ஜூன் 20 ஆனி 06 ராசி பலன்
🗓️20-06-2021⏳
☀️ஞாயிற்றுக்கிழமை☀️
🕉️மேஷம்
ஜூன் 20, 2021
உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் வருமானம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவும், அன்பும் மனதிற்கு புதுவிதமான நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பும், ஆதரவும் கிடைக்கும். பழமையான விஷயங்களின் மீது ஈடுபாடு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அஸ்வினி : கலகலப்பான நாள்.
பரணி : வருமானம் அதிகரிக்கும்.
கிருத்திகை : ஈடுபாடு உண்டாகும்.
🕉️ரிஷபம்
ஜூன் 20, 2021
சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய மனை மற்றும் அதை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். சிறு வியாபாரங்களின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரோகிணி : மாற்றங்கள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
🕉️மிதுனம்
ஜூன் 20, 2021
உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான செலவுகள் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களின் வகையில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். புதிய நபர்களின் நட்பு மற்றும் அறிமுகம் ஏற்படும். கடன் தொடர்பாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : ஆரோக்கியம் மேம்படும்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
🕉️கடகம்
ஜூன் 20, 2021
மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான மாற்றங்களில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுப்பது நல்லது. தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது மேன்மையை ஏற்படுத்தும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வது நன்மையளிக்கும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூசம் : மேன்மையான நாள்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
🕉️சிம்மம்
ஜூன் 20, 2021
உடலளவிலும், மனதளவிலும் புதுவிதமான பொலிவுடனும், தன்னம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் லாபம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மகம் : தன்னம்பிக்கையான நாள்.
பூரம் : லாபம் உண்டாகும்.
உத்திரம் : அனுபவம் கிடைக்கும்.
🕉️கன்னி
ஜூன் 20, 2021
ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த கவலைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். செய்கின்ற முயற்சிகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : தனவரவுகள் கிடைக்கும்.
அஸ்தம் : கவலைகள் குறையும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
🕉️துலாம்
ஜூன் 20, 2021
வியாபார ரீதியான பொருளாதார நெருக்கடிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
விசாகம் : நம்பிக்கை மேம்படும்.
தொடர்புக்கு : 9842177500
🕉️விருச்சிகம்
ஜூன் 20, 2021
உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். பங்காளி வகை உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கை பற்றிய கண்ணோட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : பொறுமை வேண்டும்.
கேட்டை : மாற்றங்கள் உண்டாகும்.
🕉️தனுசு
ஜூன் 20, 2021
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வும், முடிவுகளும் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். வியாபார வளர்ச்சிக்கான உதவிகளும், ஆலோசனைகளும் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மூலம் : மேன்மை உண்டாகும்.
பூராடம் : தீர்வு கிடைக்கும்.
உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.
🕉️மகரம்
ஜூன் 20, 2021
தனவரவுகளின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகள் மற்றும் அதை சார்ந்த எண்ணங்கள் மேம்படும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ற உயர்வு ஏற்படும். புதிய வியாபாரம் தொடர்பான எண்ணங்களும், அதற்கான உதவிகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திராடம் : திருப்தியான நாள்.
திருவோணம் : எண்ணங்கள் மேம்படும்.
அவிட்டம் : உயர்வு உண்டாகும்.
🕉️கும்பம்
ஜூன் 20, 2021
எந்தவொரு செயலையும் மனதைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செய்து முடிப்பீர்கள். புதிய தொழில்நுட்பம் தொடர்பான கருவிகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த சில இடமாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் நிதானம் வேண்டும். அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அவிட்டம்: தன்னம்பிக்கையான நாள்.
சதயம் : இடமாற்றங்கள் உண்டாகும்.
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
🕉️மீனம்
ஜூன் 20, 2021
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளினால் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் காலதாமதம் உண்டாகும். கல்வி தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மற்றவர்களின் மீது உங்களது எண்ணங்களை திணிப்பதை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகளை அளிப்பதில் சிந்தித்து செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : பொறுமை வேண்டும்.
ரேவதி : சிந்தித்து செயல்படவும்.