நித்ய யோகம்
ஒரு ஜாதகரின் ஜனன காலத்தில் வான் வெளியில் கிரஹங்களின் நிலையினைக் குறித்து பதிவு செய்யும் புனிதமான டாக்குமெண்ட் என ஜாதகத்தினைச் சொல்லலாம்அதில் பிறந்த குறிப்புகளைப் பொதுவாக இப்படி எழுதுவதைக் கவனித்திருக்கலாம்தஷிணாயன காலத்தில் வியாழன் சிம்ம ராசியிலும், சனி மேஷ ராசியிலும் நிற்க தமிழ் வருடம் ஆடி மாதம் 10 ம் தேதி வியாழக் கிழமை சூரிய உதயத்துக்குப் பின் 1 நாழிகை 42 விநாடி சென்ற பொழுது பூசம் நட்சத்திரத்தில் ஒன்றாம் பாதமும் க்ருஷ்ண பஷம் அமாவாசை திதியில் நாகவ கரணமும் வஜர நித்ய யோகமும் கூடிய தினம் கடக ராசியில் சிம்ம நவாம்சத்தில் சந்திரன் நிற்க கடக லக்கினத்தில் மத்திய த்ரேக்கானம் கொண்டு ஆண் குழந்தை ஜனனம்( குறிப்பு : மேற்கண்ட விவரங்கள் எனது ஜாதகத்துக்கானவை ) இதில் காணப்படும் நித்ய யோகம் என்பது தான் ராம்கி கேட்கும் வார்த்தை எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன்.
திதி என்பதை சூரியனுக்கு சந்திரனுக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறிக்கும் கணக்கு என்பதை கரணம் தொடர்பாக விளக்கும் போது கவனித்தோம்நித்ய யோகங்களும் அப்படியே சூரியனுக்கும் சந்திரனுக்கும் இருக்கும் இடைவெளி தான். ஆனால் சூரியனின் Longitude ( தீர்க்க ரேகை) சந்திரனின் Longitude ( தீர்க்க ரேகை) கொண்டு கணக்கிடப்படும் முறைராசி மண்டலத்தில் 360 டிகிரியினை 27 ஆல் வகுக்க வருவது 13 டிகிரி 20 நிமிடங்கள் சூரியனின் Longitude + சந்திரனின் Longitude என கூட்டி வரும் தொகையினை இந்த 13 டிகிரி 20 நிமிடங்களால் வகுத்தால் வரும் 27 விடைகளைத்தான் நித்ய யோகங்களாக சூரிய சித்தாந்தம் எனும் ஜோதிட முறை அனுசரிக்கிறதுஅவற்றின் பெயர்களை மட்டும் இப்போது தெரிந்து கொள்வோம்.
விஷ்கும்ப யோகம்
ப்ரீதி யோகம்
ஆயுஷ்மான் யோகம்
சௌபாக்கிய யோகம்
சோபன யோகம்
அதிகண்ட யோகம்
சுகர்ம யோகம்
த்ருதி யோகம்
சூல யோகம்
கண்ட யோகம்
விருத்தி யோகம்
துருவ யோகம்
வியாகத யோகம்
ஹர்ஷன யோகம்
வஜ்ர யோகம்
சித்தி யோகம்
வியதி பாத யோகம்
வரியான் யோகம்
பரிக யோகம்
சிவ யோகம்
சித்த யோகம்
சாத்திய யோகம்
சுப யோகம்
சுக்ல யோகம்
பிரம்ம யோகம்
இந்திர யோகம்
வைத்திருதி யோகம்
நான் பிறந்த நேரத்து வஜ்ர யோகம் என்பது சூரியனின் Longitude + சந்திரனின் Longitude என கூட்டி வரும் தொகையினை இந்த 13 டிகிரி 20 நிமிடங்களால் வகுத்தால் வரும் டிகிரியானது 186 டிகிரி 40 விநாடிக்கும் 200 டிகிரிக்கும் இடையே வருகிறது அது வஜ்ர யோகப் பிரிவு. இந்த யோகங்களில் சுப யோகங்கள் , அசுப யோகங்கள் என பிரிக்கப்பட்டுள்ளன .
பழமையான ஜோதிஷ நூல்களில் எவை சுப யோகங்கள் எவை அசுப யோகங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளதில் நூலுக்கு நூல் வேறுபாடுகளும் உள்ளன இந்த நித்ய யோகத்தினைக் கொண்டு சுருக்கமாகப் பலன் சொல்லும் முறையும் உண்டு. நான் பிறந்த நித்ய யோகத்திற்கான வஜ்ர யோகத்துக்கான பொது பலனை கவனிப்போம்.
எந்தக் காரியத்திலும் கவனமுடன் செயல்படுவீர்கள்.இளமைப் பருவத்தில் பல சச்சரவுகளை சந்திப்பீர்கள்.பிறரிடம் குறை காணும் பழக்கம் உண்டு.மற்றவர்களின் மேன்மையினைப் பாராட்ட பழகிக் கொள்ளும் போது சிறப்புகள் வரும்
தொடரின் அனைத்து பகுதிகளையும் படிக்க