ஜனவரி 26 ராசி பலன்

🕉️மேஷம்
ஜனவரி 26, 2021
தை 13 – செவ்வாய்

எதையும் சமாளிக்கும் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : திறமைகள் வெளிப்படும்.
பரணி : பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
கிருத்திகை : நிம்மதியான நாள்.


🕉️ரிஷபம்
ஜனவரி 26, 2021
தை 13 – செவ்வாய்

குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வாக்குவன்மையால் பொருள் ஆதாயம் உண்டாகும். விலகி நின்றவர்களின் மூலம் எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : கவலைகள் உண்டாகும்.


🕉️மிதுனம்
ஜனவரி 26, 2021
தை 13 – செவ்வாய்

நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் நன்மை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழக்கவழக்கங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிஷம் : பிரச்சனைகள் தீரும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.


🕉️கடகம்
ஜனவரி 26, 2021
தை 13 – செவ்வாய்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. மற்றவர்களின் மீது அன்பும், புரிதலும் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். மனதில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.
பூசம் : புரிதல் உண்டாகும்.
ஆயில்யம் : தடைகள் நீங்கும்.


🕉️சிம்மம்
ஜனவரி 26, 2021
தை 13 – செவ்வாய்

மற்றவர்களிடம் இருந்து பாராட்டுகள் கிடைக்கும். செயல்திறன் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : பாராட்டுகள் கிடைக்கும்.
பூரம் : அபிவிருத்தியான நாள்.
உத்திரம் : விருப்பங்கள் நிறைவேறும்.


🕉️கன்னி
ஜனவரி 26, 2021
தை 13 – செவ்வாய்

புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாராத சில மாற்றங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பின் மூலம் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். திறமைக்கான பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.
அஸ்தம் : அனுபவம் ஏற்படும்.
சித்திரை : அங்கீகாரம் கிடைக்கும்.


🕉️துலாம்
ஜனவரி 26, 2021
தை 13 – செவ்வாய்

செய்யும் முயற்சிகளில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த நீண்ட நாள் சேமிப்புகள் எதிர்பாராத வகையில் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.
விசாகம் : சேமிப்புகள் கிடைக்கும்.


🕉️விருச்சகம்
ஜனவரி 26, 2021
தை 13 – செவ்வாய்

புதிய செயல்களை செய்யும்போது சிந்தித்து செயல்படவும். மற்றவர்களை நம்பி காரியங்களில் இறங்கும்போது கவனம் வேண்டும். நண்பர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சுரங்கம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். மக்கள் தொடர்பு பணியில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : அலைச்சல்கள் மேம்படும்.


🕉️தனுசு
ஜனவரி 26, 2021
தை 13 – செவ்வாய்

வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழிலில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் ஏற்படும். மற்றவர்கள் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் இருப்பது அவசியமாகும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.


🕉️மகரம்
ஜனவரி 26, 2021
தை 13 – செவ்வாய்

பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த கடன் பிரச்சனைகள் குறையும். மற்றவர்களிடம் கருத்துக்களை கூறும்போது சிந்தித்து செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : பொறுப்புகள் குறையும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.


🕉️கும்பம்
ஜனவரி 26, 2021
தை 13 – செவ்வாய்

கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் பொருளாதார பிரச்சனைகள் குறையும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மேன்மையான பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : நன்மை உண்டாகும்.
சதயம் : பிரச்சனைகள் குறையும்.
பூரட்டாதி : அனுகூலமான நாள்.


🕉️மீனம்
ஜனவரி 26, 2021
தை 13 – செவ்வாய்

எந்த சூழ்நிலைகளையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன்களை தரும். அண்டை, அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : திறமைகள் வெளிப்படும்.


About Author