இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரங்களிலும் பிறந்தவர்களைக் குறித்த பொது இயல்புகளைக் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன். இன்று உத்திராடம் நட்சத்திரம்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது இயல்புகள் குறித்த “ஜாதக அலங்காரம்” எனும் ஜோதிஷ நூலில் காணப்படும் பாடலைக் கவனிக்கலாம்
தத்தைமார்க்கு இனியன் முகத்துறு மறுவன்சரீரமுங் கெட்டியான்
பலவான்புத்திமான் உயர்ந்த நாசிநல் வசனன்போசனப்பி
ரியன்நீர்க்கு அஞ்சான்பத்திமான் உறவுக்கு இனியன்வன்
வர்ம்மிபார்பொருள் வேண்டிடாத தூயன்உத்தமர்க்கு இனியன்
நிறைந்த சொல் தியாகிஉன்னுமுத்தி ராடத்தினானே
1. தனக்கு முன் பிறந்த அக்காக்களுக்கு இனியவர்கள்
2. முகத்தில் மறு இருக்கும்
3. உடல் நல்ல வலிமையாக இருக்கும்
4.கூர்மையான அறிவு கொண்டவர்கள்
5, மூக்கு நீளமாக இருக்கும்
6. கோர்வையாக நல்லவிதமாக சாமர்த்தியமாகப் பேசத் தெரிந்தவர்கள்
7. நீர் விளையாட்டுகள் மீது ஆர்வம் இருக்கும்
8. இறை வழிபாடு கொண்டவர்கள்
9. நண்பர்கள் மீது மரியாதை இருக்கும்
10. பிறர் பொருளுக்கு ஆசைப்படமாட்டார்கள்
11. வைராக்கியம் அதிகம் அல்லது பிடிவாதம் என்றே சொல்லலாம்
9840656627
இதற்கு முந்தைய நட்சத்திரம் பூராடம்