ஜனவரி 27 ராசி பலன்

🕉️மேஷம்
ஜனவரி 27, 2021
தை 14 – புதன்

வெளிவட்டார தொடர்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தொழில் தொடர்பான புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இளைய சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் புதிய தன்னம்பிக்கையுடன் திட்டமிட்ட காரியங்களில் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : அனுபவம் உண்டாகும்.
பரணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கிருத்திகை : தன்னம்பிக்கை மேம்படும்.


🕉️ரிஷபம்
ஜனவரி 27, 2021
தை 14 – புதன்

மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பணி தொடர்பான செயல்பாடுகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : தெளிவு பிறக்கும்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.


🕉️மிதுனம்
ஜனவரி 27, 2021
தை 14 – புதன்

கூட்டுத்தொழில் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியங்கள் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் மற்றும் சிந்தனைகள் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்பதன் மூலம் குழப்பங்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
திருவாதிரை : இழுபறிகள் அகலும்.
புனர்பூசம் : குழப்பங்கள் குறையும்.


🕉️கடகம்
ஜனவரி 27, 2021
தை 14 – புதன்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் மூலம் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூசம் : மனம் மகிழ்வீர்கள்.
ஆயில்யம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.


🕉️சிம்மம்
ஜனவரி 27, 2021
தை 14 – புதன்

மனதில் இருந்துவந்த ஆசைகள் நிறைவேறும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு அனைவரிடத்திலும் பாராட்டுகளையும், செயல்பாடுகளில் வேகத்தையும் வெளிப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மகம் : ஆசைகள் நிறைவேறும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : துரிதம் உண்டாகும்.


🕉️கன்னி
ஜனவரி 27, 2021
தை 14 – புதன்

குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் அகலும். இறைவழிபாடுகளின் மூலம் மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தொழில் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : இன்னல்கள் குறையும்.
அஸ்தம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.


🕉️துலாம்
ஜனவரி 27, 2021
தை 14 – புதன்

பணி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த வழக்குகளுக்கு தீர்வு கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பின் மூலம் எண்ணிய எண்ணங்களை செய்து முடிப்பீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு இலாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.
சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.
விசாகம் : இலாபம் மேம்படும்.


🕉️விருச்சிகம்
ஜனவரி 27, 2021
தை 14 – புதன்

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது தகுந்த ஆலோசனைகளை பெற்று ஈடுபடுவது நன்மையளிக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். சுரங்கம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : விவாதங்களை தவிர்க்கவும்.
அனுஷம் : கவனம் தேவை.
கேட்டை : விழிப்புணர்வு வேண்டும்.


🕉️தனுசு
ஜனவரி 27, 2021
தை 14 – புதன்

வெளிப்படையான பேச்சுக்களின் மூலம் அனைவரிடத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான செயல்பாடுகளில் இலாபம் மேம்படும். வாகனங்களின் மூலம் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : மேன்மை உண்டாகும்.


🕉️மகரம்
ஜனவரி 27, 2021
தை 14 – புதன்

புதிய வேலை தொடர்பான முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் அதிகரிக்கும். கால்நடைகளின் மூலம் பொருள் வரவு உண்டாகும். சிறு தொழில் மேன்மைக்கான சூழ்நிலைகள் அமையும். செயல்பாடுகளில் இருந்துவந்த இடையூறுகள் நீங்கி எண்ணங்கள் ஈடேறும். பணி செய்யும் இடங்களில் சிறப்பான செயல்களின் மூலம் பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.
திருவோணம் : இடையூறுகள் அகலும்.
அவிட்டம் : பாராட்டுகள் கிடைக்கும்.


🕉️கும்பம்
ஜனவரி 27, 2021
தை 14 – புதன்

எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கற்பனைத்திறன் மூலம் புதிய நுட்பமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். மதிநுட்பமான செயல்பாடுகளின் மூலம் பொருள் வரவும், சேமிப்புகளும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : பொறுப்புகள் குறையும்.
பூரட்டாதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.


🕉️மீனம்
ஜனவரி 27, 2021
தை 14 – புதன்

புதிய வீடு வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கட்டிடம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : பொருள் சேர்க்கை உண்டாகும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
ரேவதி : சோர்வான நாள்.


About Author