மிதுன ராசி

மிதுன ராசி(மிருகசீரிடம் 3,4 , திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதம் முடிய)–60/100

அஷ்டம சனி ஆரம்பம், இது பெரிய கஷ்டத்தை தங்களுக்கு தராது காரணம் குருபகவான் மற்றும் மற்ற கிரஹங்களின் சஞ்சாரங்கள், உங்களுடைய வீக்னஸே எது பலம் எது பலவீனம் என்று அறியாமல் இருப்பதுதான் அதை அறிந்துவிட்டீர்கள் என்றால் அஷ்டம சனியை கஷ்டமில்லாமல் கடந்து விடலாம்.  இந்த சனிபகவான் பெயர்ச்சி உங்களுக்கு சோதனையான காலம், கடுமையான பயிற்சிகள் இருக்கும். பொருளாதாரம் நன்றாக இருந்தாலும் செலவுகளும் தாராளம், சனிபகவான் 2020 ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் குருபகவானோடு சேர்ந்து சிக்கல்களையும், வருமான தடையையும் ஏற்படுத்துவார், மேலும் நண்பர்கள் அல்லது உறவினர் மூலம் பண தொல்லையும், வழக்குகளையும் கொடுத்து சங்கடப்படுத்துவார் இருந்தாலும் உங்கள் ஜனன ஜாதகத்தில் சனிபகவான் நன்றாக இருந்தால் இவற்றின் தாக்கம் குறைவாக இருக்கும். சமாளித்து விடுவீர்கள், புதிய முயற்சிகள் ஓரளவு பலன் தரும். ஏற்கனவே செய்து கொண்டிருக்கிற முயற்சிகளும் ஓரளவு வெற்றியை தரும். 2022 ஜூலைக்கு பின் மிக நல்ல நிலை உண்டாகும்.

உடல் நலம் ஆரோக்கியம்:

அஷ்டம சனி தொடங்கவுள்ளதால் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்களின் உடல்நலத்திலும் அக்கறை எடுத்துகொள்ள வேண்டும், 2020ல் மிதமாகவும், 2021ல் கொஞ்சம் கடுமையாகவும், 2022 & 2023 பரவாயில்லை என்று சொல்லும்படியாக ஆரோக்கிய பாதிப்புகள் இருக்கும். தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ளவேண்டும். 2021 ஜனவரி முதல் ஜூலை வரைதான் கொஞ்சம் அதிக பாதிப்பு இருக்கும். அசிரத்தையாக இருக்ககூடாது சனி என்பதால் எலும்பு சம்பந்தபட்ட பிரச்சனைகளும் முன்னர் இருந்த சிறு பாதிப்புகள் அதிகமாகவும் இருக்கும். தியானப்பயிற்சி சரியான ஆகாரப்பயிற்சி மருத்துவ சிகிச்சைஎடுத்து கொண்டால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது.

குடும்பம் மற்றும் உறவுகள்:

முன்பை விட அதிக சந்தோஷம் குடும்ப உறவுகளிடையே இருக்கும்.கணவன் மனைவி ஒற்றுமை, வேலை நிமித்தமாக பிரிந்து இருந்தால் இந்த வருடம் சேர்ந்து இருக்கிற நிலை உண்டாகும்.பெற்றோர் சகோதரம் மற்ற உறவுகளிடம் கூட அதிக அக்கறையுடன் ஒற்றுமையுடனும் இருக்கலாம். அதே நேரம் டிசம்பர் 2020 – ஏப்ரல் 2021 மற்றும், அக்டோபர்/நவம்பர் 2021ல் ,டிசம்பர் 2022ல் கொஞ்சம் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும். உறவுகளிடம் வாக்குவாதம் கூடாது. தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ பிரிவு ஏற்படும். அதனால் மனகசப்புகள் உண்டாகும், சனிபகவானின் வக்ரகாலங்கள் (முன்னுரையில்கொடுத்துள்ளேன்) போது கொஞ்சம் அதிக கவனம் தேவை. மற்றபடி வார்த்தைகளை அளந்து பேசினால் பெரிய பிரச்சனை இல்லை.

வேலை/உத்தியோகம்:

அஷ்டம சனி இந்த ஆண்டு துவக்கத்தில் பெரிய பிரச்சனை ஏதும் தராது எனினும் கடுமையாக உழைக்கவேண்டி இருக்கும், பதவி உயர்வு சம்பள உயர்வு அல்லது வேறு நல்ல வேலை முயற்சி போன்றவை மார்ச் 2020ல் நிறைவேற வாய்ப்புகள் உள்ளன. அதே நேரம் வீண் வாதங்களை தவிர்த்து விரும்பாத இடமாற்றம் அல்லது வேலையில் அதிக தொந்தரவுகள் இருந்தாலும் பொறுத்து கொண்டு போவது நல்ல பலனை தரும். 2022ல் சனிபகவான் அதிசாரமாக 9ம் இடத்துக்கு பெயரும் போது உழைப்பிற்கான சரியான ஊதியத்தை பெறுவீர்கள்.அப்போதுவெளிநாட்டு வேலை, அல்லது நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். இருந்தாலும் மிககவனமாய் இருக்க வேண்டிய நேரம் மார்ச் 2021 மற்றும் அக்டோபர் 2021 அலுவலகத்தில் நடக்கும் அரசியல் சூழ்ச்சியால் வேலை இழக்கநேரிடும். சவால்களை சந்திப்பது சற்று சிரமமாய் இருக்கும். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு கலவையான பலனை தரும்.

தொழிலதிபர்கள்:

வருட ஆரம்பம் நன்றாக இருப்பதால் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் புதிய முயற்சிகள் தொழில் விஸ்தரிப்பு நன்றாக இருக்கும். ஆனாலும் சனி வக்ரசஞ்சார காலங்களில் கவனம் தேவை. கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்ளவும் எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். அரசாங்க தொல்லையும் வரும். டிசம்பர் 2020க்கு பின் புதிய தொழில் தொடங்குவது நல்லதல்ல. தொழிலாளர்களால் பிரச்சனை உண்டாகும், இருந்தாலும் 2022ல் அதிசாரமாக சனிபகவான் 9ம் இடத்துக்கு போகும்போது நிம்மதி பெருமூச்சுவிடுவது போல நன்மைகள் நடக்கும். இந்த சனிப்பெயர்ச்சி நன்மையும் தீமையும் கலந்து தருவதால் எப்பொழுதும் கவனத்துடனே செயல்படுவது,நல்ல ஆலோசகரை நியமித்து கொள்வது நல்லது.

மாணவர்கள்:

இந்த 3 ஆண்டுகளில் பெரும் சவால்களை சந்திக்க நேரிடும். கடந்த வருடம் செய்த தவறுகளை திருத்தி கொள்வீர்கள். இருந்தாலும் கொஞ்சம் சிரமப்பட்டு படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர்கள்,ஆசிரியர் அறிவுரைப்படி நடப்பது நலம் தரும். டிசம்பர் 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலும் அதிக கவனத்துடனும்,எச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது. மற்றபடி படிப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள், மேல்படிப்பு சிறு தடங்கல் இருந்தாலும் முடித்துவிடுவீர்கள்,. விரும்பிய பாடம் விரும்பிய கல்லூரி என்று கிடைப்பது கொஞ்சம் சிரமம். நண்பர்களை தேர்ந்தெடுப்பதிலும் அதிககவனம் செலுத்துங்கள், விளையாட்டு பந்தயங்களிலும் கடும்முயற்சிக்கு பின்னரே வெற்றிகிடைக்கும். நல்லாசிரியர் ஒருவரை ஆலோசனைக்காக வைத்திருங்கள்.

கலைஞர்கள்/அரசியல்வாதிகள் / விவசாயிகள்:

இரண்டுவிதமாக இருக்கும். அக்டோபர் 2020க்கு முன் நல்லது நடந்தால் ஜூலை 2022 வரை கவனமாக இருக்கவேண்டும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தள்ளிப்போகும். கலைஞர்களும் சரி அரசியல்வாதிகளும் சரி, மிககவனத்துடன் எதையும் அணுக வேண்டும். மேலிடத்தில் பகைத்து கொள்ளாமல் இருப்பதும், தொண்டர்கள் ரசிகர்களை தக்கவைத்து கொள்ளவும் அதிகமுயற்சி தேவைபடும். நன்மை தீமை இரண்டும் கலவையாக இருப்பதால் இறை நம்பிக்கையை கை கொண்டால் பெரும் தீமைகளை தடுத்துவிடலாம். பதவி புகழ் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். விவசாயிகள் பணப்பயிர்களால் லாபம் அடைந்தாலும், சகவிவசாயியுடன் வாக்குவாதம் வேண்டாம். வழக்குகள் சாதகமாய் இருந்தாலும் புதிய வழக்குகளில் சிக்காமல் இருக்க முயற்சிக்கவேண்டும். வீண்விவாதங்களை தவிர்ப்பதும், கால்நடைகளை சரியான வைத்தியம் செய்வதும் நலம் தரும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்படியான சம்பவங்களும்நடக்கும்.

பெண்கள்:

கலந்த கலவையான பலன்கள் இந்த சனிப்பெயர்ச்சியில் உண்டாகும். அனைத்து பிரிவு பெண்களும்முக்கியமாக செய்யவேண்டியது வீண் வாதங்களை தவிர்ப்பது, அவசரப்படாமல் இருப்பது, வக்ரசனி சஞ்சாரகாலங்களில் குடும்பத்தினரிடம் அனுசரித்துபோவது நல்லதைதரும். அக்டோபர் 2020ல் புனித யாத்திரை செல்ல வாய்ப்பு வரும். உழைக்கும் பெண்கள் தங்கள் மேலதிகாரிகளிடம் அனுசரனையாக நடந்து கொள்வதும், சகதொழிலாளியுடன் வாதங்கள் செய்யாமல் இருப்பதும் மிகுந்த நன்மை தரும்.

ப்ரார்த்தனைகளும் வணங்க வேண்டிய தெய்வமும்:

பெருமாள் கோவிலில் நெய் தீபம் ஏற்றுவதும், விஷ்ணு சகஸ்ரநாமம், ஓம் நமோ நாராயணா என்று சொல்லி கொண்டிருப்பதும், கோயிலில் உழவாரப்பணி போன்றவை செய்வதும் நலம்தரும், அன்னதானம் வஸ்திரதானம், குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்வதும், முடவர்களுக்குசரீரஒத்தாசைசெய்வதும்நன்மையைதரும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.