ராகு கேது பெயர்ச்சி தொடர் – 3

இரண்டு பதிவுகளிலும் ராகு கேது தொடர்பான astronomy & celestial aritmetic கொஞ்சம் மற்றும் ஒவ்வொரு பதிவிலும் ஒரு ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி பொது பலன்களைப் பார்த்தோம்

இந்தப் பதிவிலும் ராகு கேது தொடர்பான astronomy & celestial aritmetic கொஞ்சம் கவனிக்கலாம்

பூமி சூரியனைச் சுற்றி முடிக்கும் ஒராண்டு காலத்தில் நாம் அதாவது ஜாதகர் சுழற்சியைக் கவனிக்க கிரஹங்களின் நிலை ஒவ்வொரு ராசி மண்டலத்தில் இருப்பதாகத் தெரிகிறது. பூமியில் சுழற்சியும் சந்திரனின் சுழற்சியும் வடதுருவத்தில் கணக்கில் எதிப் புறம் ( anti clock wise ) சுழலுவதால், ராகு கேது எப்போதும் பின்னோக்கிய நகர்வினைச் செய்வதாக நாம் observe செய்கின்றோம்

சூரியனை பூமியில் இருந்து சந்திரன் மறைப்பது சூரிய கிரகணம் என்றும், சந்திரனை சூரியனிலிருந்து பூமி மறைப்பதை சந்திர கிரகணம் என்றும் நாம் அனுசரிக்கின்றோம்

இதில் ஒரு கிரஹணம் நிகழும் வெட்டுப் பாதையும் அதே வெட்டுப் பாதையில் அடுத்த கிரஹணம் நிகழும் சுழற்சி காலத்தினை ராகு கேது பெயர்ச்சியுடன் தொடர்புபடுத்தும் கணக்குகளைக் கவனிக்கலாம்

சந்திரனின் சுழற்சியை மூன்று விதங்களில் கணக்கிடலாம் என சென்ற பதிவில் கவனித்தோம் . அதாவது synodic, draconic, and anomalistic periods. கிரஹணம் ஒரே இடத்தில் நிகழும் கால அளவு இந்த மூன்று கால அளவுகளுடனும் தொடர்பு கொண்டது

தங்களது சுற்றுப் பாதையில் பூமி, சந்திரன், சூரியன் எனும் இந்த மூன்றும் இந்த காலச் சுழற்சியில் மீண்டும் ஒரே இடத்தில் தொடங்குகிறது

ராகு கேது பெயர்ச்சி, அமாவாசை, பௌர்ணமி, கிரஹணங்கள் இவற்றைக் கொண்டு மேலும் விரிவாகவும் எளிமையாகவும் அடுத்த பதிவில் கவனிக்கலாம்

இன்று சிம்ம ராசிக்கான ராகு கேது பொதுப் பலன்களைப் பார்க்கலாம்

ராகு சிம்மத்திற்கு பத்தாமிடமான ரிஷபத்துக்கும், கேது நான்காம் இடமான விருச்சிகத்துக்கும் பெயர்ச்சி ஆகின்றார்

1. தொழில் தொடர்பான ஆயாசம் உண்டாக்கும் நிலையில் இருந்த முயற்சிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் பலன்கள் கிடைக்கும்

2 புதிய முயற்சிகளை துணிச்சலுடன் செய்யும் தெம்பும் ஆதரவும் கிடைக்கும் .. ஆனால் கவனம்

3. புதிய பதவிகள் அதிகாரங்கள் கிடைக்கும் ஆனால் அவற்றை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம்

4. சொத்து நஷ்டம் உருவாகும் காலம் ஆகவே அசையா சொத்துகளின் மீது கவனம் தேவை

5. தாயாரின் உடல் நலம் மோசமாகும் கவனம் தேவை

6 உயர் கல்வி சார்ந்த முயற்சிகளில் அதிகமான தடைகள் உருவாகும் .

7. மனம் திருப்தி இல்லாத நிலையில் தடுமாறும். சிலருக்கு தனிமையே போதும் என உறவுகளிடமிருந்து விலகும் சூழல் உருவாகும்

8. தாய் தந்தை வழி உறவுகளிடம் மனஸ்தாபம், கசப்பு, உருவாகும். சண்டையில் கொண்டு போய் விடும் நிலை வரலாம் கவனம்

9. இதுவரை அனுசரித்துக் கொண்டிருந்த சில முக்கியமான சௌகரியங்கள் திடீரென இல்லை என்ற நிலை கூட உருவாகும்

#ராகு_கேது_பெயர்ச்சி
#சிம்மம்
#ஜோதிடம்

முருகனருள் முன்னிற்கும்

சந்திரமௌளீஸ்வரன்.வி
தொடர்பு எண் : 98406-56627 whatsapp also
Email : vcmowleeswaran@gmail.com

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.