*🕉️மேஷம்*
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 19
ஆவணி 03 – புதன்
செயல்பாடுகளின் மூலம் மதிப்புகள் உயரும். பெரியோர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு பதவி உயர்வும், பொறுப்புகளும் கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டாகும். புத்திரர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : மதிப்புகள் உயரும்.
பரணி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
—————————————
*🕉️ரிஷபம்*
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 19
ஆவணி 03 – புதன்
நிதானமான பேச்சுக்களின் மூலம் உறவுகளிடத்தில் மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எந்தவொரு வேலையையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : மனக்கசப்புகள் நீங்கும்.
ரோகிணி : செலவுகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
—————————————
*🕉️மிதுனம்*
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 19
ஆவணி 03 – புதன்
திட்டமிட்ட காரியங்களை எண்ணியபடி செய்து முடிப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும், நன்மையும் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான சிந்தனைகள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : எண்ணங்கள் நிறைவேறும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : மனக்குழப்பங்கள் நீங்கும்.
—————————————
*🕉️கடகம்*
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 19
ஆவணி 03 – புதன்
உங்களின் வார்த்தைக்கு மதிப்புகள் குறைவாக இருக்கும். தம்பதியர்களுக்கிடையே மனம் விட்டு பேசி கொள்வதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பணி சம்பந்தமாக குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : மதிப்புகள் குறைவும்.
பூசம் : நன்மை உண்டாகும்.
ஆயில்யம் : பொருட்களை வாங்குவீர்கள்.
—————————————
*🕉️சிம்மம்*
ஆகஸ்ட் 19, 2020
ஆவணி 03 – புதன்
புத்திக்கூர்மையுடன் செயல்களை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
பூரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
உத்திரம் : இழுபறிகள் நீங்கும்.
—————————————
*🕉️கன்னி*
ஆகஸ்ட் 19, 2020
ஆவணி 03 – புதன்
மாணவர்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனை தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்ப பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் பணிகளில் காலதாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : காலதாமதம் உண்டாகும்.
—————————————
*🕉️துலாம்*
ஆகஸ்ட் 19, 2020
ஆவணி 03 – புதன்
மனோதைரியம் அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகள் காணப்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதிருப்தியுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : மனோதைரியம் அதிகரிக்கும்.
சுவாதி : தனவரவுகள் கிடைக்கும்.
விசாகம் : மனதிருப்தி ஏற்படும்.
—————————————
*🕉️விருச்சகம்*
ஆகஸ்ட் 19, 2020
ஆவணி 03 – புதன்
தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பயணங்களின் மூலம் இலாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் உண்டாகும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
அனுஷம் : இலாபம் கிடைக்கும்.
கேட்டை : கலகலப்பான நாள்.
—————————————
*🕉️தனுசு*
ஆகஸ்ட் 19, 2020
ஆவணி 03 – புதன்
மனதில் புதுவிதமான உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். புண்ணிய தலங்களை தரிசிக்கும் எண்ணங்கள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : உற்சாகமான நாள்.
பூராடம் : ஆதாயம் ஏற்படும்.
உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.
—————————————
*🕉️மகரம்*
ஆகஸ்ட் 19, 2020
ஆவணி 03 – புதன்
எண்ணிய காரியங்களில் காலதாமதமான சூழல் உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பணி தொடர்பாக திருப்தியற்ற எண்ணங்கள் மனதில் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : காலதாமதம் உண்டாகும்.
திருவோணம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.
—————————————
*🕉️கும்பம்*
ஆகஸ்ட் 19, 2020
ஆவணி 03 – புதன்
பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : பெருமை உண்டாகும்.
சதயம் : உறவு மேம்படும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
—————————————
*🕉️மீனம்*
ஆகஸ்ட் 19, 2020
ஆவணி 03 – புதன்
பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நன்மை அளிக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும், அனுகூலம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதுவிதமான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். வாகனப் பயணங்களை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
ரேவதி : கவனம் தேவை.