🕉️மேஷம்
டிசம்பர் 31, 2020
மார்கழி 16 – வியாழன்
வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்துவந்த தடைகள் அகலும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : தடைகள் அகலும்.
பரணி : சுபிட்சம் உண்டாகும்.
கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
🕉️ரிஷபம்
டிசம்பர் 31, 2020
மார்கழி 16 – வியாழன்
மனதில் தைரியம் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். தந்தைவழி உறவுகளின் வழியில் கருத்து வேறுபாடுகள் குறையும். இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். சகோதரர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
ரோகிணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
மிருகசீரிஷம் : அங்கீகாரம் கிடைக்கும்.
🕉️மிதுனம்
டிசம்பர் 31, 2020
மார்கழி 16 – வியாழன்
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருள் வரவு மேம்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
திருவாதிரை : ஆரோக்கியம் மேம்படும்.
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
🕉️கடகம்
டிசம்பர் 31, 2020
மார்கழி 16 – வியாழன்
கூட்டாளிகளுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நெருங்கிய உறவினர்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். புதிய செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ஆயில்யம் : அனுபவம் கிடைக்கும்.
🕉️சிம்மம்
டிசம்பர் 31, 2020
மார்கழி 16 – வியாழன்
உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். வாழ்க்கைத்துணைவரிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : மாற்றமான நாள்.
பூரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
🕉️கன்னி
டிசம்பர் 31, 2020
மார்கழி 16 – வியாழன்
விளைநிலங்கள் சார்ந்த செயல்பாடுகளில் இலாபம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாகன வசதிகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : இலாபம் அதிகரிக்கும்.
அஸ்தம் : வசதிகள் மேம்படும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
🕉️துலாம்
டிசம்பர் 31, 2020
மார்கழி 16 – வியாழன்
அரசாங்கத்தின் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நிறைவேறும். வீடு மற்றும் வாகனம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
🕉️விருச்சகம்
டிசம்பர் 31, 2020
மார்கழி 16 – வியாழன்
எதிர்பார்த்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் திறமைகள் அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : ஆதரவு கிடைக்கும்.
🕉️தனுசு
டிசம்பர் 31, 2020
மார்கழி 16 – வியாழன்
செய்யும் செயல்களில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடியும் என நினைத்த காரியங்களில் காலதாமதம் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். உறவினர்களிடம் பொறுமை வேண்டும். பயணங்கள் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
🕉️மகரம்
டிசம்பர் 31, 2020
மார்கழி 16 – வியாழன்
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சில காரியங்களை திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உதவிகள் செய்யும்போது சிந்தித்து செய்வது நல்லது.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : காரியசித்தி உண்டாகும்.
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.
🕉️கும்பம்
டிசம்பர் 31, 2020
மார்கழி 16 – வியாழன்
விருப்பத்திற்கு மாறாக சில செயல்கள் நடந்தாலும் முடிவுகள் சாதகமாக அமையும். எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் ஏற்படும். தேவையான பண உதவிகள் சற்று காலதாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களின் மூலம் ஆதரவான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : கவலைகள் ஏற்படும்.
பூரட்டாதி : ஆதரவான நாள்.
🕉️மீனம்
டிசம்பர் 31, 2020
மார்கழி 16 – வியாழன்
தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் இலாபம் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : இலாபம் உண்டாகும்.
ரேவதி : ஆசைகள் தோன்றும்.