தினசரி பூஜை -12

வருஷம் தெரியாமல் இருக்காது. …. வருஷ பஞ்சாங்கம் என்றே போட்டு இருப்பார்கள்.

இப்போது இங்கே போட்டுள்ள படத்தை பாருங்கள். நம்மில் பலருக்கும் பழக்கமான பாம்பு பஞ்சாங்கத்தில் இருந்து ஒரு பக்கம்.
மேலே முதல் வரியை பாருங்கள்.

தினசரி பூஜை

நந்தன ௵ ஆவணி ௴ என்று இருக்கிறதா? இதற்கு பொருள் இது நந்தன வருஷம் ஆவணி மாதம். இந்த ஆவணி இப்போது நமக்கு வேண்டாம். வருஷத்துக்கு கீழேயே அயனம் இருக்கிறது. தக்‌ஷிணாயனம்.

அடுத்து ருது. அதற்கு அடுத்து சாந்த்ரமான மாதம் இருக்கிறது. அது வேண்டாம். நமக்கு சௌரமான மாதம் வேண்டும். சுலபமாக கண்டு பிடிக்க வலது பக்கம் பாருங்கள். ஒரு படம் போட்டு கீழே சிம்ம மூர்த்தி என்று எழுதி இருக்கிறது. ஆகவே இது சிம்ம மாதம்.

இப்போது முக்கிய பகுதியை பார்க்கலாம். வலது பக்கம் அதிக இடத்தை ஆக்கிரமிக்கும் கட்டம்.கருப்பு வட்டமான அமாவாசை எங்கு இருக்கிறது என்று பாருங்கள். அதே போல் வெள்ளை வட்டம் குறிக்கும் பௌர்ணமியையும். நாம் பார்க்கும் நாளுக்கு அடுத்து வருவது அமாவாசை என்றால் இது க்ருஷ்ண பக்‌ஷம். அடுத்து வருவது பௌர்ணமி என்றால் இது சுக்ல பக்‌ஷம். ஆமாம், பௌர்ணமி சுக்ல பக்‌ஷமா அல்லது க்ருஷ்ண பக்‌ஷமா? விடை இது வரை எழுதின பதிவுகளிலேயே இருக்கிறது. பார்த்துக்கொள்ளுங்கள்!

திதி அடுத்து. பிர என்பது பிரதமை, துவி என்பது துவிதியை; திரு திருதியை; சதுர் சதுர்த்தி. சதுற் என்பது சதுற்தசி, கவனம். இதே போல மற்றவையும்.

துவி, திரு போன்றவற்றுக்கு அடுத்து ஏதோ எண்கள் இருக்கின்றன. இது என்ன என்று விழிக்க வேண்டாம். இந்த திதி உதயம் முதல் எத்தனை நாழிகை இருக்கிறது என்று அது குறிக்கிறது. ஒரு நாளுக்கு 60 நாழிகை. அதனால் ஒரு நாழிகை 24 நிமிடம், கணக்கு சரியா சொல்லறேனா? ரொம்ப கஷ்டப்படாமல் 15 நாழிகை பகல் 12 மணி, 30 நாழிகை மாலை 6 மணி என்று வைத்துக்கொள்ளுங்கள். சந்தேகம் இருந்தால், நாம் சங்கல்பம் செய்யும் நேரம் அந்த திதி இருக்கிறதா என்று கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளலாம்.

அடுத்து நக்‌ஷத்திரம். இதுவும் சுருக்கமாகவே கொடுத்து இருக்கிறது. பட்டியலை பார்த்து எது என்று தெரிந்து கொண்டு அதற்கான சங்கல்ப நக்‌ஷத்திரத்தையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இது ஆரம்பத்தில் கஷ்டமாக தோன்றினாலும் நாளடைவில் பழகிவிடும். இந்த நக்‌ஷத்திரமும் எது வரை இருக்கிறது என்று நாழிகை கணக்கு கொடுத்திருக்கிறது. அடுத்து யோகமும் அது எது வரை என்றும் கொடுத்திருக்கிறது. அடுத்ததாக கரணம். ஒரு திதிக்கு 2 கரணங்கள். ஆகவே திதி முடியும் போது கரணமும் முடிந்து அடுத்த கரணம் துவங்கும். ஒரே திதியில் முன் பகுதி ஒரு கரணமும் பின் பகுதி ஒரு கரணமும் இருக்கும். கொஞ்சம் சிரமப்பட்டால் கண்டு பிடித்து விடலாம். இந்த சிரமப்படாமல் சோம்பேறித்தனம் மேலோங்கித்தான் யோகம் கரணம் சொல்லும் வழக்கம் விட்டுப்போயிற்று.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.