இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரங்களிலும் பிறந்தவர்களைக் குறித்த பொது இயல்புகளைக் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன். இன்று அவிட்டம் நட்சத்திரம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது இயல்புகள் குறித்த “ஜாதக அலங்காரம்” எனும் ஜோதிஷ நூலில் காணப்படும் பாடலைக் கவனிக்கலாம்
நெறிபெருங் கருமந்தன் சொல் மேல் ஆனோன்நின்றவர்க்கு
அஞ்சிடான் தியாகிஉறுபுற அடி நாசியும் உயர்ந்திருப்பான்ஒருவர்
சொல் பொறான் நல்லூண் பிரியன்பெறுமவர்க்கு இனியன்
மடந்தையர்க்கு அன்பன்பெரும் பொருள் தேடுவான்
அழகன்அறிவுடன் அடங்கிப் பிறர்பொருள் வவ்வான்அவிட்ட நட்சத்திரத்தானே
1. ஒழுங்காக பெரிய வேலைகளையும் சிறப்பாக முடிக்கத் தெரிந்தவர்கள்
2. பிறர் மதிக்கும்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர்கள்
3. பயம் இருக்காது. அதுவும் யாரை எதிர்ப்பதற்கு என்றாலும் யோசிக்க மாட்டார்கள்
4. புறம் காலும் மூக்கும் எடுப்பாக இருக்கும்
5. யாராவது கடும் சொல்லோ, கேலியோ பேசினால் பொறுத்துக் கொள்ளும் தன்மை குறைவாக இருக்கும்
6. சமைத்துப் பார்ப்பதிலும், சமைத்துக் கொடுப்பதிலும், வித விதமான உணவு தயாரிப்பதிலும் ஈடுபாடு இருக்கும்
7. சின்ன அளவில் பொருள் சேர்ப்பது என்றில்லாமல் பெரிய அளவில் தான் திட்டங்கள் வைத்திருப்பார்கள்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது இயல்புகள் என்பதாக ப்ருஹத் ஜாதகம் எனும் ஜோதிஷ நூல் சொல்லியுள்ள விஷயங்களும் இதே தான். கூடுதலாக பிறருக்கு கொடுக்கும் போது யோசித்து சரி பார்த்துக் கொடுப்பார்கள் என்றும் ஆனால் தேவையான நேரத்தில் தேவையான உதவி செய்வதில் வல்லவர்கள் என்றும் சொல்லியுள்ளது
9840656627
இதற்கு முந்தைய நட்சத்திரம் திருவோணம்