எந்த கிரக பெயர்ச்சியும் நன்மையும் தீமையும் சேர்த்தே தரும். ஆனாலும் எதிர்வரும் ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசி அன்பர்களுக்கு அதிகம் நன்மை தருவதாக அமையும்.
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக எப்படி எப்படியோ முயற்சி செய்தாலும் எல்லா முயற்சியும் தடங்கலானதால், வெறுத்து விரக்தியானவர்கள் தனுசு அன்பர்கள்.
இனி கவலை இல்லை, ராசியில் குருவுடன் இணைந்திருந்த கேது விலகி விருச்சிகம் செல்வதும் ராகு ஆறாமிடத்துக்கு வருவதும் பெருமளவில் நல்ல பலன்களைத் தருமென நிச்சயம் சொல்லலாம்
தனுசு அன்பர்களுக்கு இது வரை இருந்த தடை, போட்டி, பொறாமை இதெல்லாம் இருந்த இடம் தெரியாது மறையும்
வெறுத்தவர்கள், அங்கீகரிக்க மறந்தவர்கள், அங்கீகாரத்தினைத் தட்டிப் பறித்தவர்கள், தேடி வந்து வணங்கும்படி செய்வார் ராகு பகவான்
கழுத்தைப் பிடித்து மூச்சை நெறித்த கடன் தொல்லை விலகும். அதே சமயம் புதிய நிதி உதவிகள் தேடி வரும்
தம்பதிகளுக்கிடையே இருந்த மனத்தாங்கல் , மனஸ்தாபம் விலகி நல்லுறவு நீடிக்க வழி வகை செய்பவராக அருள்பாலிக்கும் ராகு பகவான்
எந்த உறவுகளுக்கும் இடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி நல்லுறவு உருவாகும்
புதிய வாய்ப்புகளை உங்களுக்காக நண்பர்கள் கொண்டு வந்து சேர்ப்பார்கள்
கவனமாக இருக்க வேண்டிய அம்சங்கள் :-
கேது விரைய பாவகத்தில் சஞ்சரிக்கும் தருணம், நல்ல எண்ணங்களை கொண்டு வந்தாலும், ஆன்மீக எண்ணங்களை வளர்த்தாலும் அதை சரியாகக் கையாள்வது முக்கியம் . தேவையில்லாத தானம் , பாத்திரமறியாத பிச்சை போன்ற காரியங்களை செய்ய மனம் தூண்டப்படும். கவனம்
ஆன்மீக நாட்டம் என்பது அளவு கடந்து தூக்கம் தொலைத்தல் போன்ற செயல்களைக் கவனமாகத் தவிர்க்க வேண்டும்
ராகு_கேது_பெயர்ச்சி
#தனுசு
#ஜோதிடம்
முருகனருள் முன்னிற்கும்
சந்திரமௌளீஸ்வரன்.வி
தொடர்பு எண் : 98406-56627 whatsapp also
Email : vcmowleeswaran@gmail.com