பத்து பொருத்தங்கள், ஜாதகங்களின் பொருத்தங்கள் இப்படி எல்லாம் பார்த்தவுடன் எல்லாமே நல்லா இருக்கு. வரன் வீட்டாரை பார்த்து பேசி ஓரளவுக்கு செட்டில் ஆயிடும் என நினைக்கும் போது, ஏனோ பிடிக்கவில்லை என்று நின்றுவிடுகிறதே ஏன்?
மக்களின் சத்ரு மாதா பிதா என்பர். இதை மனதில் கொண்டு மேற்கொண்டு படிக்கவும்.
ஒரு பிள்ளையின்/பெண்ணின் திருமணத்துக்கு பெற்றோர் தடையாக இருப்பர் நேரடியாக இல்லாவிடில் மறைமுகமாக அவரின் செயல்பாடுகளால் திருமணம் தடைப்பட்டு போகும்.இன்றைக்கு சில பெற்றோர்கள் தங்கள் எதிர்காலத்தை மட்டுமே சிந்தித்து கொண்டு பிள்ளை / பெண் வருமானத்தை அனுபவிக்க அதற்கு தகுந்தாற்போல் வரனை தேடுகிறார்கள்.இது ஒருபுறம். பிள்ளைக்கு திருமணம் செய்ய வேண்டும். ஆனால் அப்பாவின் / அம்மாவின் செயல்பாடுகள் வரன் வீட்டாருக்கு பிடிக்காமல் போய்விடும்.
அடியேன் பொருத்தம் சொல்லும் போது பெண்வீட்டார் பார்த்தால் பிள்ளையின் தோற்றம் குண நலன் சொல்வேன். பிள்ளை வீட்டாருக்கு வரன் பெண்ணின் தோற்றம் குணாதிசயம் சொல்வேன் இதை அவர்கள் சரிபார்த்தால் சரியாக இருந்தால் கொடுத்த ஜாதகம் சரி என்பது அடியேன் அனுபவம்.
அப்படி ஒரு பெண்வீட்டாருக்கு பிள்ளையை பற்றி சொன்னதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது அவர் கேட்டார் பிள்ளையுடைய அப்பா லூஸ் டாக்கிங்க் என்று சொல்லி இருக்கிறீர்களே இது ஆச்சர்யம் ரொம்பவே கரெக்ட் பிள்ளை நல்லபிள்ளை என தாங்கள் சொன்னாலும் ஏனோ இந்த இடம் வேண்டாம் எனப்படுகிறது என்றார். காரணம் கேட்டேன் பிள்ளையின் அப்பாவுடைய வலைதள லிங்கை கொடுத்தார். பார்த்து அதிர்ந்தேன்
ஒரு படத்தில் வடிவேலு சொல்வாரே, சிம்ரன் அவன் குடும்பத்தை நான் கேவலமா பேசுவேன் என் குடும்பத்தை அவன் படுகேவலா பேசுவான் எங்க ஃப்ரெண்ட்ஷிப் அப்படி என. தமிழில் எவ்வளவு கெட்ட வார்த்தைகள் இருக்குமோ அவ்வளவும் கொட்டி இருந்தார் சரியான பொங்கல். ஆச்சர்யம் அவர் வைத்திருந்தது மஹா பெரியவா படம். மேலும் நாள் கிழமையில் பஞ்சகச்சத்துடன் பூஜை செய்வதையும் போட்டிருந்தார்.
இப்படி பட்ட அப்பா தன் மகளை எந்த கண்ணோட்டத்தோட பார்ப்பார் என பெண்ணின் பெற்றோருக்கு சந்தேகம் வருவது நியாயமே இப்படி பிள்ளையின் எதிர்காலத்துக்கு தடையாக பெற்றவர் அமைகிறார்.
இன்னொரு அனுபவம்.
ஒரு பிள்ளை வீட்டாருக்கு பெண் வரனை பற்றி சொல்லி இருந்தேன் ரொம்ப பிடித்து போய் பெண்வீட்டாரை அனுகினர் ரொம்ப ஆச்சார ஃபேமிலியாக தெரிய சரி பிள்ளை பெண் பேசிக்கட்டும் என ஃபோனில் பேச அந்த பெண் நான் சோஷியல் ட்ரிங்கர், டேட்டிங்க் போவேன் எனக்கு அல்ரெடி 2 பையனுடன் தொடர்பு இருக்கு என அதிரவைக்க பிள்ளை அரண்டு போய் அம்மாவிடம் அந்த பெண் பேசிய ரெக்கார்டை அனுப்ப(கால் ரெக்கார்டு) அவர் பெண்ணின் பெற்றோருக்கு அனுப்ப அவர்களுக்கும் அதிர்ச்சி பெண் எப்பவும் சாதுவாக ஆச்சாரத்தை விடாதிருக்கிறாள் என நினைத்து கொண்டிருந்தனர்.
இது நிஜமா தாங்கள் பெண்ணை பற்றி சொன்னது தவறாக இருக்கே நீங்க சொன்ன தோற்றம் சரி குண நலன்கள் மாறி இருக்கே என்றனர். அடியேன் அவர்களிடம் கடைசியாக ஒன்று சொல்லி இருக்கிறேன் பெண் சம்மதித்தால் அமைந்து விடும் என இப்பவும் சொல்றேன் அந்த பெண் நல்ல பெண் திருமணத்தை தவிர்க்க அப்படி சொல்லி இருப்பாள் போலும் விஜாரியுங்கள் என சொல்ல
காரணம் தெரிந்தது பெற்றோர் அவரை சுதந்திரமாக விட்டது இல்லை, மேலும் அவர் திருமணம் இப்பொழுது வேண்டாம் என சொல்ல பெற்றோர் அவளை மிரட்டி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து இருக்கின்றனர் மேலும் அவர்கள் ஒரு கண்டிஷனாக சொல்லாமல் பிள்ளை வீட்டாரிடம் ஒரே பெண் இவளை விட்டால் எங்கள் சாப்பட்டுக்கு வழியில்லை அதுக்கு சம்மதமா என கேட்டும் இருக்கின்றனர் பிள்ளை வீட்டார் அதனால் என்ன கொடுத்துட்டு போகட்டும் என சொல்ல தொடர்ந்த போது இப்படி.
ஆக ஒரு நல்ல குழந்தை தன் தாய் தந்தையரால் திருமண தடை உண்டாக்க படுகிறது. இப்படி சில பெற்றோர்கள் பிள்ளைகளின்/பெண்ணின் திருமணத்தை தடை செய்ய செய்கிறார்கள்.
இன்னும் சில இருக்கு அடுத்த தொடரில்