இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரங்களிலும் பிறந்தவர்களைக் குறித்த பொது இயல்புகளைக் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன். அந்த வரிசையில் இன்று பூராடம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது இயல்புகள் குறித்த “ஜாதக அலங்காரம்” எனும் ஜோதிஷ நூலில் காணப்படும் பாடலைக் கவனிக்கலாம்
மெய்ந்நெடியன் சிறு நெற்றியான் வாசப் பிரியன்விசாரமுள்ள
அரசர் நண்பன் மேல்கருமம் பார்ப்பான்செய் சிற்றுண்டிப்
பிரியன் மாதாவுக்கு இனியன்சேர்ந்தவரை ரட்சிப்பவன் சிவந்த
சிறு விழியன்கைகாலும் நீட்சியுள்ள சவுந்தரியன்
விசாலன்கள்வனாம் வீரியவான் கரங்கள் புயன் வலியன்பொய்
சொல்லான் சஞ்சாரப் பிரியன்மின்னார்க்கு இனியன்பொழிதான
வானாகு பூராடத்தானே
பூராட நஷத்திரத்தில் பிறந்தவர்க:ள்
உயரமானவர்கள்
நெற்றி சிறுத்து குறுகலாக இருக்கும்
வாசனை திரவியங்களிலும், சந்தனம் போன்ற நறுமணத்திலும் பிரியமுள்ளவர்கள்
ஆட்சி செய்கின்றவர்களிடத்தில் நட்பு கொண்டவர்களாக இருப்பார்கள்
சிற்றுண்டி விருப்பம் இருக்கும்
தாய் விரும்பும் செல்லப் பிள்ளையாக இருப்பார்கள்
தன்னைத் தேடி வந்தவர்களுக்கு பொறுப்புடன் உதவுவார்கள்
கண்கள் சிவப்பாகவும் சிறுத்தும் இருக்கும்
கைகள் கால்கள் நீண்டிருக்கும்
மார்பு பரந்திருக்கும்
முகமும் பரந்த முகம்
தோள்கள் அகலமாகவும் பரந்தும் இருக்கும்., தோள் வலிமை கொண்டவர்கள்
கறுப்பானவர்கள்
துணிச்சல் அதிகம் உண்டு
பொய் சொல்வதற்கு கூச்சப்படுவார்கள்
ஊர் ஊராக பிரயாணம் செய்வதில் விருப்பம் இருக்கும்
பூராடம் ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்கும்
கர்வமும் நிலைத்த நட்பும் கொண்டவர் என ப்ருஹத் ஜாதகம் எனும் நூலில் குறிப்பு இருக்கிறது.
9840656627
இதற்கு முந்தைய நட்சத்திரம் மூலம்