நட்சத்திர வரிசையில் அடுத்து ரோகிணி
நீரதிக தாகமுளன் சொன்னது கேட்பான்
புலவன் நிருபன் ஆகும்
பாரன் அன்னமிடுஞ்சீமான் மான் இரும்பு வியா
பாரி நெய் பால் பட்சம் உள்ளான்
சேருமிரு விழிபருத் துப்புரு வமும்சற்றே
நெருங்கும் நேயன் என்றும்
ஓரமுரை யானுள் ளங்கால் உரைத்தோன்
திடநடை ரோகிணி யினானே
தண்ணீர் அதிகம் குடிப்பார்கள்
பிறர் சொல்லுக்கு அதிகம் மதிப்பு தருவார்கள்
கல்வி அறிவு அதிகம். செல்வ வாழ்க்கை வாழ்வார்கள்.
அன்னதானம் செய்யும் மனது இருக்கும்
இரும்பு வியாபாரம் செய்யக் கூடும்
நெய், பால், தயிர் போன்றவற்றில் ஆர்வம் இருக்கும்
இரு புருவமும் இணைந்திருக்கும்
வஞ்சகம், பொய் சாட்சி இதெல்லாம் சொல்லத் தெரியாது
உள்ளங்கால் தரையில் படும் வண்ணம் நடப்பார்கள்
9840656627
நட்சத்திர பொது குணங்கள் – கார்த்திகை