நட்சத்திர பொது குணங்கள் சதயம்

இருபத்தியேழு நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரங்களிலும் பிறந்தவர்களைக் குறித்த பொது இயல்புகளைக் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன். இன்று சதயம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொது இயல்புகள் குறித்த “ஜாதக அலங்காரம்” எனும் ஜோதிஷ நூலில் காணப்படும் பாடலைக் கவனிக்கலாம்


பத்தியில்லாமல் வெகுண்ட சொல் பொறாதவன்பழுதில்லா ரோகவான் இனியன்புத்திமான் கைகால் வலியன் வாய் அழகன்பொய்பொறான் மன்னவர்க்கு இனியவன்வித்துவான் சூரன் மாதர்க்கு அன்பன்மிகுந்த நீர் ஆடவும் பிரியன்சத்துரு சயன்பொன் உளன்வழக்கு உரைப்பன்சதயநட்சத்திரத்தானே

1. முறையானவர்கள் கருத்து சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள்

2. ஆனால் முறையற்றவர்கள் கருத்து சொன்னால் அவர்களிடம் கோபமாக சண்டைக்குப் போவார்கள்

3. சிறு சிறு நோய்கள் , விபத்துகள் தொந்தரவு இருக்கும்

4. வலுவான கை கால்கள்

5. பொய் பேசாதவர்கள்

6. அரசர்களுக்கும் பதவியில்
இருப்பவர்களுக்கும் எது பிடிக்கும் என்பது இவர்களுக்குத் தெரியும்

7. தனக்க்கு பகைவர்களைத் தந்திரமாக விலக்கவும் வெற்றி கொள்ளவும் தெரிந்தவர்கள்

இதே இயல்புகளைச் சொல்லும் ப்ருஹத் ஜாதகம் எனும் நூல் மேலும் ஒரு இயல்பைச் சுட்டிக் காட்டுகிறது

பகைவரை தந்திரமாக விலக்கினாலும் பின் விளைவுகளை அந்த நேரத்தில் ஆலோசிக்க மாட்டார்கள் என்பது அந்த குறிப்பு

சந்திரமௌலீஸ்வரன் விஸ்வநாதன்

9840656627

இதற்கு முந்தைய நட்சத்திரம் அவிட்டம்

About Author