இன்றைய ராசிபலன் 26 ஜூலை
மேஷம்*
ஆடி 11 – ஞாயிறு
சில மறைமுகமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். சில தேவையற்ற செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகலாம். வாகனம் தொடர்பான பயணங்களில் விழிப்புணர்வு வேண்டும். அரசு தொடர்பான காரியங்களில் கவனத்துடன் செயல்படவும். மனதில் அமைதியற்ற சூழ்நிலைகள் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அஸ்வினி : ஆர்வம் ஏற்படும்.
பரணி : நெருக்கடிகள் உண்டாகலாம்.
கிருத்திகை : கவனத்துடன் செயல்படவும்.
—————————————
*🕉️ரிஷபம்*
இன்றைய ராசிபலன் 26 ஜூலை
ஆடி 11 – ஞாயிறு
பணி சம்பந்தமான வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலை உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்களுக்காக சில காரியங்களை செய்யும்போது அலைச்சல்கள் உண்டாகும். உடல் உபாதைகளில் இருந்து நிவாரணம் அடைவீர்கள். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உலக நிகழ்வுகளின் மூலம் மனதில் சில மாற்றம் உண்டாகும். வாக்குவன்மையால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
ரோகிணி : உபாதைகள் நீங்கும்.
மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
—————————————
*🕉️மிதுனம்*
இன்றைய ராசிபலன் 26 ஜூலை
ஆடி 11 – ஞாயிறு
உத்தியோகம் சம்பந்தமான பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். மனதில் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான நிலையான கொள்கைகளை உருவாக்கிக் கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். நறுமணப் பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : கவனத்துடன் செயல்படவும்.
திருவாதிரை : சுபச்செய்திகள் கிடைக்கும்.
புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.
—————————————
*🕉️கடகம்*
இன்றைய ராசிபலன் 26 ஜூலை
ஆடி 11 – ஞாயிறு
உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கப்பெறுவீர்கள். மாணவர்களுக்கு புதிய பழக்க வழக்கங்கள் உண்டாகும். புதிய கனவு மற்றும் லட்சியத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். அமைதியான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். திட்டமிட்ட சில செயல்களை எண்ணியபடி செய்து முடிப்பீர்கள். மனதில் இருக்கும் சிறு குழப்பங்கள் சிறு தூரப் பயணங்களின் மூலம் தெளிவடையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : வாய்ப்புகள் அமையும்.
ஆயில்யம் : மனத்தெளிவு கிடைக்கும்.
—————————————
*🕉️சிம்மம்*
இன்றைய ராசிபலன் 26 ஜூலை
ஆடி 11 – ஞாயிறு
பொதுக்காரியங்கள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு புதிய விஷயங்களை கற்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தந்தைவழி சொத்துக்கள் மற்றும் உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கப்பெறுவீர்கள். மனைவியுடன் மனதிற்குப் பிடித்த இடத்திற்கு செல்வதற்கான சூழல் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களின் மூலம் பணப்புழக்கம் மேம்படும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : பணப்புழக்கம் மேம்படும்.
—————————————
*🕉️கன்னி*
இன்றைய ராசிபலன் 26 ஜூலை
ஆடி 11 – ஞாயிறு
நீண்ட கால காப்பீட்டின் மூலம் பணவரவு அதிகரிக்கும். தூரத்து உறவினர்களின் மூலம் ஆதாயமான பலன்கள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றம் உண்டாகும். மனைவியிடம் எதிர்பாராத வாதங்கள் தோன்றி மறையும். சகோதரர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகலாம். பங்கு வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சிக்கேற்ப இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
உத்திரம் : பணவரவு அதிகரிக்கும்.
அஸ்தம் : மாற்றம் உண்டாகும்.
சித்திரை : இலாபம் கிடைக்கும்.
—————————————
*🕉️துலாம்*
இன்றைய ராசிபலன் 26 ஜூலை
ஆடி 11 – ஞாயிறு
தொழில் சார்ந்த செயல்பாடுகளில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக வெளியில் கொடுத்திருந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் தோன்றி மறையும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வமும், ஈடுபாடும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
விசாகம் : ஆர்வம் ஏற்படும்.
—————————————
*🕉️விருச்சகம்*
ஜூலை 26, 2020
ஆடி 11 – ஞாயிறு
தாய்மாமன்வழி உறவினர்களின் மூலம் ஆதாயமான பலன்கள் உண்டாகும். வாக்குவாதங்களால் சில ஆரோக்கியமான முடிவுகள் கிடைக்கும். பயணங்களின் போது உடைமைகளில் கவனம் வேண்டும். வேலையாட்கள் தொடர்பான செயல்பாடுகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும். உடல் உழைப்பிற்கேற்ற அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கப்பெறுவீர்கள். சேவைகள் தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : ஆதாயமான நாள்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும்.
—————————————
*🕉️தனுசு*
ஜூலை 26, 2020
ஆடி 11 – ஞாயிறு
குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நீண்ட நாள் கடன் பிரச்சனைகள் குறையும். மனதில் உற்சாகமான எண்ணங்கள் மேம்படும். பணம் சம்பாதிப்பது தொடர்பான புதிய வழிமுறைகளை அறிந்து கொள்வீர்கள். கலையுலக பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். நண்பர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : எண்ணங்கள் மேம்படும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.
—————————————
*🕉️மகரம்*
ஜூலை 26, 2020
ஆடி 11 – ஞாயிறு
கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் இருந்து சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவான எண்ணங்கள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.
திருவோணம் : மேன்மையான நாள்.
அவிட்டம் : சேமிப்பு உயரும்.
—————————————
*🕉️கும்பம்*
ஜூலை 26, 2020
ஆடி 11 – ஞாயிறு
பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இளைய உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சிற்றின்ப செயல்பாடுகளின் மூலம் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகளால் சில அவமானங்கள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமான புதிய முதலீடுகளில் நிதானத்துடன் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.
சதயம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
—————————————
*🕉️மீனம்*
ஜூலை 26, 2020
ஆடி 11 – ஞாயிறு
செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். உறவினர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். நிர்வாகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் நண்பர்களின் ஆதரவும், பெரியோர்களின் வழிகாட்டுதலும் கிடைக்கப்பெறுவீர்கள். இசைக்கருவிகள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : எதிர்ப்புகள் நீங்கும்.
உத்திரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.
ரேவதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.