கிட்டதட்ட இரண்டு வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ் அப் பே விரைவில் வர இருக்கிறது. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(NPCI) இதற்கான அனுமதியை வழங்கியள்ளது. 2018ல் ரிசர்வ் பேங்கில் இதற்கான அனுமதியை வாட்ஸ் அப் கேட்டது. அப்பொழுதைக்கு சோதனை செய்ய மட்டுமே அனுமதித்தது. இதற்கு முக்கிய காரணம் வாட்ஸ் அப் சர்வர்கள் இந்தியாவில் இல்லாததே. பலமுறை அவர்கள் முயற்சித்தும் இந்தியாவில் சர்வர் இல்லாத காரணத்தால் இதற்கு ரிசர்வ் பேங்க் அனுமதி மறுத்து வந்தது. சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் இதற்கு ஒத்துக்கொண்டதை அடுத்து ரிசர்வ் வங்கியும் NPCIயும் அனுமதி வழங்கி உள்ளன.
அக்டோபர் 2019ல் இந்த வசதியை வழங்க முக்கியமான மூன்றாம் நபர் தணிக்கை செய்யப்பட்டது. பேமெண்ட் வசதி வழங்க தேவையான எல்லா பாதுகாப்பு வசதிகளும் உள்ளது என அவர்கள் சான்றிதழ் அளித்ததை தொடர்ந்து இப்பொழுது வாட்ஸப் நிறுவனத்திற்கு அனுமதி வந்துள்ளது.
அனைத்து வாட்ஸப் பயனர்களுக்கும் ஒரே சமயத்தில் இந்த வசதி வராது. படிப்படியாக அனைவருக்கும் இந்த வசதி அளிக்கப்படும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஏற்கனவே பல பயனர்கள் சோதனை செய்ய பீட்டா வசதி பெற்று இருப்பர். உங்கள் வாட்ஸப் செயலியை தொடர்ந்து அப்டேட் செய்யுங்கள். விரைவில் உங்களுக்கு இந்த வசதி வரலாம். இனி வாட்ஸப் பே கூகிள் பே ,பே டிஎம், போன் பே போன்றவற்றிற்கு போட்டியாக விளங்கும் என் நம்பலாம்.