ரிஷப ராசி

ரிஷப ராசி(க்ருத்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதம் முடிய)–50/100

விட்டகுறை தொட்டகுறையாக இந்த 2020 வருடம் முடிய சில பிரச்சனைகள் தொடர்ந்து வரும் சனி பகவான் 9ல் பெயர்ந்தாலும், 8ல் இருக்கும் குரு, கேது கஷ்டத்தை தருவார்கள். இருந்தாலும் சனிபகவான் அருள்பார்வையால் எதையும் சமாளிக்கும் தெம்பு வந்துவிடும். மேலும் முதல் 10 மாதங்கள் தான் இந்த கஷ்டம் அதன் பின் 2 வருடங்களில் நல்ல வளர்ச்சி இருக்கும், பணப்புழக்கம் தாராளம் செல்வ செழிப்பு சேரும். குடும்ப பிரச்சனைகளில் திர்வு கிடைக்கும். தொழில் உத்தியோகம் நல்ல முன்னேற்றம் அடையும். நினைத்தது நடக்க ஆரம்பிக்கும். வீடு வாகன யோகம் எல்லாம் நன்றாக இருக்கும். திருமண நிகழ்ச்சிகள் கைகூடும், குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பொதுவில் இந்த சனி பெயர்ச்சி நன்றாக இருந்தாலும் மற்ற குரு ராகு போன்ற கிரஹங்களின் சஞ்சாரம் முதல் 10 மாதம் தொடர்ந்து கஷ்டத்தையும் கொடுத்தாலும் அடுத்துவரும் காலங்கள் மிகுந்த நன்மையை செய்யும்.

உடல் நலம் ஆரோக்கியம் :

2020 நவம்பர் வரையும் கூட உடல் ரீதியான படுத்தல்கள் இருக்கும், சரியான சிகிச்சையை எடுத்து கொள்ள வேண்டும், பெற்றோர்களின் உடல் நிலையில் பாதிப்பு இருக்கும். 2020 நவம்பருக்கு பின் உடல் உபாதைகள் நீங்கி மருத்துவ செலவுகள் குறைந்து, உடலில் ஒரு தெம்பும் பொலிவும் ஏற்படும்,  நீண்ட கால உபாதைகள் நீங்கிவிடும் 2021க்கு பின் குடும்ப அங்கத்தினர்களின் உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். பொதுவில் முதல் பத்துமாதங்கள் ஏற்கனவே இருக்கின்றா நிலைகள் தொடர்ந்து இருக்கும். நவம்பர் 2020க்கு பின் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

குடும்பம் மற்றும் உறவினர்கள் :

குடும்பத்தை பிரிந்தவர்கள், உறவுகளுடன் மனஸ்தாபம் கொண்டவர்கள் ஜனவரி 2021க்கு மேல் நன்றாக இருக்கும் மனஸ்தாபங்கள் நீங்கும் பிரிந்த உறவுகள் சேரும், உறவினர்கள் எல்லாம் நல்லபடியாக இருப்பார்கள். குருவின் பார்வை ஒற்றுமையை கொண்டு வரும். மேலும் 2021க்கு பின் புதிய உறவுகளும் உண்டாகும், இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பெருகும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். தற்போது 8ல் இருக்கும் குரு, கேதுவால் அடுத்த 10 மாதங்கள் மன கசப்புகள் இருந்து கொண்டிருக்கும். அதேநேரம் குருவின் பார்வை ஓரளவு நல்ல பலனை தரும்.

வேலை/உத்தியோகம்:

அடுத்த 10 மாதம் நவம்பர் 2020 வரை இப்பொழுது இருக்கும் பிரச்சனைகளே தொடரும், சிலருக்கு வேலை பறிபோகும், புதிய வேலை கிடைப்பதில் சங்கடம் இருக்கும். அரசு ஊழியர்கள் கூட வேலை இழப்பை சந்திப்பர் எதிலும் கவனமும் நிதானமும் தேவை, வார்த்தைகளை அளந்து பேசவேண்டும், விட்டுக்கொடுத்து போவதும், புறம்பேசாதிருத்தலும், ஓரளவு நல்ல நிலையை கொடுக்கும், ஒர்க் ப்ரஷர் இருந்து கொண்டிருக்கும். நவம்பர் 2020 முதல் அப்பாடா என்று பெருமூச்சு விடும்படி நிலமைகள் சீரடையும். பதவி உயர்வு சம்பள உயர்வு, விரும்பிய இடமாற்றம், நல்ல வேலை புதிய வேலை என்று எல்லாம் நல்லபடியாக இருக்கும். கோர்ட்டில் வழக்குகள் இருந்தால் அவை சாதகமாகி பண வரவு உண்டாகும். பொதுவில் சனிப்பெயர்ச்சியில் 3 வருடங்களில் முதல் 10 மாதம் சிரமமாய் இருந்தாலும் பின் வரும் காலங்கள் மிக நன்றாகவும் வளர்ச்சிப்பாதையில் செல்லும்படியும் இருக்கும்.

தொழிலதிபர்கள் :

கவனமாய் இருக்க வேண்டிய காலங்கள் நவம்பர் 2020 வரை, வழக்குகளில் சிக்கலாம், தொழில் வளர்ச்சியில் பின்னடைவு தொழிலாளர்களால் தொல்லை, வருமான இழப்பு, கணக்கு வழக்குகளில் சரி இல்லாமை, அரசாங்க தொந்தரவுகள், போட்டிகள் உடன் கூட்டாளியால் தொல்லை என்றும் மன அழுத்தம் உண்டாகவும் வாய்ப்பு, புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை தள்ளிப்போடுவது நல்லது. நவம்பர் 2020 முதல் முன்னேற்றம், புதிய தொழில் விஸ்தரிப்பு, பெண் பங்குதாரர்களால் வருமான பெருக்கம், தொழில் கூட்டாளிகள் ஒற்றுமை,எதிரிகள் விலகுதல், வியபாரம் பெருகுதல், அதிக பண வரவு அரசங்க அனுகூலம், வங்கி கடன் எளிதில் கிடைத்தல் என்று மிக நன்றாகவே இருக்கும். லாபம் அதிகரிக்கும்.

மாணவர்கள் :

2021,2022,2023 ஆண்டுகள் சிறப்பாக இருக்கும். வரும் நவம்பர் 2020 வரை குருபகவான் கேதுவுடன் சேர்ந்து 8ல் இருப்பதால் சனிபெயர்ச்சி நடந்தாலும் பெரிய முன்னேற்றம் என்பது இல்லாமல் இருக்கும். படிப்பில் தடை , வெளிநாட்டு படிப்பு கனவு நிறைவேறுதல் தள்ளி போகுதல், மந்த நிலை, முன் யோசனை இல்லாதிருத்தல், தவறான நட்புகள் என்று அவஸ்தை இருக்கும், பெற்றோர், ஆசிரியர் அறிவுரை தேவை இக்கணம், நவம்பர் 2020க்கு பின் நல்ல முன்னேற்றம் விரும்பிய பாடம், கல்லூரி கிடைத்தல், வெளிநாட்டு படிப்பு கனவு நிறைவேறுதல், எல்லோருடைய பாராட்டையும் பெறுதல், அதிக மதிப்பெண்களை பெறுதல் என்று நன்றாகவே இருக்கும்.

கலைஞர்கள் /அரசியல்வாதிகள் / விவசாயிகள்:

நவம்பர் 2020 வரை அதிக சவால்களை சமாளிக்க நேரிடும். கலைஞர்கள் எதிலும் கவனம் தேவை வாய்ப்புகள் நழுவிப்போகலாம், நஷ்டம் ஏற்படலாம் பண கஷ்டம் உருவாகலாம், படங்கள் தோல்வி அடையலாம், அடுத்த பத்து மாதங்களுக்கு பின் நல்ல முன்னேற்றம் புகழ், செல்வாக்கு கூடுதல் பணவரவு பொருளாதார நிலை மேம்படுதல் ரசிகர்களின் அன்பு என்று நன்றாக இருக்கும். அரசியல்வாதிகள் இன்னும் பத்து மாதம் கவனமாய் இருக்க வேண்டும் வீண் விவாதங்களை தவிர்ப்பது, வார்த்தைகளை அளந்து பேசுதல் நல்லது. பெண்களால் தொல்லை வரும். பதவி செல்வாக்கு தொண்டர்களின் விசுவாசம் எல்லாம் நவம்பர் 2020க்கு பின் தான். கட்சி மேலிடத்திலும் செல்வாக்கு உயரும். விவசாயிகள் விளைச்சல் குறைவு, வழக்குகளில் தேக்கம், கால்நடையால் நஷ்டம் என்று நவம்பர் 2020 வரை இருக்கும். இந்த கால கட்டத்தில் குடும்பத்தில் சிக்கல்களும் உண்டாகும் பொறுமை நிதானம் தேவை, அடுத்த பத்து மாதங்களுக்கு பின் நல்ல நிலை உண்டாகும் பொருளாதாரம் மேம்படும்.

பெண்கள்:

பொறுமை, நிதானம், வார்த்தைகளை அளந்து பேசுதல் விட்டுக்கொடுத்து செல்லுதல் என்று வரும் நவம்பர் 2020 வரை இருந்தால் பெரிய கஷ்டங்கள் இருக்காது. அனைத்து பிரிவு மகளிருக்கும் வரும் பத்து மாதங்கள் மிகுந்த சிரமங்களை கொடுத்து கொண்டிருக்கும், கவனம் தேவை, நவம்பர் 2020க்கு பின் நல்ல நிலை உண்டாகி மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும். நினைத்தது நிறைவேறும், குடும்பத்தில் குதூகலம் இருக்கும். செல்வ வளம் உண்டாகும். பொதுவில் இந்த சனிப்பெயர்ச்சி முதல் பத்து மாதங்கள்களுக்கு சிரமங்களையும் அதன் பின் நல்ல முன்னேற்றத்தையும் கொடுக்கும்.

ப்ரார்த்தனைகளும் வணங்க வேண்டிய தெய்வமும்:

சிவநாமம் சொல்லுதல், சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுதல், திங்கள்கிழமைகளில் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்தல், அன்னதானங்கள் செய்தல், முடியாதவர்கள் முதியோர்களுக்கு சரீர ஒத்தாசை செய்தல் போன்றவை நல்ல பலனை தரும்.

About Author