க⁴ண்டா பூஜா
மணியை சந்தனம் இட்டு, பூ சாற்றி, மணி அடித்து சப்தம் செய்க.
ஸ்லோகம்:
ஆக³மார்த²ம்ʼ து தே³வானாம்ʼ க³மனார்த²ம்ʼ ச ரக்ஷஸாம் |
குரு க⁴ண்டே வரம்ʼ நாத³ம்ʼ தே³வதாஸ்தா²னஸம்ʼனிதௌ⁴ ||
தேவர்கள் வரவும், ராக்ஷசர்கள் செல்லவும், மணி ஓசை எழுப்புவோம்; தேவர்கள் இங்கு இருக்கவும்.
ஆத்ம பூஜா:
தே³ஹோ தே³வாலய: ப்ரோக்தோ ஜீவோ தே³வ: ஸனாதன: |த்யஜேத்³ அஜ்ஞான நிர்மால்யம்ʼ ஸோ(அ)ஹம்ʼ பா⁴வேன பூஜயேத் ||
பொருள்: தேஹமே தேவாலயம்; ஜீவனே அனாதி தெய்வம்; அஞ்ஞானமாகிய நிர்மால்யத்தை (வாடிய பூவை) அகற்றி “ நானே அவன்” என்ற பாவனையுடன் பூஜிக்கவும்.
இப்படி சொல்லி மங்களாக்ஷதையை தன் தலையில் போட்டுக்கொள்ள வேண்டும்.
பீட² பூஜா:
அடுத்து ஸ்வாமியை வைக்கப்போகும் பீடத்துக்கு பூஜை. அக்ஷதை அல்லது பூக்களை பயன்படுத்தலாம்.
ஓம் ஸகல கு³ணாத்ம ஶக்தி யுக்தாய யோக பீட² ஆத்மனே நம:|
ஆதா³ர ஶக்த்யை நம:| மூலப்ரக்ருʼத்²யை நம: ஆதி³ வராஹாய நம: ஆதி³ கூர்மாய நம:
அனந்தாய நம: ப்ருʼதி²வ்யை நம:
ஆதி³த்யாதி நவ க்³ரஹ தே³வதாப்⁴யோ நம:
த³ஶ தி³க்³பாலேப்⁴யோ நம:
கு³ரு த்⁴யானம்ʼ :
கு³ருர்ப்³ரஹ்மா கு³ருர்விஷ்ணூ: கு³ருர்தே³வோ மஹேஶ்வர: | கு³ரு: ஸாக்ஷாத் பரப்³ரஹ்ம தஸ்மை ஶ்ரீகு³ரவே நம:
பொருள்: குருவே ப்ரம்ஹா, விஷ்ணு, மஹேஶ்வரன்; குருவே பரபிரம்ஹம். அப்படிப்பட்ட குருவை நமஸ்கரிக்கிறேன்.
சுத்தம் செய்த இடம் காய்ந்த பின் ஸ்வாமியை பெட்டியில் இருந்து வெளியே எடுத்து பீடத்தின் மீது வைக்கலாம்….