ஜனவரி 10 ராசி பலன்

இன்றைய விஷேஷம் மஹா பெரியவா ஆராதனை & பிரதோஷம்

🕉️மேஷம்
ஜனவரி 10, 2021
மார்கழி 26 – ஞாயிறு

செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் பணிகளில் கவனம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : காலதாமதம் உண்டாகும்.
பரணி : கவனம் தேவை.
கிருத்திகை : விவேகம் வேண்டும்.


🕉️ரிஷபம்
ஜனவரி 10, 2021
மார்கழி 26 – ஞாயிறு

முக்கிய பிரமுகர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கலைப்பொருட்களின் மீதான ஆர்வம் உண்டாகும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
ரோகிணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.


🕉️மிதுனம்
ஜனவரி 10, 2021
மார்கழி 26 – ஞாயிறு

மறைமுகமாக இருந்துவந்த திறமைகளின் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மனை வாங்குவது, விற்பது தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிஷம் : பாராட்டுகள் கிடைக்கும்.
திருவாதிரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.


🕉️கடகம்
ஜனவரி 10, 2021
மார்கழி 26 – ஞாயிறு

தனவரவுகள் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேம்படும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வெளியூர் நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : முயற்சிகள் மேம்படும்.
பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
ஆயில்யம் : எண்ணங்கள் தோன்றும்.


🕉️சிம்மம்
ஜனவரி 10, 2021
மார்கழி 26 – ஞாயிறு

கனிவான பேச்சுக்களின் மூலம் காரியங்களை சாதித்து கொள்வீர்கள். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். பணிபுரியும் இடத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகளும், உதவிகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : காரியசித்தி உண்டாகும்.
பூரம் : கலகலப்பான நாள்.
உத்திரம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


🕉️கன்னி
ஜனவரி 10, 2021
மார்கழி 26 – ஞாயிறு

தோற்றப்பொலிவில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவார்கள். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உதவிகள் கிடைக்கும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும்.
அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.
சித்திரை : முயற்சிகள் ஈடேறும்.


🕉️துலாம்
ஜனவரி 10, 2021
மார்கழி 26 – ஞாயிறு

வீடு மற்றும் வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஒத்துழைப்பும், மகிழ்ச்சியான தருணங்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
சுவாதி : தனவரவுகள் மேம்படும்.

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

🕉️விருச்சிகம்
ஜனவரி 10, 2021
மார்கழி 26 – ஞாயிறு

முன்கோபத்தை தவிர்த்து பொறுமையுடன் செயல்பட வேண்டும். முயற்சிக்கேற்ற பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். இணைய வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். கணவன், மனைவிக்கிடையே ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

விசாகம் : பொறுமை வேண்டும்.
அனுஷம் : வெற்றி கிடைக்கும்.
கேட்டை : விவாதங்கள் மறையும்.


🕉️தனுசு
ஜனவரி 10, 2021
மார்கழி 26 – ஞாயிறு

சுபகாரியங்கள் தொடர்பான செயல்களை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் அறிமுகத்தின் மூலம் இலாபம் மேம்படும். கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மூலம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பூராடம் : இலாபம் மேம்படும்.
உத்திராடம் : சாதகமான நாள்.


🕉️மகரம்
ஜனவரி 10, 2021
மார்கழி 26 – ஞாயிறு

உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் மேம்படும். குடும்பத்தில் உங்களின் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் அணுகுமுறைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
திருவோணம் : அலைச்சல்கள் மேம்படும்.
அவிட்டம் : மாற்றமான நாள்.


🕉️கும்பம்
ஜனவரி 10, 2021
மார்கழி 26 – ஞாயிறு

பயணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். வாகன வசதிகள் மேம்படும். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை குறைத்து கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். முக்கியமான செயல்பாடுகளில் நிதானமாக முடிவெடுப்பது நன்மையளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அவிட்டம் : தாமதங்கள் அகலும்.
சதயம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.

பூரட்டாதி : நிதானம் வேண்டும்.

🕉️மீனம்
ஜனவரி 10, 2021
மார்கழி 26 – ஞாயிறு

மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்பத்தினரின் வருகையும், ஒத்துழைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் தொழில் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.