடிந்தவரை தான தர்மங்களை செய்தல் நன்மை தரும்.

தனூர்:(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய):

ராசிநாதன் குருபகவான் 2ல் குடும்ப ஸ்தானத்தில், மேலோட்டமாக நீசத்தில் ஆனால் சந்திரனின் நக்ஷத்திரக்காலில், கடந்தகாலங்களில் ஏற்பட்ட பொருளாதார சரிவை நீக்கி ஏற்றத்தை தருவார், உழைப்பவர்களுக்கு சரியான ஊதியம் கிடைக்கும், உத்தியோகத்தில் உயர்ந்த நிலை, தொழில் வியாபாரம் இவற்றில் நல்ல ஆதாயம், இல்லத்தில் திருமணம், குழந்தை சுப நிகழ்வுகள் என்று மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். 3ல் சூரியனும் தன்பங்குக்கு  பண வரவையும், நோய் நீக்கத்தையும், எண்ணிய எண்ணத்தையும் நிறைவேற்ருகிறார் பகை குறையும், சந்திரன் செவ்வாய் இருவரும் குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் இவற்றை மேம்படுத்துகிறார்கள். ஜீவன வகையில் கொஞ்சம் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் சமாளிக்கும் தன்மையை குரு செய்துவிடுவதால் பெரிய பாதிப்புகள் இல்லை, புதன் 2லும் பின் 3லும் நல்வாக்கு, செயல்களில் வெற்றி, பேச்சுத்திறன், உழைப்பு அதிகம், கொஞ்சம் சிந்திக்கும் திறன் குறையும். ஆனாலும் சமாளித்து விடுவீர்கள், சுக்ரன் 3லும் 4லிலும் ஆரோக்கியம் மேம்பட்டு மகிழ்ச்சி அதிகரிக்கும், நண்பர்களால் உதவி கிடைக்கும், கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள், வேறு மொழி இன மனிதர்களால் ஆதாயம் உண்டுஆகும். 6ல் செவ்வாயுடன் ராகு மேல் மட்ட மனிதர்களின் பாராட்டு கிடைத்து செல்வாக்கு அதிகரிக்கும், இருவித வருவாய் உண்டு, சனி 2 பெரிய நன்மை இல்லை எனினும் சின்ன சின்ன சங்கடங்களை மட்டும் தருவார். செலவும் இருக்கும் கவனம் தேவை, 12ல் கேது செலவுகளை தந்து வழக்குகளை முடித்து வைத்து, குடும்பத்தில் நன்மை உண்டாகும்படி செய்வார். பொதுவில் இந்த மாதம் சிறப்பாக இருக்கிறது. கெடுதல்கள் குறைவு.

சந்திராஷ்டம நாள்: மூலம் – 24.02.21 & 25.02.21, பூராடம் – 25.02.21 & 26.02.21, உத்திராடம் 1 – 26.02.21& 27.02.21

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : சிவன், சாஸ்தா வழிபாடு, விரதம் ஸ்லோகங்களை சொல்லுதல், முடிந்த அளவு தான தர்மங்களை செய்தல், சரீர ஒத்தாசை, தெய்வ கைங்கர்யங்கள் செய்தல் நன்மை தரும்.

மகரம் :(உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய):

ராசியதிபதி சனி பகவான் ராசியில் ஆட்சி, எண்ணங்களை திறம்பட செய்து நிறைவேற்றி வைக்கிறார். மேலும் குரு, சுக்ரன் புதன் இவர்களுடன் ராசியில் இருந்து பொருளாதாரம், வீடு வாகன யோகங்கள், செல்வம், செல்வாக்கு என்று நிறைய தருகிறார். குருபகவான் இட மாற்றம் உத்தியோக மாற்றம்  பார்வையால் வீடு வாகன ஆதாயம் ஆடம்பர பொருள் சேர்க்கை என்று செய்கிறார். 2ல் சூரியன் கண், குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தருகிறார். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருத்தல், பிறரை முழுவதும் நம்ப வேண்டாம், வாக்கு கொடுப்பதை யோசித்து செயல்படவும். செவ்வாய் 22.02.21 வரை 4ல் ஏற்கனவே இருந்த வியாதையை அதிகரிக்க செய்வார், தகுந்த மருத்துவ சிகிச்சை எடுப்பது நல்லது, மனதை அலைபாய செய்வார். அதனால் பொருள் விரயம் உண்டாகும். இல்லத்தில் சச்சரவுகள் உண்டாகும். பின் 5ல் ராகுவுடன் சேர்ந்து குழந்தைகளின் ஆரோக்கியம் பாதித்தல் புகழ் அதிகாரம் செல்வாக்கு குறைதல், ஏமாற்றம், தடுமாற்றம் இருந்து கொண்டிருக்கும். கவனம் தேவை, சுக்ரன் ராசியில் 21.02.21 வரை பெண்களால் நன்மை, ஆடை ஆபரண சேர்க்கை, கலைத்துறையில் இருப்பவர்களுக்கு லாபம், நினைத்த எண்ணம் நிறைவேறுதல், 22.02.21 முதல் 2ல் லக்ஷ்மீ கடாக்ஷம், பொருளாதார நிலை உயர்தல், வீடு வாகனம் கிடைத்தல், உத்தியோகத்தில் உயர்வு செய்தொழிலில் லாபம் என்று இருக்கும். புதன் ராசியிலும் 2ல் பெரிய நன்மை செய்யவில்லை வீன் அலைச்சல், பிறரின் பழிப்ப்க்கு ஆளாதல், முயற்சி தடை என்று செய்கிறார், கேது 11ல் வருவாயை அதிகரிக்க செய்து தேவைகள் பூர்த்தியாகும்படி செய்கிறார். பொதுவில் பெரும்பாலான கிரங்கள் நன்மை செய்வதால், மகிழ்ச்சியான மாதமாக அமையும்.

சந்திராஷ்டம நாள்: உத்திராடம் 2,3,4 – 26.02.21 & 27.02.21, திருவோணம் – 27.02.21 & 28.02.21, அவிட்டம் 1,2 – 28.02.21 & 01.03.21

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : அனுமன், ஹயக்ரீவர், ஸ்லோகங்களை சொல்வது கோயிலில் விளக்கேற்றுவது. சரீர உதவிகள், வறியோர்களுக்கு உணவு வழங்குதல் தர்மங்களை செய்தல் நன்மை தரும்.

கும்பம்:(அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய):

ராசிநாதன் சனி 12ல் ஆட்சி, சுப செலவுகள் அதிகரிக்கும், அதற்கேற்றார் போல வருமானத்தையும் அதிகரிக்கிறார், 3ம் பார்வையாக செவ்வாயை பார்ப்பதால் வீடு யோகம் சிலருக்கு அமைப்யும். ஜென்ம ராசியில் சூரியன் சொறி, சிரங்கு, உஷ்ண வியாதிகள், கண் பாதித்தல், பெரியோர்களிடம் மனஸ்தாபம், செயல்களில் மந்தம், தூக்கம் அதிகரித்தல் என்று இருக்கும். குரு 12ல் தெய்வ வழிபாட்டில் ஈடுபட செய்வார், சுப செலவுகள், இல்லத்தில் திருமணம், நடக்கும் குழந்தைகளின் கல்வி செலவு அதிகரித்தல், வாகனம், வீடு பழுது பார்த்தல் போன்ற விரயங்கள் ஏற்படும், புதன் 12ல் தொல்லைகள் இருக்கும், கள்வர் பயம், மன குழப்பம் ஏற்பட்டு வேலையில் மந்த நிலை இருக்கும். பின் ராசியில் உடன் வேலை செய்வோர், சொந்த தொழிலில் தொழிலாளர்கள் இவர்களால் பிரச்சை வரும். சுக்ரன் 12ல் ஆடை அணிகலன் சேர்க்கை, 22.02.21 முதல் ராசியில் திருமணம், பெண்களால் நன்மை, உத்தியோகத்தில் உயர்வு, தொழில் லாபம் என்று இருக்கும். செவ்வாய் 22.02.21 வரை 3ல் வீடு, நிலம் வாங்குதல் வாகனம் வாங்குதல், வெகுமதிகள் கிடைக்கும், வியாபாரம் செய்தொழில், உத்தியோகத்தில் லாபம் உண்டாகுதல் இருக்கும். பின் 4லில் ராகுவுடன் சேர்ந்து கொஞ்சம் களைப்பு, பயம், இல்லத்தில் துயர சம்பவம், இழப்பு, மன கவலை இப்படி இருக்கும், கேது 10ல் வருமானத்தை அதிகரிக்க செய்கிறார். பூமி லாபம் உண்டாகும். எல்லோருக்கும் நன்மையை செய்கிறார். நினைத்த காரியம் வெற்றி அடையும்.  பொதுவில் நன்மை தீமை கலந்து இருந்தாலும் தீமை செய்யும் கிரஹங்களின் வலிமை அதிகம் இருப்பதால் கவனத்துடன் செயல்படுவது நலம் தரும் பொறுமை நிதானம், வாக்கு கொடுப்பதில் எச்சரிக்கை, விட்டுக்கொடுத்து செல்லுதல் நன்மை தரும்.

சந்திராஷ்டம நாள்: அவிட்டம் 3,4 – 28.02.21 & 01.03.21, சதயம் – 01.03.21, பூரட்டாதி 1,2,3 – 02.03.21

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : நின்ற திருக்கோல பெருமாள், கருடர், கோயிலில் விளக்கேற்றுதல், அதிகாலையில் எழுது ப்ரார்த்தனை செய்தல், நாம ஜெபம், அன்னதானம் செய்தல், முடிந்த அளவு தான தர்மங்களை செய்தல் நன்மை உண்டாக்கும்.

மீனம்:(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய):

ராசிநாதன் குரு லாபத்தில் உத்தியோகத்தில் உயர்ந்த நிலை கடந்தகாலத்தில் கிடைக்க வேண்டிய பதவிகள் கிடைத்தல், தொழிலில் முதலீடுகள் லாபமாக மாறுதல், புதிய தொழில் தொடங்க ஏற்பாடுகள் செய்தல், புதிய வேலை வெளிநாட்டு முயற்சிகளும் வெற்றி தரும். வீடுவாகன யோகங்கள், குழந்தைகளால் நன்மை, குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடத்தல், 11ல் இருக்கும் சனி, சுக்ரன், புதன் இவர்கள், உத்தியோகம், தொழிலில் முன்னேற்றத்தையும், ஆடை அணிகலன், திருமணம் போன்ற சுப நிகழ்வுகள், இல்லத்தில் புது வரவுகள், விரும்பிய இடமாற்றம், கணவன் மனைவி ஒற்றுமை சமுதாயத்தில் நல்ல பெயர் புனித யாத்திரை தெய்வ அனுகூலம், வாக்கு பலிதமாகுதல், எல்லோருடைய நட்பையும் அன்பையும் பெறுதல் என்று இருக்கும். செவ்வாய் 22.02.21 வரை 2ல் பெரிய முன்னேற்றம் இல்லை மன அமைதி குறையும் ஆனாலும் பாதிப்பில்லை, பின் 3ல் ராகுவுடன் சேர்ந்து செல்வத்தை அள்ளித்தருகிறார், பூமி, வாகன லாபம் கீர்த்தி பெருகுதல், தொழில் அபிவிருத்தி, விவசாயம், பால்,தயிர்,தண்ணீர், விற்பனை, காய்கரிகள் விற்பனை போன்றவையும் உத்தியோகத்தில் உயர்வும் நடக்கும், ராகு எதிர்பாராத லாபங்களையும் வெற்றியையும் தருவார். சந்திரனும் தன் பங்குக்கு ராசியில் மகரத்தில், ரிஷபம், சிம்மம் கன்னி விருச்சிகத்தில் வரும்போது மகிழ்ச்சியும் செல்வத்தையும் தருவார். சூரியன் 12ல் விரயம், வியாதி எதிர்பாராத பண செலவும், நேரம் கழித்து உறங்குதல் என்றும், கேது 9ல் சோம்பேறித்தனம், அல்லது எல்லாம் மெதுவாக போகுதல், குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமை என்று செய்வார். ஆனாலும் பொதுவில் அதிக கிரஹங்கள் நன்மை தருவதால் இவை பெரிய அளவில் பாதிப்பை தராது. மகிழ்ச்சியான மாதம்.

சந்திராஷ்டம நாள்: பூரட்டாதி 4 – 02.03.21, உத்திரட்டாதி – 03.02.21, ரேவதி – 04.02.21

வணங்க வேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : மீனாக்ஷி அம்மன், கருமாரி அம்மன் என்று அம்மன் கோயில்களில் விளக்கேற்றி வழிபடுதல் ஸ்லோகங்களை ஜெபம் செய்தல், முடிந்த அளவு தான தர்மங்களை செய்தல், இயலாதவர்கள் வயோதிகர்கள் இவர்களுக்கு சரீர உதவி செய்தல் நன்மை தரும்.

அன்புடன்

லக்ஷ்மி ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)

ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்

D1, Block 1, அல்சா கிரீன்பார்க் குடியிருப்பு

ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு, நேரு நகர்

குரோம்பேட்டை, சென்னை – 600 044

Phone : 044-22230808 / 8056207965 (Whats app)

Email : mannargudirs1960@gmail.com

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.