🕉️மேஷம்*
ஜூன் 23, 2020
ஆனி 09 – செவ்வாய்
குடும்பத்தினரிடையே உங்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பு கூடும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தாய்வழி உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வழக்கு சம்பந்தமான முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அஸ்வினி : மதிப்பு கூடும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.
🕉️ரிஷபம்
ஜூன் 23, 2020
ஆனி 09 – செவ்வாய்
எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவுகளால் சுபச்செய்திகள் உண்டாகும். முயற்சிக்கேற்ற பலன்கள் சாதகமான அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.
ரோகிணி : சிந்தனைகள் மேலோங்கும்.
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
🕉️மிதுனம்
ஜூன் 23, 2020
ஆனி 09 – செவ்வாய்
தொழில் சம்பந்தமான பயணங்கள் இலாபகரமாக அமையும். வெளியூர் பணிகளால் ஆதரவும், அறிமுகமும் கிடைக்கும். நிர்வாகம் தொடர்பான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : இலாபகரமான நாள்.
திருவாதிரை : அறிமுகமும் கிடைக்கும்.
புனர்பூசம் : சிந்தனைகள் மேலோங்கும்.
🕉️கடகம்
ஜூன் 23, 2020
ஆனி 09 – செவ்வாய்
உறவினர்கள், நண்பர்களுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தாமதப்பட்ட செயல்கள் கைகூடி வரும். செயல்பாடுகளின் தன்மையை அறிந்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : விவாதங்கள் தோன்றும்.
பூசம் : ஆசைகள் நிறைவேறும்.
ஆயில்யம் : காரியசித்தி உண்டாகும்.
🕉️சிம்மம்
ஜூன் 23, 2020
ஆனி 09 – செவ்வாய்
வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமான சூழல் உண்டாகும். பழைய கடன்களை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாரிசுகளின் மூலம் சுபவிரயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : மாற்றம் உண்டாகும்.
உத்திரம் : விரயம் ஏற்படும்.
🕉️கன்னி
ஜூன் 23, 2020
ஆனி 09 – செவ்வாய்
வியாபாரத்தில் புதியவர்களின் தொடர்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். தொழிலில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : புதிய நட்பு கிடைக்கும்.
அஸ்தம் : நிதானம் வேண்டும்.
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
🕉️துலாம்
ஜூன் 23, 2020
ஆனி 09 – செவ்வாய்
பயணங்களால் நன்மை உண்டாகும். உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும். வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : நன்மை உண்டாகும்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.
🕉️விருச்சகம்
ஜூன் 23, 2020
ஆனி 09 – செவ்வாய்
உத்தியோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : பொறுப்புகள் உயரும்.
அனுஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
கேட்டை : திறமைகள் வெளிப்படும்.
🕉️தனுசு
ஜூன் 23, 2020
ஆனி 09 – செவ்வாய்
புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சூழலுக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். மற்றவர்களின் பேச்சுக்களினால் மனவருத்தம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : மந்தநிலை உண்டாகும்.
உத்திராடம் : மனவருத்தம் ஏற்படலாம்.
🕉️மகரம்
ஜூன் 23, 2020
ஆனி 09 – செவ்வாய்
சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். தொழில் சம்பந்தமாக வெளிவட்டார தொடர்புகள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சர்வதேச வணிகம் எதிர்பார்த்த பலன்களை தரும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : பிரச்சனைகள் நீங்கும்.
திருவோணம் : பொருளாதாரம் மேம்படும்.
அவிட்டம் : பலன்கள் சாதகமாகும்.
🕉️கும்பம்
ஜூன் 23, 2020
ஆனி 09 – செவ்வாய்
நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். நினைத்த செயல்களில் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : வெற்றி உண்டாகும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
🕉️மீனம்
ஜூன் 23, 2020
ஆனி 09 – செவ்வாய்
எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். பிள்ளைகளால் அலைச்சல்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : தனவரவுகள் உண்டாகும்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : ஆதரவு கிடைக்கும்.