தினசரி பூஜை -17

பஞ்ச ன்னா ஐந்து. ஆயதனம் ன்னா இருப்பிடம். பஞ்சாயதனம் – இறைவனின் ஐந்து இருப்பிடங்கள்.

இப்ப நம்மிடம் இருக்கிறது ஐந்து மூர்த்தங்கள், கற்கள். சோனா பத்ரம் (பிள்ளையார்), ஸ்வர்ணரேகா (அம்பாள்), சாலக்ராமம் (விஷ்ணு), ஸ்படிகம் (சூரியன்), பாணலிங்கம் (சிவன்).

இவற்றை எங்கே வைக்கிறது? கீழே கொடுத்திருக்கிறபடி. பக்கத்தின் மேலே கிழக்கு திசைன்னு வெச்சுக்கலாம். அனேகமா அப்படித்தானே உக்காருவோம்?

கிழக்கு
ஈசானம் அக்னி மூலை
மையம்
வாயு மூலை நிர்ருதி

இப்ப கீழே இருக்கிற அமைப்பதை பார்க்கவும். எந்த வித பஞ்சாயதனம் எப்படி அமைக்கிறதுன்னு புரிஞ்சுக்கலாம்.

சிவன் பஞ்சாயதனம்
விஷ்ணு சூரியன்
சிவன்
அம்பாள் கணபதி
விஷ்ணு பஞ்சாயதனம்
சிவன் கணபதி
விஷ்ணு
அம்பாள் சூரியன்
ஆதித்ய பஞ்சாயதனம்
சிவன் கணபதி
சூரியன்
அம்பாள் விஷ்ணு
அம்பாள் பஞ்சாயதனம்
விஷ்ணு சிவன்
அம்பாள்
சூரியன் கணபதி
கணபதி பஞ்சாயதனம்
விஷ்ணு சிவன்
கணபதி
அம்பாள் சூரியன்

About Author