ஜனவரி 16 ராசி பலன்

🕉️மேஷம்
ஜனவரி 16, 2021
தை 03 – சனி

வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தனவரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : சாதகமான நாள்
பரணி : புத்துணர்ச்சி உண்டாகும்.
கிருத்திகை : சேமிப்புகள் அதிகரிக்கும்.


🕉️ரிஷபம்
ஜனவரி 16, 2021
தை 03 – சனி

செய்யும் பணியில் அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். கெளரவ பதவிகள் சிலருக்கு கிடைக்கும். சுவையான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.
ரோகிணி : எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


🕉️மிதுனம்
ஜனவரி 16, 2021
தை 03 – சனி

ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தைவழி உறவுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். சக ஊழியர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


🕉️கடகம்
ஜனவரி 16, 2021
தை 03 – சனி

வழக்கு விவகாரம் சம்பந்தமான செலவுகள் உண்டாகும். மற்றவர்களின் அவச்சொற்களுக்கு ஆளாக நேரிடும். பழைய பிரச்சனைகள் மீண்டும் வெளிவரும். மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : செலவுகள் உண்டாகும்.
பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் ஏற்படும்.


🕉️சிம்மம்
ஜனவரி 16, 2021
தை 03 – சனி

உங்களின் பேச்சிற்கு மரியாதைகள் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளால் இலாபம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எண்ணிய செயலை திட்டமிட்ட விதத்தில் செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : மரியாதைகள் அதிகரிக்கும்.
பூரம் : ஒற்றுமை உண்டாகும்.
உத்திரம் : இலாபகரமான நாள்.


🕉️கன்னி
ஜனவரி 16, 2021
தை 03 – சனி

எதிர்பாராத உதவிகளால் மேன்மையான சூழல் உண்டாகும். தந்தை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த இடையூறுகள் அகலும். பணி செய்யும் இடங்களில் மரியாதைகள் அதிகரிக்கும். சமூக சேவை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

உத்திரம் : மேன்மையான நாள்.
அஸ்தம் : இடையூறுகள் அகலும்.
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.


🕉️துலாம்
ஜனவரி 16, 2021
தை 03 – சனி

குழந்தைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். புதிய கலைகளில் ஆர்வம் ஏற்படும். விருப்பங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மதி நுட்பமான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள். புகழ்ச்சிக்கு மயங்காமல் சிந்தித்து செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
சுவாதி : அனுபவம் உண்டாகும்.
விசாகம் : பாராட்டப்படுவீர்கள்.


🕉️விருச்சகம்
ஜனவரி 16, 2021
தை 03 – சனி

பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகள் அதிகரிக்கும். உறவினர்களால் கலகலப்பான சூழல் அமையும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளால் இலாபம் உண்டாகும். நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தலைமை பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : கலகலப்பான நாள்.
அனுஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
கேட்டை : ஆதரவு கிடைக்கும்.


🕉️தனுசு
ஜனவரி 16, 2021
தை 03 – சனி

மனதில் புதிய தன்னம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். வியாபாரத்தில் விலகி சென்றவர்கள் நெருங்கி வருவார்கள். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பிறரின் செயல்பாடுகளை குறை சொல்வதை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : உற்சாகமான நாள்.
பூராடம் : கனிவு வேண்டும்.
உத்திராடம் : காலதாமதம் அகலும்.


🕉️மகரம்
ஜனவரி 16, 2021
தை 03 – சனி

உயர் அதிகாரிகளிடம் மரியாதைகள் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் எண்ணிய காரியங்கள் ஈடேறும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். புதுவிதமான நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மனதில் எண்ணிய பிரார்த்தனைகள் நிறைவேறும். குடும்ப பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : மரியாதைகள் உயரும்.
திருவோணம் : மேன்மை உண்டாகும்.
அவிட்டம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.


🕉️கும்பம்
ஜனவரி 16, 2021
தை 03 – சனி

பதவி உயர்விற்கான முயற்சிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய சூழலுக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். குணநலன்களில் சிறிது மாற்றங்கள் உண்டாகும். கால்நடைகளால் இலாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : அனுசரித்து செல்லவும்.
பூரட்டாதி : இலாபம் மேம்படும்.


🕉️மீனம்
ஜனவரி 16, 2021
தை 03 – சனி

மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். செய்தொழிலில் இருந்துவந்த பழைய பொருட்கள் யாவும் விற்பனையாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றி புதிய நபர்களை நியமித்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : மனம் மகிழ்வீர்கள்.
உத்திரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.
ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.

About Author