மிதுன ராசி

மிதுன ராசி (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய) :

30ம் தேதிக்கு பின் ராசிநாதன் பலன் தருவார், தற்போது சுக்ரன் ஒருவர் மட்டும் பலன் தருகிறார் குரு பார்வையால் பலன் உண்டாகிறது. அஷ்டம சனி கஷ்டத்தை கொடுக்காது எனினும் பார்வை நன்மை உண்டாகும், பெரிய நற்பலன்கள் இந்த மாதம் இல்லை எனினும் ஓரளவு செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும். உழைக்கும் வர்க்கம் கடுமையான முயற்சிகள் எடுத்த பின் பலனை அடையும், தொழில்முனைவோர் ஓரளவு லாபத்தை பெறுவர். மாத கடைசியில் செவ்வாயும் நன்மை செய்வதால் பணபுழக்கம் என்பது மாத மத்திக்கு மேல் இருக்கும். முயற்சிகளும் பெரிய வெற்றியை தராது, எதிலும் நிதான போக்கை கடைபிடிக்க வேண்டும், பணத்தை செலவு செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும், சிக்கணம் தேவை, கடன் வாங்காமல் இருக்க வேண்டும், ஆடம்பர செலவுகளுக்கு ஏற்ற காலம் இல்லை இது. உத்தியோகத்தில் அல்லது சொந்த தொழிலில் கூட மற்றவர்களுடன் அனுசரித்து போவது மிக நல்லது, வீண் வாதங்கள் பிரச்சனையை கொடுத்து வம்பில் மாட்டிவிடும். 7ல் கேது வாழ்க்கை துணைவரின் உடல் நலத்தை பாதிக்கும் அதே போல 8ல் சூரியன் குடும்ப உறவுகளின் உடல் ஆரோக்கியத்தை பாதிப்படையச்செய்யும் மற்ற விஷயங்களிலும் நிதானமும் கவனமும் தேவை. பொதுவில் இந்த மாதம் அனைத்து பிரிவினருக்கும் ஓரளவே நன்மைகள் என்று இருப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும்.

சந்திராஷ்டமம்: ஜனவரி 24,25,26

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.