தினசரி பூஜை – 10

அஷ்டாவிம்ʼஸ²திதமே கலியுகே³ ப்ரத²மே பாதே³…..
இருபத்தெட்டாவது கலியுகத்தின் முதல் கால்-பகுதியில் இருக்கிறோம்.

ஜம்பூ த்வீபே….
ஜம்பு த்வீபம் எனச்சொல்லப்படும் தீவில் இருக்கிறோம். மற்றவை: ப்லக்ஷம், ஶாகம், ஶால்மலி, குஶம், க்ரௌஞ்சம், புஷ்கரம் என்ற தீவுகள்.

பாரத வர்ஷே…
பாரதம், கிம்புருஷம், ஹரி, இலாவ்ருதம், ரம்யகம், ஹிரண்மயம், குரு, பத்ராஶ்வம், கேதுமாலம் என்பன ஒன்பது வர்ஷங்கள் (தீவுப்பகுதிகள்). [இவை முறையே, இந்தியா, இமயமலைப்பகுதி, அரேபியா, திபேத், ரஷ்யா, மஞ்சூரியா, மங்கோலியா, சைனா, துருக்கி என்று சிலர் கருதுகின்றனர்]

பரதக்கண்டே மேரோஹோ,….
பாரத வர்ஷத்தில் இந்த்ர, சேரு, தாம்ர, கபஸ்தி, நாக, ஸௌம்ய, கந்தர்வ, சாரண, பாரத என்ற ஒன்பது கண்டங்களின் (பிரதேசங்களின்) இடையே பரத கண்டத்தில் இருக்கிறோம்.

அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகாணாம்ʼ ப்ரப⁴வாதீ³னாம்ʼ ஷஷ்ட்யா​: ஸம்ʼவத்ஸராணாம்ʼ மத்⁴யே……

இப்போது புழக்கத்தில் இருக்கும் ப்ரபவ முதலிய அறுபது வருடங்களின் இடையில்….

About Author