.நாமஸம்ʼவத்ஸரே …அயனே …ருʼதௌ …மாஸே ஸு²க்லபக்ஷே பௌர்ணமாஸ்யாம்ʼ ஸு²ப⁴திதௌ² …வாஸரயுக்தாயாம்ʼ …நக்ஷத்ரயுக்தாயாம்ʼ …யோக³…கரணயுக்தாயாம் ஏவங்கு³ணவிஸே²ஷணவிஸி²ஷ்டாயாம் அஸ்யாம்ʼ பௌர்ணமாஸ்யாம்ʼ ஸு²ப⁴திதௌ²…
நாம ஸம்வத்ஸரே என்னும் இடத்தில் அந்தந்த வருஷத்தின் பெயரை சொல்ல வேண்டும்.
வருடம், அயனம், மாதம், பக்ஷம், திதி, நக்ஷத்திரம், வாரம், யோகம், கரணம் ஆகியவற்றை சரியாக முழு பட்டியலாக பார்க்க இங்கே செல்லவும்: http://tinyurl.com/rmdl3
அயனே என்னுமிடத்தில் தக்ஷிணாயனே அல்லது உத்தராயனே என்று தகுந்தபடி சொல்ல வேண்டும்.
ருதுக்கள் ஆறு. சித்திரை, வைகாசி – வசந்த ருது; ஆனி ஆடி – க்ரீஷ்ம ருது; ஆவணி புரட்டாசி – வர்ஷ ருது; ஐப்பசி, கார்த்திகை – சரத் ருது; மார்கழி தை – ஹேமந்த ருது; மாசி பங்குனி- சிசிர ருது.
மாதங்கள் சௌரமான மாதங்களே தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருக்கிறன. அவை மேஷம் முதல் மீனம் வரை.
தெலுங்கு மாதங்கள் என்று சொல்லப்படும் சாந்த்ரமான மாதங்கள் ‘சைத்ர’ முதல் ‘பால்குண’ வரை.
வளர் பிறை சுக்ல பக்ஷம்; தேய்பிறை க்ருஷ்ண பக்ஷம்.
சங்கல்பத்தில் சொல்லும் கிழமைகள் இப்படி: திங்கள் = சோம வாஸரம்; செவ்வாய் = பௌம வாஸரம்; புதன் = ஸௌம்ய வாஸரம்; வியாழன் = குரு வாஸரம்; வெள்ளி = ப்ருகு வாஸரம்; சனி = ஸ்திர வாஸரம்; ஞாயிறு = பானு வாஸரம்.
அடுத்து நக்ஷத்திரங்கள் அஶ்வினி முதல் ரேவதி வரை.
யோகங்கள் 27. கரணங்கள் 11.
பொதுவாக பலரும் சுப யோக சுப கரண என்று சொல்லிவிட்டு போய் விடுகிறார்கள். நல்ல யோகம் நல்ல கரணம் என்பது போல் தொனித்தாலும் பிரச்சினை ஒன்று இருக்கிறது. சுப யோகம் என்றே ஒரு யோகம் இருக்கிறது. அப்போது எல்லா நாளும் சுப யோகம் இருக்க முடியுமா?
சிரத்தை உள்ளவர் சரியான யோகம், கரணத்தை சொல்ல வேண்டும். அதற்கு பஞ்சாங்கம் பார்க்க தெரிய வேண்டும்.
எப்படி எனில்…