தவறாக அனுப்பிய பணத்தை திரும்பப் பெற

இன்று நம்மில் பலரும் யூபிஐ உபயோகித்து பணம் அனுப்புகிறோம். சில சமயம் பணம் அனுப்பும் சமயத்தில் தவறாக மற்றொருவருக்கு அனுப்பி இருப்போம். அதே போல் , பண மோசடியில் ( Scams)  சிக்கி பணத்தை இழந்திருப்போம்.

பொதுவாக, இத்தகைய தருணங்களில் காவல்துறை மற்றும் வங்கியின் உதவியை நாம் நாடுவோம். இது ஒரு நீண்ட நடைமுறை. உண்மையிலேயே, நாம் தவறான நபருக்கு பணத்தை அனுப்பியிருந்தால் அதை திரும்ப பெற நடவடிக்கைகள் இப்பொழுது எளிதாக்கப்பட்டுள்ளது.

பணத்தை திரும்பப் பெற தேவையானவை

  1. யாருக்கு பணம் அனுப்பினீர்கள்? தனி நபருக்கா அல்லது வியாபாரிக்கா?
  2. எந்த மாதிரி பிரச்சினை
  3. நீங்கள் பணம் அனுப்பியதற்கான டிரான்சாக்ஷேன் எண்
  4. உங்கள் கணக்கு இருக்கும் வங்கி பெயர்
  5. எவ்வளவு ரூபாய் அனுப்பினீர்கள்
  6. எந்த தேதியில் இது நடந்தது ?
  7. உங்கள் இமெயில் ஐடி

இந்த தகவல்கள் எடுத்து வைத்துக் கொண்டு இந்த தளத்திற்கு சென்று புகார் அளிக்கவும்.

உங்கள் புகார் விரைவில் சரி பார்க்கப்பட்டு உண்மையில் தவறு நடந்திருந்தால் மிக விரைவில் பணம் கிடைக்கும்

3 Replies to “தவறாக அனுப்பிய பணத்தை திரும்பப் பெற”

  1. கிட்டத்தட்ட 20,000 ரூபாய் அனுப்பி இருந்தேன்.. திரும்பி வர மாட்டேன் என்கிறது.

    ​ஸ்ரீராம்

  2. 20,000  ரூபாய் அனுப்பி விட்டு திரும்பப்பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.  இதுவரை கைகூடவில்லை.

    ஸ்ரீராம் 

Comments are closed.