அக்டோபர் 29 ராசிபலன்

அக்டோபர் 29 ராசிபலன்

🕉️மேஷம்
அக்டோபர் 29 ராசிபலன்
ஐப்பசி 13 – வியாழன்

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற சஞ்சலமான எண்ணங்களால் நெருங்கிய நபர்களை இழக்க நேரிடலாம். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். முக்கியமான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். உத்தியோகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ளும்போது கோப்புகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
பரணி : தனவரவுகள் கிடைக்கும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.


🕉️ரிஷபம்
அக்டோபர் 29 ராசிபலன்
ஐப்பசி 13 – வியாழன்

வேள்விகளில் கலந்துக்கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புத்திக்கூர்மைகள் வெளிப்படும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். வாரிசுகளின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : ஆசிகள் கிடைக்கும்.
ரோகிணி : சுபவிரயங்கள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.


🕉️மிதுனம்
அக்டோபர் 29 ராசிபலன்
ஐப்பசி 13 – வியாழன்
மனதில் ஆன்மிக நாட்டம் உண்டாகும். செய்யும் செயல்களால் பாராட்டப்படுவீர்கள். நினைவுத்திறனில் மந்தத்தன்மையால் காலதாமதம் உண்டாகும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : பாராட்டுகள் கிடைக்கும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.

புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

🕉️கடகம்
அக்டோபர் 29, 2020
ஐப்பசி 13 – வியாழன்
நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூசம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

ஆயில்யம் : மாற்றங்கள் ஏற்படும்.

🕉️சிம்மம்
அக்டோபர் 29, 2020
ஐப்பசி 13 – வியாழன்

எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணைவரிடம் அனுசரித்து செல்லவும். தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : செலவுகள் உண்டாகும்.
பூரம் : காலதாமதம் ஏற்படும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


🕉️கன்னி
அக்டோபர் 29, 2020
ஐப்பசி 13 – வியாழன்

கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளிவட்டார தொடர்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
உத்திரம் : இன்னல்கள் குறையும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️துலாம்
அக்டோபர் 29, 2020
ஐப்பசி 13 – வியாழன்

குடும்பத்தில் பிள்ளைகளுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிலருக்கு உத்தியோகம் தொடர்பாக இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
சுவாதி : பிரச்சனைகள் நீங்கும்.
விசாகம் : புரிதல் ஏற்படும்.


🕉️விருச்சகம்
அக்டோபர் 29, 2020
ஐப்பசி 13 – வியாழன்

குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளின் வழியில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : சுபகாரியங்கள் கைகூடும்.
அனுஷம் : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
கேட்டை : உயர்வான நாள்.


🕉️தனுசு
அக்டோபர் 29, 2020
ஐப்பசி 13 – வியாழன்

தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை அளிக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை மதிப்பார்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். கலைப்பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மூலம் : முயற்சிகள் ஈடேறும்.
பூராடம் : மதிப்புகள் உயரும்.
உத்திராடம் : துரிதம் உண்டாகும்.


🕉️மகரம்
அக்டோபர் 29, 2020
ஐப்பசி 13 – வியாழன்

துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : முன்னேற்றமான நாள்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.


🕉️கும்பம்
அக்டோபர் 29, 2020
ஐப்பசி 13 – வியாழன்

வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். வீடு மற்றும் வாகனங்களை சீர் செய்வீர்கள். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அவிட்டம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
சதயம் : வெற்றி கிடைக்கும்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.


🕉️மீனம்
அக்டோபர் 29, 2020
ஐப்பசி 13 – வியாழன்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய வீடு கட்டுவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : ஒற்றுமை அதிகரிக்கும்.

About Author