சிம்ம ராசி

சிம்ம ராசி(மகம்,பூரம், உத்திரம் 1ம்பாதம் முடிய)– 60/100

இதுவரை 5ல் இருந்தசனிபகவான் ருண ரோக சத்ரு ஸ்தானமான 6ம் இடத்துக்குவருகிறார். அடுத்த 3 ஆண்டுகள் இவரின் சஞ்சாரங்கள் நன்மையை அதிகமாகவும் கஷ்டத்தை குறைவாகவும் தருகிறது. மேலும் குரு பகவான், ராகு/கேது சஞ்சாரங்களும் ஓரளவு நன்மையை தருவதாக அமைவதால் அடுத்த பத்துமாதங்கள் பெரியதுன்பமில்லை, வழக்குகள் சாதகமாய்இருக்கும்.

உங்கள் ராசிக்கு பகையாவார் சனிபகவான் இருந்தாலும் ராஜயோகத்தைதருகிறார். கடன்தீரும், சொத்துக்கள்வாங்குவீர்கள், பதவிலாபம், வீடுவாகன யோகங்கள் என்று அடுத்த 30 மாதங்களும் நன்றாகவே இருக்கும், இருந்தாலும் வக்ரகாலங்களில் (முன்னுரையில்வக்ரகாலங்கள்கொடுக்கப்பட்டுஇருக்கின்றது) மற்றும், குருபகவான்அதிசாரமாக 6ல் வரும்ஏப்ரல்,மே,ஜூன் 2020 ஓரளவுசங்கடங்களும், பின்ஜூலை 2021 முதல் சில சிரமங்களையும் கொடுப்பார். எனினும் மற்ற ராகு/கேது பெயர்ச்சி ஏற்படும் செப்டம்பர் 2020க்கு பின் புதிய முயற்சிகள் வெற்றியைதரும். பொதுவில் இந்த சனிப்பெயர்ச்சி பெரிய கஷ்டத்தை தராது.நன்மைஅதிகம்செய்யும்.

உடல் நலம் ஆரோக்கியம்:

ஆரோக்கியம் மேம்படும். விபரீத ராஜயோகமாய் இதுவரை இருந்து வந்த நாள்பட்ட வியாதிகளும் குணமாகும். தாய்,தந்தையர்,மனைவி,குழந்தை என்று குடும்ப உறவுகளின் ஆரோக்கியமும் மேம்படும். பெரிய தொந்தரவுகள் இருக்காது. கண் திருஷ்டி இருந்தாலும் பெரிய பாதிப்பைத் தராது. ஆனால் குழந்தைகளுக்கு சளி போன்ற தொந்தரவு உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.

குடும்பம் மற்றும் உறவினர்கள்:

மே 2020க்கு பின்கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும், பெரியோர்களிடம் விவாதம் வேண்டாம். சிறுசிறு கருத்து மோதல்கள் இருக்கும். விட்டுக்கொடுத்து போவதால் பெரிய பாதிப்பில்லை, தொழில் நிமித்தமாக அல்லது வேறு காரணங்களால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர் தற்போது ஒன்று சேரும் நிலை இருக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு, மனைவி உறவுகளும் நன்றாக ஒற்றுமையுடன் இருப்பார்கள். பிள்ளைகள் சொல்படி நடப்பர்.பெற்றோர்களின் ஆஸீர்வாதங்கள் உண்டு. அடுத்த 3 ஆண்டுகளுமே குடும்பத்தில் குதூகலம் இருந்து கொண்டிருக்கும். ஒற்றுமை நீடிக்கும்.

வேலை/உத்தியோகம்:

எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை, வெளிநாட்டு வேலை என்று நன்றாகவே இருக்கும். வேலையில் இருந்த சிரமம் குறையும். வக்ரசஞ்சார காலங்களிலும், குரு/ராகுபெயர்ச்சி காலங்களிலும் கொஞ்சம் ப்ரஷ்ஷர் இருக்கும், அரசியலால் மனம் தடுமாறும்.ஆனாலும் பெரும்பாலும் நன்மைஎன்பதால் நன்றாகவே இருக்கும். சிலர் வீடு வாங்குவர். புதிதாக வேலைதேடுவோருக்கு வேலை கிடைக்கும். மே 2020க்கு பின் அதில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ராகு/கேதுபெயர்ச்சி செப்டம்பர் 2020 முதல்ஜூலை 2022 வரை கொஞ்சம் சிரமம்இருக்கும்.அரசியலால் வேலையை விடும்படி இருக்கும் . இருந்தாலும் பொறுமை நிதானம் இவற்றை கடைபிடித்து வந்தால் வேலையில் கவனம் செலுத்தினால் நல்லநிலை உண்டாகும். பொதுவாக பெரியதாகபடுத்தாது இந்த சனிப்பெயர்ச்சி.

தொழிலதிபர்கள்:

ரியல் எஸ்டேட், தரகு போன்ற தொழிலை செய்பவர்களுக்கு ஏற்ற காலம். மேலும் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனங்கள், பணம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் நல்லநிலை ஏற்படும். உங்கள் தொழிலை விஸ்தரித்து அதிக லாபம் ஈட்டுவீர்கள்.புதிய தொழில் தொடங்க நினைப்போருக்கு ஏற்றகாலம். இருந்தாலும் தொழில் செய்வோர் அனைவரும் ராகு/கேதுபெயர்ச்சியான செப்டம்பர் 2020 முதல் 2022 வரை கொஞ்சம் கவனமாயும்,கணக்கு வழக்குகளைச ரியாகவும் வைத்திருக்க வேண்டும். எதையும் ஆலோசித்து செய்வது நல்லது. சனியின் வக்ரகாலங்கள் சிரமத்தைதரும்.

மாணவர்கள்:

போட்டிகள் பந்தயங்களில் வெற்றிஉண்டாகும். உயர்படிப்பு படிப்போருக்கு உதவும் வகையில் சனிபகவான் மகரராசியில் ப்ரவேசிக்கிறார், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும், பாராட்டுகள்கிட்டும். மேல்நாட்டு படிப்புக்கும் ஏற்பாடுஆகும். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துங்கள்.சனிவக்ர சஞ்சாரகாலங்களில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும்.ராகு/கேதுபெயர்ச்சியில் நல்ல பலன் இல்லை. அதனால் கொஞ்சம் கவனத்துடன் படிக்கவும், பெரியோர் பெற்றோர் ஆசிரியர் அறிவுரையை கேட்பது நன்மைதரும்.

கலைஞர்கள் /அரசியல்வாதிகள்/விவசாயிகள்:

பொதுவாக அனைவருக்கும் நன்றாக இருக்கிறது. புதியவாய்ப்புகள் தேடிவரும், பணப்புழக்கம் தாராளம். கலைஞர்களின் எண்ணங்கள் ஆசைகள் நிறைவேறும், பாராட்டுகள் புகழ்கிடைக்கும். ரசிகர்கள் ஆதரவு உண்டு.சேமிக்கும் வழக்கத்தை கொள்ளுங்கள் சனி வக்ர காலங்கள் ராகு/கேது பெயர்ச்சி கொஞ்சம் சிரமத்தை தரும் கவனமாய் இருத்தல் அவசியம்.

அரசியல்வாதிகள் விட்டதை பிடித்துவிடுவார்கள்.நல்ல பதவியும்கிடைக்கும். வார்த்தைகளை நிதானித்து விடுவது நல்லது. சனிவக்ர சஞ்சார காலம் கொஞ்சம் சிரமத்தையும் கொடுத்து செல்வாக்கை குறைக்கும். கவனம்தேவை. விவசாயிகள் மகசூலால் நல்ல பணவரவை பார்ப்பார்கள், இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். வழக்குகள் சாதகம் இருந்தாலும் சனிவக்ர சஞ்சாரகாலங்கள் கொஞ்சம் சிரமத்தை கொடுக்கும் கவனம்தேவை.

பெண்கள்:

மேற்சொன்ன எல்லா பலன்களுடன் சேர்த்து மனதை மகிழ்விப்பது போல ஆடை ஆபரண சேர்க்கை,திருமணம் கைகூடல், குழந்தை பாக்கியம், யாத்திரைகள் மேற்கொள்ளல், அதிக பணவரவு, செல்வாக்கு உயர்தல், எல்லோருடனும் சுமூகஉறவு. இருந்தாலும் அடுத்து வரும் ராகு/கேது பெயர்ச்சி 1-1/2 வருடங்களுக்கு சிரமத்தை தரும்.கவனமாய் இருக்கவும். பெரிய கஷ்டம் வராது தேவைகள் பூர்த்தியாகும்.

ப்ரார்த்தனைகளும், வணங்க வேண்டிய தெய்வமும்:

பிள்ளையாரை சேவிப்பதும், விநாயகர் அகவல் படிப்பதும் நலம் தரும்.அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் மறக்காமல் அன்னதானம் செய்யுங்கள். மற்றபடி முடிந்த அளவு தான,தர்மங்களை செய்யுங்கள்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.