மேஷம்
ஜனவரி 03, 2021
மார்கழி 19 – ஞாயிறு
வாரிசுகளிடம் கனிவுடன் பழக வேண்டும். மனதில் புதுவிதமான எண்ணங்களால் சஞ்சலம் உண்டாகும். வாகனங்களை கொண்டு தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : கனிவு வேண்டும்
பரணி : சஞ்சலம் உண்டாகும்.
கிருத்திகை : ஒற்றுமை மேலோங்கும்.
ரிஷபம்
ஜனவரி 03, 2021
மார்கழி 19 – ஞாயிறு
கால்நடைகளால் இலாபம் அடைவீர்கள். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் தொழில் அபிவிருத்தி ஏற்படும். ஆபரணச்சேர்க்கைக்கான செயல்திட்டத்தை வகுப்பீர்கள். உடல்நலத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : இலாபம் கிடைக்கும்.
ரோகிணி : அபிவிருத்தியான நாள்.
மிருகசீரிஷம் : நலம் உண்டாகும்.
மிதுனம்
ஜனவரி 03, 2021
மார்கழி 19 – ஞாயிறு
எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். வேலைத்தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் மேம்படும். இளைய சகோதரர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : முயற்சிகள் மேம்படும்.
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
கடகம்
ஜனவரி 03, 2021
மார்கழி 19 – ஞாயிறு
அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபம் அடைவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும். பொருளாதார மேன்மை உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுக்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : இலாபம் அடைவீர்கள்.
ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.
சிம்மம்
ஜனவரி 03, 2021
மார்கழி 19 – ஞாயிறு
மற்றவர்களின் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். மனதில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு கீர்த்தி பெறுவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். வியாபாரத்தில் பொறுப்புணர்ந்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : கருத்துக்களை தவிர்க்கவும்.
பூரம் : கீர்த்தி உண்டாகும்.
உத்திரம் : பொறுப்புணர்ந்து செயல்படவும்.
கன்னி
ஜனவரி 03, 2021
மார்கழி 19 – ஞாயிறு
கலைப்பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். அருள்தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில் சார்ந்த துணிச்சலான முடிவுகளால் மாற்றமான சூழலை உண்டாக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : மனம் மகிழ்வீர்கள்.
அஸ்தம் : வெற்றி கிடைக்கும்.
சித்திரை : மாற்றமான நாள்.
துலாம்
ஜனவரி 03, 2021
மார்கழி 19 – ஞாயிறு
தொழிலில் செல்வாக்கு மற்றும் மேன்மையான சூழல் உண்டாகும். நினைத்த முயற்சிகளில் எண்ணிய வெற்றி உண்டாகும். உறவினர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
சித்திரை : மேன்மையான நாள்.
சுவாதி : மனவருத்தங்கள் நீங்கும்.
விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
விருச்சிகம்
ஜனவரி 03, 2021
மார்கழி 19 – ஞாயிறு
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய அதிரடியான மாற்றங்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
விசாகம் : தெளிவு பிறக்கும்.
அனுஷம் : காரியசித்தி உண்டாகும்.
கேட்டை : இலாபம் அதிகரிக்கும்.
தனுசு
ஜனவரி 03, 2021
மார்கழி 19 – ஞாயிறு
ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் பொருளாதாரம் மேம்படும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் மதிப்புகள் உயரும். நண்பர்களின் மூலம் தொழிலில் ஆதாயம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : பொருளாதாரம் மேம்படும்.
பூராடம் : மதிப்புகள் உயரும்.
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
மகரம்
ஜனவரி 03, 2021
மார்கழி 19 – ஞாயிறு
பழைய நினைவுகளால் மன அமைதியற்ற நிலை ஏற்படும். பயணங்கள் தொடர்பான செயல்களில் நிதானம் வேண்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் எண்ணிய செயல்களை செய்து முடிப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : மன அமைதியற்ற நாள்.
திருவோணம் : நிதானம் வேண்டும்.
அவிட்டம் : காலதாமதம் ஏற்படும்.
கும்பம்
ஜனவரி 03, 2021
மார்கழி 19 – ஞாயிறு
வாக்குவன்மையின் மூலம் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தில் கூட்டுத்தொழில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். பிரபலங்களின் அறிமுகம் சாதகமான பலன்களை அளிக்கும். பூர்வீக சொத்துக்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : அனுகூலம் ஏற்படும்.
சதயம் : பிரச்சனைகள் தீரும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
மீனம்
ஜனவரி 03, 2021
மார்கழி 19 – ஞாயிறு
மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபச்செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். வழக்குகளில் இருந்துவந்த இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலை உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சில ஏற்ற தாழ்வுகள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : விருப்பங்கள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : சுபவிரயங்கள் ஏற்படும்.
ரேவதி : இழுபறிகள் குறையும்.