🕉️மேஷம்
நவம்பர் 07, 2020
ஐப்பசி 22 – சனி
உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணங்கள் ஈடேறும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் திருப்தியான மனநிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
🕉️ரிஷபம்
நவம்பர் 07, 2020
ஐப்பசி 22 – சனி
குடும்ப பெரியவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
ரோகிணி : தனவரவுகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : தடைகள் அகலும்.
🕉️மிதுனம்
நவம்பர் 07, 2020
ஐப்பசி 22 – சனி
உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் புதுவிதமான எண்ணங்களும், முயற்சிகளும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : ஒற்றுமை மேம்படும்.
திருவாதிரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : புதுவிதமான நாள்.
🕉️கடகம்
நவம்பர் 07, 2020
ஐப்பசி 22 – சனி
புதிய பயணங்களின் மூலம் அனுபவங்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வர்த்தகம் சம்பந்தமான முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். பங்காளி வகை உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும்.
பூசம் : பொறுப்புகள் குறையும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
🕉️சிம்மம்
நவம்பர் 07, 2020
ஐப்பசி 22 – சனி
பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபம் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : இலாபகரமான நாள்.
பூரம் : தீர்வு கிடைக்கும்.
உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
🕉️கன்னி
நவம்பர் 07, 2020
ஐப்பசி 22 – சனி
வாகனப் பயணங்களின் மூலம் இலாபம் மற்றும் அனுபவம் கிடைக்கும். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.
சித்திரை : சாதகமான நாள்.
🕉️துலாம்
நவம்பர் 07, 2020
ஐப்பசி 22 – சனி
உறவினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தகவல் தொடர்புத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். மனை தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
🕉️விருச்சகம்
நவம்பர் 07, 2020
ஐப்பசி 22 – சனி
விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். புதிய நபர்களிடம் உரையாடுவதை தவிர்ப்பது நன்மையளிக்கும். முயற்சிக்கேற்ற அங்கீகாரங்கள் தாமதமாக கிடைக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் அலைச்சலும், உடல் சோர்வும் ஏற்பட்டு மறையும். புதிய முடிவுகளை சற்று சிந்தித்து செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : அங்கீகாரம் தாமதமாகும்.
கேட்டை : சோர்வு உண்டாகும்.
🕉️தனுசு
நவம்பர் 07, 2020
ஐப்பசி 22 – சனி
மனதில் புதுவிதமான சிந்தனைகளால் சஞ்சலங்கள் ஏற்பட்டு மறையும். புதிய நபர்களின் அறிமுகங்களால் மாற்றங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையும், அன்பும் அதிகரிக்கும். வாக்குவாதங்களின் மூலம் சில விஷயங்களை சாதகமாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வதன் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : அறிமுகம் கிடைக்கும்.
பூராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.
🕉️மகரம்
நவம்பர் 07, 2020
ஐப்பசி 22 – சனி
உத்தியோகம் தொடர்பான கோப்புகளை கையாளும்போது கவனம் வேண்டும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் பணிகளில் காலதாமதம் ஏற்படும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : கவனம் தேவை.
திருவோணம் : நிதானம் வேண்டும்.
அவிட்டம் : சுபிட்சமான நாள்.
🕉️கும்பம்
நவம்பர் 07, 2020
ஐப்பசி 22 – சனி
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மூத்த அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் திறமைகள் வெளிப்பட்டு அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.
சதயம் : திறமைகள் வெளிப்படும்.
பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
🕉️மீனம்
நவம்பர் 07, 2020
ஐப்பசி 22 – சனி
உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும். கால்நடைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு மனத்தெளிவை ஏற்படுத்தும். தொழில் தொடர்பான கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : ஆதரவான நாள்.
உத்திரட்டாதி : மனத்தெளிவு உண்டாகும்.
ரேவதி : சாதகமான நாள்.