ஜூன் 14 வைகாசி 31 ராசி பலன்
🕉️மேஷம்
ஜூன் 14, 2021
உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். தவறிப்போன சில பொருட்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : மதிப்புகள் அதிகரிக்கும்.
பரணி : சிக்கல்கள் குறையும்.
கிருத்திகை : வசதிகள் மேம்படும்.
🕉️ரிஷபம்
ஜூன் 14, 2021
மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் குழப்பங்கள் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சொத்துப்பிரிவினைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
🕉️மிதுனம்
ஜூன் 14, 2021
மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். தனம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். காப்பகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும். கணிப்பொறி சார்ந்த பணிகளில் புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
திருவாதிரை : நன்மையான நாள்.
புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
🕉️கடகம்
ஜூன் 14, 2021
உத்தியோகம் தொடர்பான பணிகளில் புரிதல் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் தற்பெருமை பேசுவதை குறைத்துக்கொள்ளவும். தந்திரமான செயல்களின் மூலம் மனதில் இருக்கக்கூடிய விருப்பங்களை செய்து முடிப்பீர்கள். பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்களை அலைச்சலுக்கு பின்பு செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீல நிறம்
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.
பூசம் : தற்பெருமையை தவிர்க்கவும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.
🕉️சிம்மம்
ஜூன் 14, 2021
ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எதிர்பாராத செலவுகளின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மகம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூரம் : ஆரோக்கியம் மேம்படும்.
உத்திரம் : அனுபவம் கிடைக்கும்.
🕉️கன்னி
ஜூன் 14, 2021
நண்பர்களின் வருகையின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். போட்டிகளில் வெற்றி பெற்று மனம் மகிழ்வீர்கள். சபை தொடர்பான பணிகளில் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
🕉️துலாம்
ஜூன் 14, 2021
உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பெற்றோர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மருத்துவம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கால்நடைகள் வளர்ப்பு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.
சுவாதி : லாபம் மேம்படும்.
விசாகம் : ஆர்வம் உண்டாகும்.
🕉️விருச்சகம்
ஜூன் 14, 2021
செய்கின்ற காரியங்களின் தன்மைகளை அறிந்து செய்வது நம்பிக்கையும், செல்வாக்கும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவருடன் மேற்கொள்ளும் சிறு தூர பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்காக வாய்ப்புகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : முன்னேற்றம் ஏற்படும்.
🕉️தனுசு
ஜூன் 14, 2021
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தானியம் சார்ந்த வியாபாரத்தில் புதிய கொள்முதல்களில் பொறுமை வேண்டும். மற்றவர்கள் கூறும் பேச்சுக்களை நம்பி முடிவுகளை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிப்பதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : விவாதங்களை தவிர்க்கவும்.
பூராடம் : பொறுமை வேண்டும்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
🕉️மகரம்
ஜூன் 14, 2021
வெளிநாடு தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். விவாதங்களின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். நிர்வாகம் தொடர்பான மாற்றங்களில் உடனிருப்பவர்களின் ஆலோசனைகளில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : தெளிவு பிறக்கும்.
திருவோணம் : தனவரவுகள் கிடைக்கும்.
அவிட்டம் : இலக்குகள் உண்டாகும்.
🕉️கும்பம்
ஜூன் 14, 2021
கால் பாதங்கள் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதில் வைராக்கிய சிந்தனைகள் மேம்படும். மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. மனதிற்கு விரும்பிய செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். செய்யும் காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : இன்னல்கள் குறையும்.
சதயம் : விருப்பங்கள் நிறைவேறும்.
பூரட்டாதி : தாமதங்கள் குறையும்.
🕉️மீனம்
ஜூன் 14, 2021
உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். பெருந்தன்மையான குணங்களின் மூலம் அனைவரிடத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மறைமுகமாக இருக்கக்கூடிய சில விஷயங்களை அறிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : வாய்ப்புகள் உண்டாகும்.