இன்றைய ராசி பலன் ஜூலை 30

இன்றைய ராசி பலன் ஜூலை 30

மேஷம்

ஆடி 15 – வியாழன்

இளைய உடன்பிறப்புகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். உத்தியோகம் சம்பந்தமான பணிகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு அவ்வப்போது ஏற்பட்டு மறையும். வாகனம் தொடர்பான பயணங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : கவனம் வேண்டும்.

கிருத்திகை : சோர்வு உண்டாகும்.

இன்றைய ராசி பலன் ஜூலை 30 ரிஷபம்
ஆடி 15 – வியாழன்
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொருளாதார மேம்பாட்டிற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். வாரிசுகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : சாதகமாக அமையும்.

மிதுனம்

இன்றைய ராசி பலன் ஜூலை 30
ஆடி 15 – வியாழன்


பழைய நினைவுகளின் மூலம் மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு மறையும். உத்தியோகம் சம்பந்தமான முயற்சிகளும், அது சார்ந்த எண்ணங்களும் மேம்படும். உடல் தோற்றப்பொலிவு அதிகரிக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான செயல்பாடுகள் மேலோங்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான உபாதைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : எண்ணங்கள் மேம்படும்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.

புனர்பூசம் : உபாதைகள் குறையும்.

🕉️கடகம்
இன்றைய ராசி பலன் ஜூலை 30

ஆடி 15 – வியாழன்
எந்தவொரு காரியங்களிலும் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்பட வேண்டும். காது தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். புதிய முயற்சிகளின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். புத்திரர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ஆயில்யம் : அனுகூலமான நாள்.

சிம்மம்
இன்றைய ராசி பலன் ஜூலை 30

ஆடி 15 – வியாழன்
நண்பர்களின் மூலம் தனவரவும், தொழில் சார்ந்த முயற்சிகளுக்கான ஆதரவும் கிடைக்கும். சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களையும், சில ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழ்நிலைகளும் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : முன்னேற்றமான நாள்.

உத்திரம் : முடிவுகள் கிடைக்கும்.

🕉️கன்னி
இன்றைய ராசி பலன் ஜூலை 30

ஆடி 15 – வியாழன்
சுயதொழில் சார்ந்த முயற்சிகளும், வேலையாட்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகளும் குறையும். புதிய முயற்சிகளின் மூலம் சேமிப்புகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டாலும், அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனதில் வித்தியாசமான எண்ணங்களும், செயல்பாடுகளும் தோன்றும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.

சித்திரை : எண்ணங்கள் மேம்படும்.

🕉️துலாம்
ஜூலை 30, 2020
ஆடி 15 – வியாழன்
தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகளும், அதை சார்ந்த நிபுணர்களின் அறிமுகங்களும் கிடைக்கும். சமூக நிகழ்வுகளின் மூலம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். சொந்த ஊர் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு தொடர்பான காரியங்களில் எதிர்பார்த்த சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
சித்திரை : ஆதரவான சூழல் உண்டாகும்.
சுவாதி : அறிமுகங்கள் கிடைக்கும்.

விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.

🕉️விருச்சகம்
ஜூலை 30, 2020
ஆடி 15 – வியாழன்
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகள் குறையும். ஞாபகமறதியால் சில பொருட்களின் விபரங்களை மறப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புத்திரர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி மனம் மகிழ்வீர்கள். மூத்த உடன்பிறப்புகளிடம் சில விஷயங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : தனவரவுகள் கிடைக்கும்.
அனுஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

கேட்டை : வாய்ப்புகள் உண்டாகும்.

🕉️தனுசு
ஜூலை 30, 2020
ஆடி 15 – வியாழன்
கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எதிர்காலம் சார்ந்த சில காரியங்களால் மனதில் பதற்றம் உண்டாகும். மனைவிவழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் இலாபம் உண்டாகும். விலகி சென்ற சில நபர்கள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : முயற்சிகள் ஈடேறும்.

உத்திராடம் : இலாபம் உண்டாகும்.

🕉️மகரம்
ஜூலை 30, 2020
ஆடி 15 – வியாழன்
கடன் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தையிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆசையும், ஆர்வமும் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.

அவிட்டம் : சாதகமான நாள்.

🕉️கும்பம்
ஜூலை 30, 2020
ஆடி 15 – வியாழன்
மாணவர்கள் கல்வியில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பெரியவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். மனை தொடர்பான செயல்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதரவுகள் காலதாமதமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : கவனம் வேண்டும்.
சதயம் : தடைகள் அகலும்.

பூரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.

🕉️மீனம்
ஜூலை 30, 2020
ஆடி 15 – வியாழன்
ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும். வித்தியாசமான செயல்முறைகளும், ஆசைகளும் உண்டாகும். வாகனம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். மத சம்பிரதாயங்கள் பற்றிய சிந்தனைகளும், எண்ணங்களும் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஆசிகளும், வழிகாட்டுதலும் மனதிற்கு ஒரு புதிய தெளிவை உருவாக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
உத்திரட்டாதி : அன்பு அதிகரிக்கும்.
ரேவதி : ஆதாயமான நாள்.

சம்பத் குமார்

இன்றைய பஞ்சாங்கம்

About Author