மேஷம்*
தின ராசிபலன் செப்டம்பர் 14
ஆவணி 29 – திங்கள்
சேமிப்புகள் உயருவதற்கான சாதகமான நிலை அமையும். குடும்பத்தில் கலகலப்பான சூழலால் மகிழ்ச்சி உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வாகனப் பயணங்களின் மூலம் இலாபம் மேம்படும். தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை : இலாபம் மேம்படும்.
🕉️ரிஷபம்
தின ராசிபலன் செப்டம்பர் 14
ஆவணி 29 – திங்கள்
தர்க்க விவாதங்களின் மூலம் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். இளைய சகோதரர்களின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகள் எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
ரோகிணி : தனலாபம் அடைவீர்கள்.
மிருகசீரிஷம் : சுபவிரயங்கள் உண்டாகும்.
🕉️மிதுனம்
தின ராசிபலன் செப்டம்பர் 14
ஆவணி 29 – திங்கள்
வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். பணியில் தாமதப்பட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். இறைவழிபாடு மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் எதிர்பார்த்த தனவரவுகள் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மிருகசீரிஷம் : கீர்த்தி உண்டாகும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : காரியசித்தி உண்டாகும்.
🕉️கடகம்
தின ராசிபலன் செப்டம்பர் 14
ஆவணி 29 – திங்கள்
பிரபலமானவர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் மந்தத்தன்மையால் காலதாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூசம் : இழுபறிகள் அகலும்.
ஆயில்யம் : காலதாமதம் ஏற்படும்.
🕉️சிம்மம்
செப்டம்பர் 14, 2020
ஆவணி 29 – திங்கள்
போட்டிகளில் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும். கல்லூரி மேற்படிப்பிற்கான சுபவிரயங்கள் உண்டாகும். மற்றவர்களின் சில பணிகளை மேற்கொள்வீர்கள். மற்றவர்களுக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுக்களால் நற்பலன்கள் உண்டாகும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மகம் : வெற்றி கிடைக்கும்.
பூரம் : சுபவிரயங்கள் ஏற்படும்.
உத்திரம் : நற்பலன்கள் உண்டாகும்.
🕉️கன்னி
தின ராசிபலன் செப்டம்பர் 14
ஆவணி 29 – திங்கள்
மூத்த சகோதரர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும். ஆராய்ச்சி பணியில் சாதகமான சூழல் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான பணிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : மனக்கசப்புகள் குறையும்.
அஸ்தம் : உறவுநிலை மேம்படும்.
சித்திரை : சாதகமான நாள்.
🕉️துலாம்
செப்டம்பர் 14, 2020
ஆவணி 29 – திங்கள்
பூர்வீக சொத்துக்களால் இலாபம் உண்டாகும். நிர்வாகத்தில் தனித்திறமை புலப்படும். உறவினர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். போக்குவரத்து தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தனவரவுகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : இலாபம் உண்டாகும்.
சுவாதி : தனித்திறமை புலப்படும்.
விசாகம் : தனவரவுகள் மேம்படும்.
🕉️விருச்சகம்
செப்டம்பர் 14, 2020
ஆவணி 29 – திங்கள்
பணிகளில் உள்ள பல மறைமுக பிரச்சனைகளை தெரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். உறவுகளிடத்தில் ஆதரவு கிடைக்கும். தந்தை பற்றிய கவலைகள் மேலோங்கும். மூலிகையால் இலாபம் கிடைக்கும். விவசாய பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : துரிதம் உண்டாகும்.
அனுஷம் : கவலைகள் மேலோங்கும்.
கேட்டை : ஆதரவு கிடைக்கும்.
🕉️தனுசு
செப்டம்பர் 14, 2020
ஆவணி 29 – திங்கள்
சிறு ஞாபகமறதி உண்டாகும். பெரியோர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். திறமைக்கேற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : ஞாபகமறதி உண்டாகும்.
பூராடம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
உத்திராடம் : காலதாமதமாகும்.
🕉️மகரம்
செப்டம்பர் 14, 2020
ஆவணி 29 – திங்கள்
தொழில் சம்பந்தமான பயணங்களால் நன்மை உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். பொருளாதார உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : நன்மை உண்டாகும்.
திருவோணம் : சிந்தனைகள் தோன்றும்.
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.
🕉️கும்பம்
செப்டம்பர் 14, 2020
ஆவணி 29 – திங்கள்
கடல்மார்க்க வியாபாரங்களில் ஈடுபடுபவர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய வீடு வாங்குவதற்கான முயற்சிகள் உண்டாகும். மனதில் தேவையற்ற கவலைகளால் சோர்வு அடைவீர்கள். கையாளும் பொருட்களில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாலின மக்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : சோர்வு உண்டாகும்.
பூரட்டாதி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
🕉️மீனம்
செப்டம்பர் 14, 2020
ஆவணி 29 – திங்கள்
எதிர்பார்த்த புதிய பணிக்கான வாய்ப்புகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : ஆசிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.
ரேவதி : பாராட்டுகள் கிடைக்கும்.